ரிஸ்க் இல்லாமல் வங்கிகளை விட அதிகம் லாபம் பெற வேண்டும் என்றால்
சிறு சேமிப்பு திட்டங்கள் அல்லது நிதி நிறுவனங்களின் நிரந்தர வைப்புத் தொகை
திட்டங்களின் கீழ் பெறலாம்.
நிதி நிறுவனங்களின் நிரந்தர வைப்புத் தொகை திட்டங்கள் பாதுகாப்பானது இல்லை என்ற அச்சம் உள்ள நிலையில் சிறு சேமிப்புத் திட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது.
இப்போது நாம் முதலீடு செய்வதற்கு ஏற்ற 6 சிறு சேமிப்பு திட்டங்கள் பற்றி இங்குப் பார்க்கலாம்.
வங்கி முதலீடுகளை விட அதிக லாபம் பெற பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் சிறந்த முறையாகும்.
வங்கியில் முதலீடு செய்து லாபம் பெறும் அனைத்திற்கும் வரி செலுத்த வேண்டும் என்ற நிலையில் பிபிஎஃப் திட்டத்திற்கு வரி ஏதும் இல்லை. ஒரு பக்கம் வங்கிகள் 7.5 சதவீதமே வட்டி விகிதம் மட்டுமே அளிக்கும் நிலையில் பிபிஎஃப் திட்டம் மூலம் 8.1 சதவீதம் வரை லாபம் பெறலாம்.
பிரிவு 80சி-இன் கீழ் வருமான வரியில் இருந்து வரி விலக்கைப் பெறலாம். ஆனால் வங்கி முதலீடுகளில் வரி விலக்கு பெற இயலாது.
மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்குக் கொண்டு வரப்பட்ட திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்.
இத்திட்டம் தான் தமிழ் நாட்டில் செல்வ மகள் திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கலாம்.
2015-2016 வரை 9.2 சதவீதம் இருந்த வட்டி விகிதம் ஜூன் 2016 முதல் 8.6 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கும் பிரிவு 80சி-இன் கீழ் வருமான வரியில் இருந்து வரி விலக்கைப் பெறலாம்.
அஞ்சல் துறையில் உள்ள பல சேமிப்புத் திட்டங்களைப் போன்று தேசிய சேமிப்பு பத்திர திட்டமும் ஒன்று.
இந்தத் திட்டத்தில் வங்கிகளை விடச் சிறிது அதிகமான வட்டியைப் பெறலாம். பொதுத் துறை வங்கிகளை விடக் குறைந்தது 0.5 சதவீதம் அதிக வட்டியை இத்திட்டத்தில் பெறலாம்.
8.1 சதவீதம் வரை லாபம் அளிக்கும் இத்திட்டத்திலும் பிரிவு 80சி-இன் கீழ் வருமான வரியில் இருந்து வரி விலக்கைப் பெறலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் அஞ்சல் அலுவலகத்தில் ஒரு பிரபலமான திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் போது 8.6 சதவீதம் வரை வட்டி விகிதம் பெறலாம்.
அதுமட்டும் இல்லாமல் இத்திட்டத்திற்கும் பிரிவு 80சி-இன் கீழ் வருமான வரியில் இருந்து வரி விலக்கைப் பெறலாம்.
இதுவும் அஞ்சல் அலுவலகத்தில் உள்ள ஒரு பிரபல சேமிப்புத் திட்டமே ஆகும். இதிலும் வங்கிகளில் அளிக்கும் 7 முதல் 7.5 சதவீத வட்டி விகிதத்தை விட அதிகமாக 7.8 சதவீதம் வரை லாபம் பெறலாம்.
கிசான் விக்காஸ் பத்ரா திட்டத்தில் வருமான வரி விலக்கு இல்லாததால் பெரும்பாலம் யாரும் இத்திட்டத்தை விரும்புவதில்லை.
ஆனால் இத்திட்டத்தில் 110 மாதங்கள் அதாவது 9 வருடம் 2 மாதங்கள் வரை நீங்கள் முதலீடு செய்திருந்தால் உங்கள் முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் அளிக்கும்.

கருத்துரையிடுக Facebook Disqus