உலகிலேயே அதிகளவில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில்
அமெரிக்காவை முந்திச் சென்று இரண்டாம் இடத்தில் இருக்கும் நாம் சீனாவுடன்
போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறோம்.
அதேபோல இணையதள வங்கி சேவை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முன்பெல்லாம் ஒரு வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்றால் அந்த வங்கி கிளைகளுக்கே சென்று செலுத்த வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இன்று வளர்ந்து வரும் இணையதள உலகில் ஸ்மார்ட்ஃபோன் போன்றவற்றின் வளர்ச்சியாலும் வீட்டில் அமர்ந்த படியே இணைய தள வங்கிகள் மூலமாகவும், வங்கிகளின் செயலிகள் மூலமாகவும் செய்து வருகிறோம்.
இந்த இணையதள வங்கி சேவைகளில் முதன் முதலில் என்இஎஃப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ் என இரண்டு முறைகள் மட்டும் இருந்தது.
ஆனால் இப்போது ஐஎம்பிஎஸ் என்ற முறையையும் வங்கிகள் அறிமுகப்படுத்தி உள்ளன.

எனவே
நாம் என்இஎஃப்டி/ஆர்டிஜிஎஸ்/ஐஎம்பிஎஸ் என்றால் என்ன, இவற்றுக்கான
வித்தியாசங்கள், கட்டணங்கள், பரிவர்த்தனைக்கான நேரங்கள் பற்றி நாம் இங்குப்
பார்ப்போம்.
என்இஎஃப்டி/ஆர்டிஜிஎஸ்/ஐஎம்பிஎஸ் இவை மூன்றும் இணையதள வங்கி சேவை மூலம் பணம் பரிமாற்றம் செய்வதற்கான வழிமுறைகள் ஆகும்.
என்இஎஃப்டி என்றால் தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை என்றும், ஆர்டிஜிஎஸ் என்றால் நடப்பு நேர மொத்த தீர்வு என்றும், ஐஎம்பிஎஸ் உடனடி கொடுப்பனவு சேவை என்று மூன்று வகையாக உள்ளன.
என்இஎஃப்டி முறை வாயிலாகப் பரிவர்த்தனையை காலை 8:00 AM முதல் 4:30 PM வரை செய்ய இயலும். இதில் குறைந்தபட்சம் 1 ரூபாய் முதல் 10 லட்சம் வரை அதிகபட்சமாகப் பரிவர்த்தனை செய்யலாம்.
10,000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்வதற்கு 2.50 ரூபாய்+ சேவை வரியும், 10,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை பரிவத்தனை செய்ய 5 ரூபாய் + சேவை வரியும், 1 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு 15 ரூபாய் + சேவை வரியும், 2 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான பரிவர்த்தனைக்கு 25 ரூபாய் + சேவை வரியும், 5 லட்சம் முதல் 10 லட்சம் வரியிலான பரிவர்த்தனைக்கு 25 ரூபாய் + சேவை வரியும் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன.
ஐஎம்பிஎஸ் - உடனடி கொடுப்பனவு சேவை மூலமாக 24 மணிநேரமும் நீங்கள் பண பரிவத்தனை செய்யலாம். இந்த முறை மூலமாக 1 ரூபாய் முதல் அதிகபட்சம் 2 லட்சம் வரை நீங்கள் பண வர்த்தனை செய்யலாம்.
1 லட்சம் ரூபாய் வரை பணப் பரிவர்த்தனை செய்யும் போது 5 ரூபாய்+சேவை வரியும், 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை பரிவர்த்தனை செய்யும் போது 15 ரூபாய்+சேவை வரியும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஆர்டிஜிஎஸ் அமைப்பு முக்கியமாகப் பெரிய மதிப்பு பரிவர்த்தனைகளை செய்வதற்கானது. ஆர்டிஜிஎஸ் வாயிலாகக் குறைந்தது 2 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை நீங்கள் பரிவர்த்தனை செய்யலாம்.
ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைக்கான நேரம் காலை 8:00 AM முதல் 4:30 PM வரை ஆகும். இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் கட்டணம் 2 லட்சம் முதல் 5 லட்சத்திற்கான பரிவர்த்தனைக்கு 25 ரூபாய் + சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படும். இதுவே 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய்க்கு 50 ரூபாய் + சேவை வரி கட்டணமும் வசூலிக்கப்படும்.
இந்த மூன்று சேவைகளையும் நீங்கள் பயன்படுத்த உங்கள் வங்கி கணக்கில் இணையதள வங்கி சேவை இருக்க வேண்டியது கட்டாயம்.
மேலே கூறிய தரவுகள் அனைத்தும் ஐசிஐசிஐ வங்கியின் பட்டியல் படி உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணங்கள் நீங்கள் பயன்படுத்தும் வங்கி சேவையை பொருத்து மாற வாய்ப்புள்ளது.

கருத்துரையிடுக Facebook Disqus