0

இன்று மனிதர்களைப் பம்பரம் போல் இயங்க அத்தியாவசிய தேவையாக மின்சாரம் இருக்கின்றது. நம் உடலின் இரத்தம், சதை போன்று நம்முடன் எப்பவும் இருப்பது மின்சாரம் மூலம் இயங்கும் கருவிகள் தான்.

மேல் இருக்கும் புகைப்படத்தில் காணப்படுவதைப் போன்று லாப்டாப் அல்லது மொபைல் சார்ஜிங் வையர்களில் சிறிய அளவு உருளை (சிலிண்டர்) இருப்பதை இதற்கு முன் கவனித்துள்ளீர்களா?

தேவையில்லாமல் இங்கு ஏன் இது போன்ற உருளை இருக்கின்றது?
பொதுவாக லாப்டாப், மொபைல் மற்றும் கீபோர்டு வையர்களிலும் இது போன்ற சிறிய உருளை பொருத்தப்பட்டிருக்கும். இவை ஃபெரைட் பீட்ஸ் என அழைக்கப்படுகின்றன.
இந்த ஃபெரைட் பீட்ஸ் மின்சார இழப்பைத் தடுக்கவே பொருத்தப்பட்டுள்ளன. இவை இஎம்ஐ (EMI) ஃபில்டர் மற்றும் சோக் என்றும் அழைக்கப்படுகின்றன.
இந்த உருளைகள் சார்ஜிங்-ஐ சிறப்பானதாக மாற்றி மின் பரிமாற்ற ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.
மின்சாரம் கேபிள் மூலம் பாயும் போது அதிகளவு மின்சார இழப்பு நேரிடலாம், இதனைத் தடுத்து நிறுத்துவதால் ஃபெரைட் பீட்ஸ் கேபிளின் இறுதியில் பொருத்தப்படுகின்றன.
இந்த உருளையில் குறைந்த அளவு ஃபெரைட் செராமிக் இருக்கும், இது உயர் அதிர்வெண் மின்காந்த இரைச்சல்களை இழுத்துக் கொள்ளும்.
பிளாஸ்டிக் மூலம் மூடப்பட்டிருக்கும் ஃபெரைட் பீட்ஸ்-ஐ இரண்டாகப் பிளந்தால் ஃபெரைட் சிலண்டர்கள் இருக்கும். உயர் அதிர்வெண் மின்காந்த இரைச்சல்களை இழுப்பதோடு அவை மற்ற செல்போன் சிக்னல்களின் குறுக்கீடுகளை நிறுத்த முடியும்.

Have you ever noticed this small cylindrical module near the end of your laptop charger?

Yes. I'm talking about the same ugly blob that pops out at the posterior end of the cord.

While you might think it's useless, but computer geeks and technology freaks swear by it, because well.... It's kinda important. 

The cylindrical device is known as a ferrite bead, which is nothing but an inductor (passive electric component) that suppresses high frequency noise in electronic circuits.

The ferrite bead isolates your laptop from electromagnetic noise, either from the waves that are picked up by the wire or from the existing noise in the AC-DC converter or the AC line.
This specific type of electronic choke employs the dissipation of high frequency currents in a ferrite ceramic that helps build high frequency noise suppression devices. These are sometimes called cores, blocks, rings or even EMI filters. 

Though the bead isn't all that necessary in everyday usage, its inclusion helps the laptop pass FCC tests and FCC tests I hear are kinda important.

கருத்துரையிடுக Disqus

 
Top