0


இப்பொழுதெல்லாம் ஒரு தகவலை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்ற வேண்டுமானால் நாம் பெரும்பாலும் பயன்படுத்துவது பென் டிரைவ் தான்.இந்த பென் டிரைவில் வைரஸ் புகுந்துவிடாமல் பார்த்து கொள்வது ஒரு நல்ல காதலியை காப்பாற்றுவது போல கடினமான பணி. வெகு எளிதாக இதனுள் வைரஸ் புகுந்து நமது பைல்களை அழித்துவிடும். அல்லது ஷார்ட்கட் என்று காண்பிக்கும்.


பென் டிரைவை ஃபார்மட் செய்தாலும் இந்த ஷார்ட்கட் வைரஸ் சிலசமயம் போகாது.
நல்ல ஆண்ட்டிவைரஸ் ஆல் கூட இந்த ஷார்ட் கட் வைரஸை கண்டுபிடிக்க முடியாமல் திணறும். அப்படியெனில் இதற்கு என்ன தான் தீர்வு. அதை இப்போது பார்ப்போம்.

பென் டிரைவரை ஓப்பன் செய்தவுடன் இடது ஓரத்தில் shortcut.exe என்று டைப் அடித்தாலே வைரஸ் உள்ள ஷார்ட் கட் தனியாக இடது ஓரத்தில் தெரியும். மேலும் மற்ற பைல்கள் அனைத்தையும் ஹைடன் செய்துவிட்டால் வைரஸ் உள்ள shortcut.exe மட்டும் வெளியே தெரியும்

ஷார்ட் கட் வைரஸை எப்படி அறிவது?
உங்கள் பென் டிரைவரில் புகுந்துள்ள ஷார்ட் கட் வைரஸை ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேர் மூலம் நீக்கலாம். அதற்கு நீங்கள் முதலில் செய்ய வேண்டியது ஸ்டார்ட் பின்னர் மை கம்ப்யூட்டரு சென்று ரிமூவபிள் டிரைவில் ரைட் க்ளிக் செய்தால் ஸ்கேன் ஃபார் வைரஸ் என்ற ஆப்ஷன் வரும். அதன்பின்னர் ஸ்க்ரீனில் இருந்து வரும் குறிப்புகளின்படி செயல்படுங்கள். உங்கள் வைரஸ் பறந்தே போகும்.

சாப்ட்வேர் மூலம் நீக்கலாம்:
கமாண்ட் பிராம்ட் மூலம் ஷார்ட் வைரஸை எளிதில் நீக்கலாம். நாம் முதலில் கூறியது போலவே ஸ்டார்ட் க்ளிக் செய்து cmd என டைப் செய்யுங்கள். cmd மீது ரைட் க்ளிக் செய்தால் 'Run as Administrator' ஐ செலக்ட் செய்து யூஎஸ்பியின் லட்டரை டைப் செய்து எண்டர் பட்டனை தட்டுங்கள். அப்போது மை கம்ப்யூட்டரில் இருந்து யூஎஸ்பி லட்டரை நீங்கள் பெறுவீர்கள். பின்னர் டெலிட் பட்டனை எண்டர் செய்து attrib -s -r -h *.* /s.d/l/ என்று டைப் செய்து எண்டர் தட்டினால் ஓகே.

கமாண்ட் பிராம்ட் மூலம் ஷார்ட் கட் வைரஸை நீக்குங்கள்:
வைரஸை நீக்கியவுடன் உங்கள் பென் டிரைவரை ரீபார்மேட் செய்வது முக்கியம். ஆனால் ரீபார்மேட் செய்வதற்கு முன்னர் உங்கள் டேட்டாக்களை பேக்கப் செய்து கொள்ளுங்கள் ஏனெனில் ரீபார்மேட் செய்தால் அனைத்து டாக்குமெண்ட்களும் அழிந்துவிடும்.

ஃபைல்களை பேக்கப் செய்யுங்கள்:
பென் டிரைவரை ரீபார்மேட் செய்ய ஸ்டார்ட் டைப் செய்து cmd என்று டைப் செய்யுங்கள். பின்னர் தம்ப் டிரைவரில் உள்ள லட்டரை டைப் செய்து எண்டர் தட்ட வேண்டும். பின்னர் q /x [பென் டிரைவ் லட்டர்] டைப் செய்து எண்டர் தட்டவும்.

கருத்துரையிடுக Disqus

 
Top