0

பல லட்சம் முதலீடு செய்து வாங்கும் கார்களை முறையாக பராமரிக்காத பட்சத்தில், அதன் மதிப்பும், பவுசும் குறைந்துவிடும் என்பதோடு, பாதுகாப்பு குறைபாடுகளையும் ஏற்படுத்திவிடும். குறிப்பாக, கார்களின் மதிப்பை கெடுக்கும் விஷயங்களில் துருப்பிடித்தல் மிக முக்கியமானது.

ஆரம்ப நிலையிலையே கவனிக்காவிட்டால் காரின் ஆயுளை இந்த பிரச்னை வெகுவாக குறைத்துவிடும். துருப்பிடித்தலை தடுப்பதற்கு பல வழிமுறைகளும், காஸ்ட்லியான விஷயங்களும் இருந்தால்கூட, சில எளிய பராமரிப்பு முறைகளை வைத்தே, துருப்பிடிக்காமல் தவிர்க்க முடியும். அந்த வழிமுறைகளை தொடர்ந்து காணலாம்.



கோட்டிங் தற்போது வரும் காரின் சேஸீ மற்றும் ஃப்ரேம்கள் துத்தநாக கோட்டிங் செய்யப்பட்டே வருகிறது.
இதனால், சேஸீயில் துருப்பிடிக்கும் வாய்ப்பு குறைவு. ஆனால், வெல்டிங் செய்யப்பட்டிருக்கும் இணைப்பு பகுதிகள் உள்ளிட்ட இதர இடங்களில் துருப்பிடிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
டென்ட் விழுந்தால்...பிற வாகனங்களுடன் உரசும்போது ஏற்படும் கீறல்கள் மற்றும் மோதுவதால் ஏற்படும் டென்ட் உள்ளிட்டவற்றை உடனே கவனம் எடுத்து சரி செய்யவும். டென்ட் உள்ள பாகங்களில் பெயிண்ட் பெயர்ந்து உடனே துருப்பிடிக்கும். எனவே, இன்ஸ்யூரன்ஸ் இருந்தால் யோசிக்காமல் டென்ட் விழுந்த இடத்தையும், கீறல்களை விழுந்த இடத்தையும் சரி செய்துவிடுங்கள்.
கழுவுங்கள்...இரண்டு வாரத்திற்கு ஒருமுறை காரை முழுமையாக கழுவுவது அவசியம். மழை நேரங்களில் சேறு, சகதிகள் அதிகம் இருக்கும்போது வாரத்திற்கு ஒருமுறையாவது கழுவுவது அவசியம். அத்துடன், காரை உலர் துடைப்பான் அல்லது மைக்ரோஃபைபர் துணி கொண்டு சுத்தமாக துடைத்துவிடவும்.
அண்டர்பாடி வாஷ்காரின் கீழ்பகுதியில் உள்ள பாகங்கள் எளிதாக துருப்பிடிக்கும் வாய்ப்பு அதிகம். எனவே, காரின் அடிப்பகுதியையும் வாட்டர் சர்வீஸ் செய்வது அவசியம். பெரும்பாலானோர் காரின் வெளிப்புறத்தை மட்டுமே கழுவுகின்றனர். ஆனால், காரின் அடிப்பகுதியையும் மாதத்திற்கு ஒருமுறையாவது கழுவுவது அவசியம்.
அண்டர்பாடி கோட்டிங்கார் வாங்கும்போதே அண்டர்பாடி கோட்டிங் செய்துவிட்டால், துருப்பிடிக்கும் பிரச்னையிலிருந்து எளிதாக விடுதலை பெறலாம். ரூ.3,500 வரை செலவாகும். ஆனால், காரின் ஆயுளுக்கு இது மிக அவசியம் என்பதை மனதில் வையுங்கள்.
கடற்கரையோர பயன்பாடுகடற்கரையோரம் காரை பயன்படுத்துபவர்கள் காரை அவ்வப்போது காரை கழுவி சுத்தப்படுத்துவது அவசியம். மேலும், வேக்ஸ் கோட்டிங் எனப்படும் பெயிண்ட்டை காப்பதற்கான பாலிஷ் மற்றும் அண்டர்பாடி கோட்டிங் அவசியம் செய்துவிடுங்கள்.
ஸ்பிரேகாரின் மட்கார்டுகள், வெல்டிங் செய்யப்பட்டிருக்கும் பாகங்கள், கதவு இணைப்புகளில் துருப்பிடிப்பதை தவிர்ப்பதற்காகவே ஆன்ட்டி ரஸ்ட் ஸ்பிரே பயன்படுத்தலாம். காரை கழுவி சுத்தப்படுத்தியபின் இந்த திரவத்தை தெளித்துவிடுவதன் மூலமாக துருப்பிடிப்பதை தவிர்க்கலாம். ரூ 300 விலையில் இந்த ஸ்பிரே கிடைக்கின்றது.
இன்டீரியரும் சுத்தம்காரின் வெளிப்புறத்தை மட்டுமல்ல, உட்புறத்தையும் சுத்தமாக பராமரிப்பது அவசியம். காபி, தண்ணீர் போன்றவை கீழே கொட்டாதவாறு பார்த்துக் கொள்வது அவசியம். இவை கொட்டி நீண்ட நாட்கள் படிந்திருக்கும்போது அதன் மூலமாகவும் துருப்பிடிக்கும் வாய்ப்பு அதிகம்.
மூடி வையுங்கள்தண்ணீர் புகாத கோட்டிங் செய்யப்பட்ட தரமான கார் கவரை போட்டு மூடி வைக்கவும். இதனால், காற்றில் உள்ள ஈரப்பதம் மூலமாக காரில் துருப்பிடிப்பதை தவிர்க்க முடியும். மேலும், மழையும், தூசிகளும் படித்து எளிதாக துருப்பிடிக்கும் ஆபத்தையும் தடுக்க முடியும்.
முடிந்தால்...கார் கதவுகள், வெல்டிங் செய்யப்பட்ட இணைப்புகள் மற்றும் காரின் வெளிப்புற பகுதிக்கு விசேஷ கோட்டிங் மற்றும் பேடுகள் கூட மார்க்கெட்டில் கிடைக்கின்றன. இவற்றை தகுந்த பணியாளர்களை கொண்டு செய்து கொண்டால் துருப்பிடிக்கும் பிரச்னையிலிருந்து விடுபடலாம். இதற்கு சற்று கூடுதல் செலவாகும்.
மதிப்புகாரின் மதிப்பை தக்க வைக்க, இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் எளிய வழிமுறைகளை பின்பற்றுங்கள். உங்கள் காரின் ஆயுள் நீடிக்கும் என்பதுடன், மதிப்பும் குறையாது.

Simple Guide To Prevent Rust In Your Car - Extend The Life Of Your Car

After investing a lot of money into buying your car, you will want to maintain it and make sure the money invested is worth it.

There are ways to prevent rusting and avoid damages in your car, this not only helps to keep your car new and clean but helps to maintain the value of your car at the very top.
Here are simple six steps to avoid the rusting of your car.


MaintenanceWash your car once in two weeks and if necessary wash it once in a week if it has been through rough conditions like rain or slush.
WaxingBy waxing your car every three-four months keeps the rust away from your car. It even adds some shine to your car which invariably increases the value of your car.
Keep Your Car Clean Inside OutYour car is not just for transportation sometimes it becomes your home as well and you end eating your favorite chips or even drinking your take away coffee. You might end up leaving those empty packets or cups for days, this will lead to spills and cause rusting.
SaltsIf you are living by the ocean or drive in the winter, there is a lot of salts which can increase the rust in your car. By washing the car regularly will help wash off the salts on your car.
Wash The Underside Of Your CarCleaning should not just be on the outside, it has to come from within as well, especially the underside of your car. Dust, dirt and slush tend to stick to the underside the most and cleaning them as and when required helps prevent rust.
Dry Wipe Your CarAfter a good wash, your car needs some tender car as well. Give it a nice dry rub and try and remove as much as water from the body. By leaving it with water not only helps prevent rust but keeps your looking new and fresh.
Car CoverOne of the essential tips is to cover your car, it minimises the damages if there are any. A branded car cover will even keep away the sunlight to an extent. A car covered will indeed increase the life of your car.

கருத்துரையிடுக Disqus

 
Top