0


டெல்லி: ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் வேலை பார்க்கும் நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் பிஎஃப் சந்தாதார்கள் தங்களது ஓய்வூதியத்தை முடிவு செய்யக்கூடிய வகையில் எளிமைப்படுத்தப்பட்ட யுனிவர்சல் கணக்கு எண் சார்ந்த படிவம் 10D என்ற முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதுநாள் வரை பிஎஃப் சந்தாதார்கள் ஊழியர்கள் ஓய்வூதிய திட்டம் 1995இன் கீழ் ஓய்வூதிய விண்ணப்பத்தை வேலை வழங்கிய நிறுவனத்தின் அத்தாட்சி வாங்கிய பிறகே தங்களது நன்மைகளில் ஏதேனும் திருத்தம் செய்ய இயலும்.
யுனிவர்சல் கணக்கு எண் சார்ந்த படிவம் 10D ஓய்வூதிய கோரிக்கை விண்ணப்பத்தை அறிமுகம் செய்துள்ள ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் அறிக்கையின் படி, ஃபார்ம் 11 படிவம் பயன்படுத்தி தங்களது ஆதார் எண்ணை யுனிவர்சல் கணக்கு எண்ணுடன் சேர்க்கப்பட்டு வேலை செய்யும் நிறுவனத்தால் சரிபார்க்கப்பட்டு இருக்கும் நிலையில் படிவம் 10D-ஐ பயன்படுத்தி உரிமை கோரலாம் என்று கூறியுள்ளது.

இந்த புதிய படிவத்திற்கு வேலை பார்க்கும் நிறுவனத்தின் அத்தாட்சி ஏதும் இல்லாமல் நேரடியாக பிஎஃப் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
இதுவரை ஊழியர் வைப்பு நிதிக்கு 7.34 கோடி யுனிவர்சல் கணக்கு எண் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

58 வயது ஆகிய சந்தாதார்கள் யாரெலாம் 60 வயது வரை தங்களது பிஎஃப் பங்களிப்பை தொடர விரும்புபவர்கள் அவர்களுக்கு புதிய முறை அறிமுகப்படுத்துவதாகவும், அதில் 58 வயது கடந்து பிஎஃப் பங்களிப்பை தொடர விரும்புபவர்களுக்கு தங்களது அசல் ஓய்வூதிய பங்களிப்பில் முதல் ஒரு வருடத்தைக் கடந்த பின்னர் 4 சதவீதம் அதிகமாகவும் இரண்டு வருடம் கடந்து பங்களிப்பவர்களுக்கு 8.16 சதவீதம் உயர்த்தியும் பங்களிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

ஓய்வூதிய திட்டத்தில் 58 வயது ஆகும் போது குறைந்தது 10 வருடங்கள் பிஎஃப் கணக்கில் பங்களிப்பு செலுத்தி வந்திருந்தால் இந்த புதிய முறையைப் பயன்படுத்த இயலும்.

படிவம் 10D-ஐ பதிவிறக்க கிளிக் செய்யவும்

கருத்துரையிடுக Disqus

 
Top