உங்களுக்கு தெரியுமா நீங்கள் நினைக்கும் இடங்களையெல்லாம் கூகுள்
எர்த் மேப்பில் காண முடியாது, ஆம் சில இடங்களில் முற்றிலும் வரம்புகளுக்கு
உட்பட்ட இடங்களாய் இருக்கின்றன. அதுவும் உலகம் முழுவதும் உள்ள அந்த
குறிப்பிட்ட 'இரகசிய தளங்களில்' என்ன இருக்கிறதோ அதை மறைக்கும் பொருட்டு
கூகுள் எர்த் மேப்பில் அவைகள் திருத்தப்பட்டு இருக்கும் அல்லது
இருட்டடிப்பு செய்யப்பட்டு இருக்கும்.
கூகுள் எர்த் மேப்பில்
'தணிக்கை செய்யப்பட்ட' இடங்களில் என்ன இருக்கின்றன..? அவைகள் உலகம்
முழுவதும் பல்வேறு அரசாங்கங்களால் கட்டமைக்கப்பட்ட உயர்மட்ட இரகசிய இராணுவ
தளங்களா..? ஏன் அவைகள் கூகுள் மேப்ஸில் இருந்து தணிக்கை
செய்யப்பட்டுள்ளன..?
ஏன் அவைகள் கூகுளின் வெற்று பார்வையில் இருந்து மறைக்க முயற்சிக்கப்படுகின்றன..?
ஏன்
இந்த கூகுள் சென்சார்...? அது கூகுள் சம்பந்தப்பட்ட ஒன்று என்பதால் அது
கூகுளுக்கும், இருட்டடிப்பு செய்யும் அதிகாரங்களுக்கு மட்டுமே தெரியும்.
அமெரிக்காவின்
ஏரியா 51 போன்ற மிகவும் சர்ச்சைக்குரிய இடங்களெல்லாம் மறைக்கப்படாத போது
இவைகள் எல்லாம் மறைக்கப்படுகிறது என்றால் மாபெரும் சர்ச்சைகள் 'பூசி
மொழுகப்படுகின்றன' என்றே அர்த்தம்.
மறைக்கப்டுவது
என்ன என்று நாம் அறிந்துகொள்ள முடியாவிட்டாலும் கூட, என்னென்ன இடங்கள்
எப்படியெல்லாம் மறைக்கப்படுகிறது என்பதை நம்மால் காண முடியும்.
நேபால் பனி சேணம் (நேபால் ஸ்னோ சாடில் - nepal snow saddle)
22,000
அடி உயரத்தில் உறைந்த பனி மலையின் உச்சியில் ஒரு ரகசிய தளம்
கட்டமைக்கப்பட்டிருந்தால் அதன் பாதுகாப்பு எப்படி பட்டதாய் இருக்கும்.?
கங்டேகா என்பது இமாலய மலைக்குள் மறைந்து கிடந்த ஒரு பனி சேணம், அதன் உச்சியானது 1964-ஆம் ஆண்டு முதன் முறையாக அடையப்பட்டது.
அந்த
குறிப்பிட்ட மலையானது இரண்டாம் உலக யுத்தத்தின் போது நாஸிகளால்
கண்டறியப்பட்டு அங்கு பறக்கும் தட்டு தளம் கண்டுபிடித்து அங்கு ஆய்வுகளை
மேற்கொண்டனர் என்றும் நம்பப்படுகிறது.
கூகுள்
எர்த் மேப்பில் அந்த மலையின் உச்சி பகுதி முழுவதுமே
இருட்டடிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பொதுமக்கள் அவ்விடத்தின் ரகசிய
நுழைவாயிலை கண்டறியக்கூடாது என்பதற்காக மறைக்கப்பட்டிருக்கலாம்.
ஏற்கனவே
அப்பகுதியில் பறக்கும் தட்டு மற்றும் உருண்டை வடிவ அடையாளம் தெரியாத
பறக்கும் தட்டுகளை அடிக்கடி காணப்பட்டத்திற்கான சாட்சிகளும் அதிகம் உண்டு.
தி ப்ரோக்கன் ஏரோ (The Broken Arrow)
பனிப்போரின் உச்சக்கட்டத்தின் போது அமெரிக்காவின் விமானப்படையானது 'க்ரோம் டோம்' என்ற ஒரு அதிமுக்கியமான திட்டத்தை வகுத்தது.
அத்திட்டத்தின்
கீழ் பி52 வகை விமானம் ஒன்று எப்போதுமே அணு ஆயுதத்தை சுமந்தபடி எல்லா
நேரங்களிலும் விண்ணில் பறந்துகொண்டே இருக்க வேண்டும்.
பின்னர்
அமெரிக்காவின் அந்த விபரீதமான திட்டம் பின்வாங்கப்பட்டது, மறுபக்கம் அந்த
விமானம் க்ரீன்லாந்தின் துலே விமானப்படை நிலையத்தில் இருந்து புறப்பட்ட
போது விபத்துக்குள்ளானது.
அந்த
குறிப்பிட்ட இடம் மறைக்கப்படுகிறது, மற்ற இடங்களோடு ஒப்பிடும் போது அந்த
இடம் சற்று மங்கலான முறையில் தெரிகிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டு அந்த
இடம் "உடைந்த அம்பு" என்று அழைக்கப்படுகிறது.
பனிப்பாறையில்
மோதிய அந்த விபத்தின் மூலம் அணு ஆயுதம் சிதைக்கப்பட்டு, வெளியேறி அணுஆயுத
கதிர்வீச்சு அந்த பகுதி முழுக்க பரவி கிடக்கிறது என்றும் நம்பப்படுகிறது.
அங்கிருந்து
எந்த விதமான அணு ஆயுதமும் மீட்கப்படவில்லை என்பதும் அதன் தேடுதல் பணியில்
ஈடுபட்ட குழுவினர் கதிர்வீச்சு விஷ தாக்குதலுக்கு உள்ளாகினர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக Facebook Disqus