0

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏற்கனவே பல மாற்றங்களையும் கிளப்பி விட்டிருக்கிறது என்பதை அறிவோம். குறிப்பாக ஏர்டெல், வோடபோன் , ஐடியா, பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களுக்கு ஒரு கடினமான தொடர்பு துறை போட்டியை உண்டாக்கிவிட்டிருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.

அதனை தொடர்ந்து ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் போன்ற பிரபல தொலைதொடர்பு நிறுவனங்கள் ஜியோவின் தரவு கட்டணத்தின் காரணமாக விலைக்குறைப்பையும், தரவு கட்டண திருத்தங்களையும் நிகழ்த்த தொடங்கினார். அது மட்டும் இல்லாமல் ஏர்டெல் இப்போது அதே கட்டண ரீசார்ஜ் திட்டங்களில் 67 சதவீதத்திற்கும் அதிகமாக தரவை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.



எளிய வழிமுறைகள் :
அப்படியாக இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு என்று அழைக்கப்படும் பார்தி ஏர்டெல் தனது பயனர்க்ளுக்காக வெறும் 29 ரூபாய்க்கு 1ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டாவை என்ற அற்புதமான திட்டத்தை வழங்குகிறது.

வெறும் ரூ.29/-ல் 1ஜிபி ஏர்டெல் டேட்டா பெறுவது எப்படி என்பதை பற்றிய எளிய வழிமுறைகள் இதோ..!

வழிமுறை #01
ஏர்டெல் நிறுவனம் சில சுவாரஸ்யமான நுழைவு நிலை தரவு திட்டங்களை கொண்டுள்ளது. ரூ.29 ரூபாய்க்கு உங்கள் ஏர்டெல் எண் ரீசார்ஜ் செய்யப்பட்டால் 75 எம்பி அளவிலான 3ஜி டேட்டாவை 28 நாட்கள் அனுபவிக்க முடியும் என்றபடியாக இருந்தது.


வழிமுறை #02

இப்போது அதே 29 ரூபாய் தரவு பேக் பயன்படுத்தி இருக்க வேண்டும் ஆனால் நாம் 28 நாட்கள் செல்லுபடியாகும் 1 ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டாவை பெற முடியும்.

வழிமுறை #03
முதலில் நீங்கள் என்னென்ன நன்மைகள் உள்ளதென்று அறியப்படாத ரூ.96 மதிப்புள்ள ஒரு ரீசார்ஜை நிகழ்த்த வேண்டும். மேலும் நீங்கள் அதை காமர்ஸ் அல்லது சாதாரண சில்லறை விற்பனை நிலைய கடைகளில் இருந்தும் ரீசார்ஜ் செய்ய முடியும்.


வழிமுறை #04

ரூ.96/-கு ரீசார்ஜ் செய்த பின்பு உங்கள் ஏர்டெல் எண்ணில் இருந்து *121*111 # என்ற எண்ணிற்கு டயல் செய்யவும்.

வழிமுறை #05

இப்போது ஸ்க்ரீனில் ஒரு பாப்-அப் தோன்றும். அங்கு நீங்கள் ரூ.29/-க்கான பேக்கை தேர்வு செய்ய வேண்டும். உடன் உங்கள் மொபைல் பேலன்ஸ் ஆனது குறைந்தபட்சம் 29 ரூபாய் இருக்க வேண்டும் என்பதும், தேர்வு செய்த பின்பு அது உங்கள் பேலன்ஸில் இருந்து கழிக்கப்பட்டுவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வழிமுறை #06
பின்னர் முதலில் 75எம்பி அளவிலான 3ஜி டேட்டா உன் களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்ற ஆப்ரேட்டர் கன்பர்மேஷன் மெசேஜ் வரும் பின்னர் உங்கள் டேட்டா பேலன்ஸை செக் செய்து பாருங்கள், 30 நாட்கள் செல்லுபடியாகும் 1.1ஜிபி என்ற டேட்டாவை அதில் காண முடியும்.

குறிப்பு :

நீங்கள் ரூ.96 ரீசார்ஜ் நிகழ்த்திய பின்பு கட்டாயமான ரூ.29/-க்கு ரீசார்ஜ் மேற்கொள்ளப் வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top