திருநெல்வேலி அல்லது திநவேலி(என்று உள்ளூர்காரர்களால் அன்போடு
அழைக்கப்படும்) ஒரு சுவாரசியமான நகரம். மதுரை, கோவையைப் போல ஒற்றை நகரமல்ல.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை என்று இரண்டு இரட்டை நகரங்கள் கொண்ட ஒரு
மாநகராட்சி. சரி, இந்த நகரத்தில் என்னென்ன சிறப்புகள் ?
திருநெல்வேலி,
தாமிரபரணியின் மேற்குப் புறத்தில் அமைந்திருக்கிறது. பண்டைக்காலம் தொட்டே
நெல்லை இருந்திருக்கிறது என்கிறார்கள். பாண்டியர்கள், இடைக்கால, பிற்கால
சோழர்கள், திருநெல்வேலி சுல்தான்கள், விஜயநகர அரசு, மதுரை நாயக்கர்கள்,
ஆங்கிலேயர்கள் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் பலரின் ஆட்சியின் கீழ்
இருந்திருக்கிறது.
திருநெல்வேலி, தென்-தமிழ்நாட்டிற்கு ஒரு முக்கிய கல்வி மையம்.
அரசாங்க மருத்துவ கல்லூரி, அரசாங்க பொறியியல் கல்லூரி, சட்டக்கல்லூரி, கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் என்று பல மேற்படிப்பு கல்லூரிகள் இருக்கும் புகழ்பெற்ற நகரம். இது தவிர பல தனியார் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன.

திருநெல்வேலிக்கு மூன்று அடையாளங்கள் : நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோவில், தாமிரபரணி ஆறு, அல்வா.
நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோவில்திருநெல்வேலி டவுனின் முக்கியச் சிறப்பு இந்த புகழ்பெற்ற புராதனக் கோவில்.
நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோவில்புராணங்களின்படி,
கோவிலின் கோபுரங்களை கட்டியவர் ராமக்கோனார், சிறப்புமிக்க இசைத்தூண்களைக்
கட்டியவர் நின்றசீர் நெடுமாறன். கட்டப்பட்ட ஆண்டு 7'ஆம் நூற்றாண்டு.
முதலில் நெல்லையப்பர், காந்திமதி கோபுரங்களுக்கிடையே வெட்டவெளி இருந்தது; அதாவது தனித்தனி கோவில்களாகயிருந்தன.
1647'இல்தான் வடமலையப்பன் என்ற சிவபக்தர் இந்த இரு கோவில்களையும் சங்கிலி மண்டபம் என்று கட்டிடத்தின் வாயிலாக இணைத்திருக்கிறார்
நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோவில்இக்கோவில் தேர், தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமையைப் பெற்றது.
நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோவில்நெல்லையப்பர் கோவில் தெப்பக்குளம்
தாமிரபரணி ஆறுபொதிகை
மலையிலிருந்து உருவாகி பாண தீர்த்தம், கலியாண தீர்த்தம், அகத்தியர்
தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களைக் கடந்து பாபநாசம் வழியாக வருகிறது
தாமிரபரணி.
தாமிரபரணி ஆறுஇன்று நெல்லை வாசிகளிடம் போய் தாமிரபரணி ஆற்றைப் பற்றி கேட்டீர்கள் என்றால் குமுறுவார்கள்.
அந்தளவிற்கு
ஆறு மாசடைந்து விட்டது; தொடர் நகர்மயமாக்கல், மக்கள் தொகை பெருக்கம்,
தொழிற்சாலை கழிவுகள் எல்லாம் தாமிரபரணி ஆற்றில் வந்து முடிகிறது.
குருக்குத்துறையில் குளித்து உடலில் அரிப்பு ஏற்பட்டு மருத்துவரைப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள் இன்று.
Photo Courtesy :Rahuljeswin
இருட்டுக் கடை அல்வா!திருநெல்வேலி டவுனில் நெல்லையப்பர் கோவிலுக்கு சாமி கும்பிட வருகிறார்களோ இல்லையோ இருட்டுக் கடை அல்வா வாங்க வருபவர்கள் பலர்.
மாலையில் கடை திறந்ததும் அலையடித்துக் கொண்டு வரும் கூட்டம் இருக்கிறதே.. நீங்கள் போய்ப் பார்த்தால்தான் தெரியும்!
இருட்டுக் கடை அல்வாமுன்பு
இருட்டுக் கடையில் பார்சல் தரமாட்டார்கள். சுடச்சுட ஒரு துண்டு
வாழையிலையில் ஒரு கவளம் அல்வாத்துண்டை தவழ விடுவார்கள். வாயில் போட்டதும்
வழுக்கிக் கொண்டு தொண்டையில் இறங்கும் போது எழும் சுவையிருக்கிறதே!! ஆஹா!!
இப்போது கால், அரை கிலோ பாக்கெட்டுகள் கிடைக்கின்றன; மாலை கடை திறந்த சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்து விடும்.
குடியிருப்புப் பகுதிஇங்குள்ள
பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை பழமையானது மற்றும் மிகவும் பெயர்
பெற்றதும் கூட. பாரதி, சுதந்திரப் போராட்டத்திற்காக சிறை சென்ற இடம்
பாளையங்கோட்டை.
தற்போது திருநெல்வேலியின் புதிய பேருந்து நிலையம் இங்குள்ள வேய்ந்தான்குளம் பகுதியில் அமைந்துள்ளது.
இதுதவிர, விஞ்ஞான மையம், அருங்காட்சியகம், தேவாலயங்கள், ரிலையன்ஸ் ஹைப்பர் மால், பிக் பஜார் போன்ற மால்கள் இருக்கின்றன.
வண்ணாரப்பேட்டை பைபாஸ் மேம்பாலம்
நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோவில்திருநெல்வேலி டவுனின் முக்கியச் சிறப்பு இந்த புகழ்பெற்ற புராதனக் கோவில்.
முதலில் நெல்லையப்பர், காந்திமதி கோபுரங்களுக்கிடையே வெட்டவெளி இருந்தது; அதாவது தனித்தனி கோவில்களாகயிருந்தன.
1647'இல்தான் வடமலையப்பன் என்ற சிவபக்தர் இந்த இரு கோவில்களையும் சங்கிலி மண்டபம் என்று கட்டிடத்தின் வாயிலாக இணைத்திருக்கிறார்
Photo Courtesy :Rahuljeswin
மாலையில் கடை திறந்ததும் அலையடித்துக் கொண்டு வரும் கூட்டம் இருக்கிறதே.. நீங்கள் போய்ப் பார்த்தால்தான் தெரியும்!
இப்போது கால், அரை கிலோ பாக்கெட்டுகள் கிடைக்கின்றன; மாலை கடை திறந்த சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்து விடும்.
தற்போது திருநெல்வேலியின் புதிய பேருந்து நிலையம் இங்குள்ள வேய்ந்தான்குளம் பகுதியில் அமைந்துள்ளது.
இதுதவிர, விஞ்ஞான மையம், அருங்காட்சியகம், தேவாலயங்கள், ரிலையன்ஸ் ஹைப்பர் மால், பிக் பஜார் போன்ற மால்கள் இருக்கின்றன.
கருத்துரையிடுக Facebook Disqus