0

இன்றைய நவீன மயமான உலகில் மக்களின் உடல்நலம் அதிகளவில் பாதித்து வருகிறது. இந்தப் பாதிப்புகளையும், தக்க ஆலோசனை கூறவும் ஒவ்வொரு மனிதருக்கும் சிறந்த மருத்து நிபுணர் தேவைப்படுகின்றனர். இந்நிலையில், மருத்துவரின் தேவை இன்றைய உலகின் முக்கியமாக உள்ளது.

மருத்துவத் துறை என்றால் உடனே பலர் டாக்டர் என்று மட்டுமே நினைப்பதுண்டு. ஆனால் அதையும் தாண்டி மருத்துவத் துறையில் மிக அதிக வருமானம் வரும் துறைகள் உண்டு. இன்றைய நடைமுறையில் அதிக வருமானம் கிடைக்கும் ஒரு துறை என்றால் மருத்துவத் துறை தான் அனைத்து ஆய்வுகளிலும் முதல் இடத்தில் உள்ளது.

மருத்துவத் துறை மட்டுமின்றி இன்னும் ஒருசில துறைகளிலும் மிகுந்த வருமானம் வருவதுண்டு.

இந்நிலையில் உலகின் மிக அதிக வருமானம் வரும் பத்துத் துறைகள் குறித்துத் தற்போது பார்ப்போமா!! 


ஒரு திறமையான அறுவை சிகிச்சை நிபுணருக்குக் கிடைக்கும் வருமானத்திற்கு எல்லையே இல்லை. அதுவும் அனுபவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒருசில மணி நேரத்தில் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதும் உண்டு.

ஒரு நல்ல அறுவை சிகிச்சை நிபுணருக்கு வருடத்திற்கு $352,000 வருமானம் கிடைப்பதாகக் கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த சர்வேயில் தெரிய வந்துள்ளது. இந்த வருமானம் ஒவ்வொரு ஆண்டுக்கும் 18% வரை உயர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒருவருடைய மனதில் உள்ளதை அப்படியே படிக்கும் திறன் உள்ளவர்கள் இந்த உளவியல் நிபுணர்கள். அறுவை சிகிச்சை நிபுணர்களின் வருமானத்திற்கு எந்த அளவும் குறையாமல் இருக்கும் உளவியல் நிபுணர்களின் ஆண்டு வருமானம் $181,880 என்று கடந்த 2015ஆம் ஆண்டில் சர்வே எடுத்துள்ளனர்.

இந்தத் தொகை அறுவை சிகிச்சை நிபுணர்களின் வருமானத்தில் இருந்து கிட்டத்தட்ட பாதியாக இருந்தாலும் மற்ற தொழில்களில் கிடைக்கும் வருமானத்தில் இருந்து மிகப்பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உளவியல் நிபுணர்களுக்கும் வருடத்திற்கு 18%, பத்து வருடங்களுக்கு ஒருமுறை வருமானம் அதிகரிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நல்ல பொதுநல மருத்துவரின் வருமானம் நிலையான ஏற்றத்துடன் ஒவ்வொரு நாட்டிலும் இருந்து வருகிறது. நாளுக்கு நாள் நோய்கள் அதிகரித்து வரும் உலகில் பொது நல மருத்துவரின் தேவை மிகவும் அத்தியாவசம் ஆனது. ஒரு அனுபவம் வாய்ந்த பொதுநல மருத்துவரின் வருட வருமானம் $180,180 ஆகும்.

இந்தத் தொகை உளவியல் நிபுணரின் வருமானத்துடன் ஒப்பிடும்போது வெறும் $700 மட்டுமே குறைவு. மேற்கண்ட இரண்டு வகைத் தொழில் செய்பவர்களுக்கு இணையாகப் பொது நல மருத்துவரின் வருமானமும் வருடத்திற்கு 18% உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் மிக அதிக வருமானம் பெரும் தொழில் பல இருந்தாலும், ஒரு வெற்றிகரமான நிறுவனத்தைக் கையாள்வது என்பது மிகப்பெரிய வேலை. இந்தச் சவாலான பொறுப்பைச் செய்து வருபவர்கள்தான் சீனியர் லெவல் கார்ப்பரேட் எக்ச்கியூட்டிவ்.

மருத்துவத் துறையில் மிக அதிகமாகச் சம்பாதிக்கும் பல துறையினர்களை அடுத்து மிகப்பெரிய வருமானம் பெறுபவர்கள்தான் இவர்கள். இவர்களுடைய ஆண்டு வருமானம் கடந்த 2015ஆம் ஆண்டு $173,320 என்பதும் இவர்களுடைய ஆண்டு வருமானம் அடுத்தப் பத்து ஆண்டில் 11% உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ உலகில் இன்னொரு முக்கியத் துறை பல் மருத்துவத் துறை. பல் போனால் சொல் போச்சு என்ற ஒரு பழமொழியே உண்டு. அப்படிப்பட்ட பற்களைப் பாதுகாக்கும் தொழில் புரியும் இவர்களுடைய ஆண்டு வருமானம் $146,340 ஆகும்.

ஆனால் அதே நேரத்தில் இவர்களுடைய வருமானம் அடுத்தப் பத்து ஆண்டுகளில் 16% உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இளங்கலை படிப்பு மட்டுமே முடித்த பெட்ரோலிய பொறியாளர்கள் பிற முன்னணி பணி செய்பவர்களுக்கு இணையாக வருமானம் பெற்று வருகின்றனர். பெட்ரோலியம் உலகம் முழுவதிற்கும் மிக முக்கியமான பொருள் என்பதால் அதைக் கண்டுபிடிக்கும் பொறியாளர்களுக்கும் தேவை மிக அதிகம்.

பெட்ரோலிய பொறியாளர்களின் வருட வருமான $130,050 என்றும் இவர்களுடைய வருட வருமானம் அடுத்தப் பத்து வருடங்களில் 26% உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதால் இன்னும் ஒருசில வருடங்களில் மருத்துவத் துறை பணிபுரிபவர்களுக்கு நிகராக இவர்களுடைய வருமானமும் வந்துவிடும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது.

பிளாஸ்டிக் சர்ஜரி என்று சொல்லக்கூடிய முகச்சீரமைப்பாளர்கள் கடவுள் கொடுத்த ஒருவருடைய முகத்தைத் தங்களுடைய அறிவாலும், அனுபவத்தாலும் இன்னொரு உருவமாகவே மாற்றிவிடுவார்கள். விபத்து போன்ற எதிர்பாராத நேரங்களில் முகங்களில் அதிகப்படியான பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கான வரப்பிரசாதம்தான் இவர்களுடைய பணி.
முகச்சீரமைப்பாளர்களின் ஆண்டு வருமான $129,110 ஆக உள்ளது.

 எதிர்காலத்தில் முகச்சீரமைப்பாளர்களின் தேவை நாளுக்கு நாளுக்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இவர்களுடைய வருமானம் அடுத்த 10 ஆண்டுகளில் 16% உயரும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.டி துறையைப் பொறுத்தவரையில் டேட்டா சயிண்டிஸ்ட் பணி என்பது மிக முக்கியமான ஒரு துறை. இந்தப் பணியின் வளர்ச்சி விகிதம் மிக அபாரமானது. புதியதாகக் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உருவாகியுள்ள இந்தப் பணிக்கு மிகப்பெரிய வருமானமும் கிடைத்து வருகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டில் டேட்டா சயிண்டிஸ்ட் பணிக்கு வருடச் சம்பளமாக $124,150 கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிக்கு வருடா வருடம் மதிப்பு கூடி வருகிறது என்பதால் அடுத்தப் பத்து ஆண்டுகளில் இவர்களுடைய வருட வருமானம் சுமார் 15% வரை அதிகரிக்கும்

விமானங்களைக் கட்டுப்படுத்தும் ஏர் டிராபிக் கண்ட்ரோலர் பணி செய்பவர்களின் பணிகள் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாகக் குறைந்து கொண்டே போகிறது. தற்போது இவர்களது வருமானம் ஆண்டுக்கு $122,340 ஆக இருப்பினும் எதிர்காலத்தில் இந்தப் பணியே இல்லாமல் போய்விடும் வாய்ப்பும் உள்ளது.

எனவே இந்தப் பணி செய்பவர்களுக்கு அடுத்த 10 ஆண்டுகளில் 1% மட்டுமே உயர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபார்மாசிஸ்ட் என்று சொல்லப்படும் மருந்தாளுநர் பதவி வகிப்பவர்களுக்கு எப்போதுமே ஒரு நிலையான வருமானம் வருவதுண்டு.

மருத்துவர்களின் தேவைக்கேற்பவும், புதுப்புது நோய்களுக்கு உண்டான மருந்துகளையும் கண்டுபிடிக்கும் நபர்கள் என்பதால் இவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு $120,950 வருமானம் கிடைத்து வருகிறது. மேலும் அடுத்தப் பத்து ஆண்டுகளில் இவர்களின் வருமானம் 14% உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் புள்ளிவிபரங்கள் அனைத்தும் சர்வதேச சந்தைகளை ஆய்வு செய்து திரட்டப்பட்ட சராசரி அளவு.
-

கருத்துரையிடுக Disqus

 
Top