0


ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 7 கருவியை அறிமுகம் செய்து பல்வேறு நாடுகளில் விற்பனை செய்து வருகின்றது அனைவரும் அறிந்ததே. வழக்கம் போல அந்நிறுவனம் உலகளாவிய தனது பயனர்களைக் கவர சில யுக்திகளைப் பின்பற்றி சில புதிய அம்சங்கள் மற்றும் வன்பொருள் மேம்பாடுகளுடன் புதிய கருவியை வெளியிட்டு அதிகளவு லாபத்தையும் ஈட்டி வருகின்றது.


புதிய ஐபோன் 7 கருவியில் பல மாதங்களுக்கு கிசுகிசுக்கப்பட்டதை போல் ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டு வயர்லெஸ் ஹெட்போன் கருவிகளையும் புதிதாக ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்நிலையில் புதிய ஐபோன் 7 கருவியில் ஹெட்போன் ஜாக் செய்ய முடியும் என்ற யூட்யூப் வீடியோ பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


ஏர்பாட்ஸ்

ஆப்பிள் ஐபோன் 7 கருவியில் ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டு அதற்குப் பதில் ஏர்பாட்ஸ் எனும் வயர்லெஸ் ஹெட்போன்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டன. இந்தியாவில் இவற்றின் விற்பனை புதிய ஐபோன் 7 கருவிகளுடன் அக்டோபர் மாதம் துவங்கும்.

ஆப்பிள்


வயர்கள் கொண்ட ஹெட்போன்களுக்கு மாற்றாக வயர்லெஸ் தொழில்நுட்பத்தினை ஆப்பிள் அறிமுகம் செய்திருப்பதோடு புதிய வகையில் வியாபாரமும் செய்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 7

எனினும் புதிய ஐபோன் 7 கருவியில் ஹெட்போன் ஜாக் இல்லாதது பலரையும் பாதித்திருப்பதோடு, புதிய ஆப்பிள் ஏர்பாட் கருவிகளை அதிக விலை கொடுத்து வாங்க முடியாத வருத்தத்திலும் ஆழ்த்தியுள்ளது.

தீர்வு


பல்வேறு ஐபோன் 7 பயனர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் விதமாகவும் அவர்களைக் கிண்டலடிக்கும் விதமாகவும் யூட்யூப் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில் ஒருவர் புத்தம் புதிய ஐபோன் 7 கருவியில் ஓட்டைப் போட்டு வயர் ஹெட்போன் பயன்படுத்துவது போல் அமைக்கப்பட்டுள்ளது.

வீடியோ

புதிய ஐபோன் 7 கருவியில் துளையிடும் கருவி மூலம் 3.5 எம்எம் அளவு ஓட்டைப் போட்டு ஹெட்போன் பயன்படுத்தும் வீடியோவினை இதுவரை சுமார் 12,421,058 பேர் பார்த்துள்ளனர் என்பதோடு இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

சேட்டை


ஐபோன் பிரியர்கள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களைக் கிண்டலடிக்கும் இதுபோன்ற சேட்டை வீடியோக்கள் பலமுறை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. 2014 ஆம் ஆண்டு ஐபோன் கருவியினை மைக்ரோவேவ் மூலம் சார்ஜ் செய்ய முடியும் என வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

வீடியோ


புதிய ஐபோன் 7 கருவியில் துளையிடும் வீடியோவினைபாருங்கள்.

குறிப்பு

இது முற்றிலும் சேட்டை வீடியோ என்பதால் பயனர்கள் யாரும் இதைப் பின்பற்ற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

கருத்துரையிடுக Disqus

 
Top