இரண்டாம் உலகப் போர் கடைசி மாதங்களில் உருவாக்கப்பட்டு, பரிசோதனை
செய்யப்பட்ட ஒரு ஜெர்மனி விமானம் தான் - ஹோர்ட்டன் ஹோ 229, அது ஒரு போர்
விமான சோதனையாக அப்போது தெரிந்திருந்தாலும், அது ஒரு விண்கல சோதனையாகவே
இப்போது தெரிகிறது. அந்த அளவிலான ஒரு முன்னோடித் தன்மையை அது கொண்டுள்ளது
என்பதை இப்போது தான் அறிந்துகொள்ள முடிகிறது.
ஹோர்ட்டன் ஹோ 229 ஆனது, அது உருவாகி இருந்த காலத்தில் இருந்து அடுத்த பல தசாப்தங்களுக்கு (பல பத்தாண்டுகளுக்கு) பின்பு உருவாகி இருக்க வேண்டிய அதிநவீனத்துவம் கொண்டிருந்துள்ளது என்பதே உண்மை. இன்னும் சொல்லப் போனால் ஹோர்ட்டன் ஹோ 229 உருவாக்கமானது ஹிட்லரின் நாஸி படைகள் உண்மையில் 'ஏலியன்கள்' தானோ..? என்ற கேள்வியை எழுப்புகிறது..!
கடந்த
டிசம்பர் மாதம், அமெரிக்க விமானத் தயாரிப்பு நிருவமான நார்த்ரோப்
கிரம்மேன் (கோட்பாட்டளவில்) வருகின்ற நூற்றாண்டு யுத்தப் பிரதேசங்களில்
பறக்கும் வல்லமை கொண்ட ஒரு எதிர்கால போர் விமானத்தின் புரட்சிகர
வடிவமைப்பை வெளியிட்டது.
ஆனால்
அந்த போர் விமான டிசைன் ஆனது ஒரு பறக்கும் தட்டு போல அதாவது விமான
போக்குவரத்து நிபுணர்களின்படி ஒரு 'ப்ளையிங் விங்' அதாவது பாரம்பரியமான
வால் துடுப்பு வடிவமைப்பு போல இருக்கிறது, இன்னும் குறிப்பாக
சொல்லப்போனால் ஹோர்ட்டன் ஹோ 229 போல் இருக்கிறது.
ஆரம்பத்தில்
ரெய்மர் மற்றும் வால்டர் ஹோர்ட்டன் மூலம் வடிவமைக்கப்பட்டு, கோத்தர்
வக்கோன்பாப்ரிக் என்பவரால் கட்டமைக்கப்பட்ட இந்த ஜெர்மன் முன்மாதிரி போர் /
குண்டுதாரி விமானம் ஆனது மிக தாமதமாக இரண்டாம் உலகப் போரில் இறுதி
நாட்களில் தான் உருவாக்கம் பெற்றது.
இவ்வகையான
வடிவமைப்பானது விமானத்தின் அளவை குறைக்கும், மற்றும் ஒரு மென்மையான
வடிவத்தை வழங்கும், முக்கியமாக ரேடார் சமிக்ஞைகளில் சிக்காமல் குதித்து
குறைவான அளவில் கண்டறிய தகுந்த ரகசியத் தன்மை கொண்டிருக்கும்.
இப்படியான
ஒரு அதிநவீனத் தன்மை கொண்ட ஒரு விமானம் இரண்டாம் உலகப் போர் கடைசி
நாட்களில் கட்டப்பட்டது, ஜெர்மனி நாஸி படையால் பறக்கவிடப் பட்டது என்றால்
எப்படி அது சாத்தியமானது..? அதன் பின்புலம் என்ன..? ஏலியன்களா.? அல்லது
திறன்மிக்க எதிர்கால கணிப்புகள் கொண்ட நாஸி விஞ்ஞானிகளா.?
ஹோர்ட்டன்
ஹோ 229 - விமான போக்குவரத்து வரலாற்றில் ஒரு அடிக்குறிப்பு போல்
இருக்கலாம். ஆனால், அதன் காற்றியக்கவியல் இரகசியங்களை (aerodynamic
secrets) இதுவரையிலாக முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே உண்மை.
இன்னும்
சொல்லப் போனால் பறக்க வைக்க முடியாத பண்புகளை கொண்ட ஹோர்ட்டன் ஹோ 229-யை
எப்படி அதன் படைப்பாளிகள் பறக்க வைத்தனர், எப்படி கணிசமான காற்றியக்கவியல்
சவால்களை சமாளித்தனர் என்பதை கண்டறிய நாசாவின் தலைமை விஞ்ஞானி ஒருவர் ஆய்வு
செய்து வருகிறார்.
ப்ளையிங்
விங் வடிவமைப்பு கொண்ட விமானங்கள் நாம் அன்றாடம் பார்க்க முடிந்த ஒரு
விமான வடிவமைப்பு அல்ல அதனை இயக்கம் கொள்ள வைப்பதென்பது நம்பமுடியாதளவு
கடினமாகும்.
வால் பகுதியானது விமானம் நிலையாக வைத்திருக்க உதவும் மற்றும் இரண்டு பக்கங்களிலும் ஆட்டம் கொள்ளாமல் வைத்திருக்க உதவும்.
வால்
அமைப்பை விட்டொழிப்பதின் மூலம் அந்த விமானமானது கட்டுப்படுத்த மிக
கடினமான ஒன்றாக இருக்கும். அப்படியாக இயல்பாகவே பறக்க கடினமான ஒரு
வடிவமைப்பை ஏன் அவர்கள் உருவாக்க வேண்டும்..?
அப்படியான
பறக்கும் விமானம் வேலை செய்ய முடியும் என்றால், அதில் பல நன்மைகள் உண்டு,
வால் பகுதி இல்லாததால் ரேடார்களில் அதிகம் சிக்காது, மென்மையான வடிவம்
விமானத்தின் இழுவை சக்தியை அதிகரிக்கும்.
அப்படியானால்
இலகுவான மற்றும் எரிபொருள் திறன் மிக்கதாய் இருக்க முடியும், சாத்தியமான
ஒரே என்ஜீனை பயன்படுத்தி ஒரு வழக்கமாக வடிவ விமானத்தை விட வேகமாக பறக்க
வைக்க முடியும்.
ஆனால்,
இந்த திறன்கள் எல்லாம் சொல்வதற்க்கும் ஆய்வு காகிதங்களில் எழுதுவதற்க்கும்
சுலபமானதாக இருக்கலாம் ஆனால் நிஜமாக்க மிகவும் கடினம்.
ஆனால்,
அதன் அனைத்து சிக்கல்களையும் ஜெர்மனின் ஹோர்ட்டன் சகோதரர்கள் சாதனைகளாய்
மாற்றியது எப்படி என்பது மிகவும்
சுவாரசியமான ஒரு ரகசியமாகவே இருக்கிறது.
அதுவும்
1930-களில், அதிகாரப்பூர்வமாக முதலாம் உலகப் போரின் வெர்சாய் ஒப்பந்தம்
என்ற அடிப்படையின் கீழ் ஒரு விமானப் படை கொண்டிருக்க ஜெர்மனி தடை
செய்யப்பட்ட காலத்தில் இதெல்லாம் எப்படி சாத்தியம்..?
அதுவும்
ஒரு 1000கிலோ எடையுள்ள வெடிப்பொருட்களை சுமந்து கொண்டு மணிக்கு
1000கிலோமீட்டர் வேகத்தில் 1000 மைல்கள் (1,600 கி.மீ.) வரையிலாக பறக்கும்
வல்லமை கொண்ட ஒரு விமானம் எப்படி சாத்தியம்..?
ஜெர்மனிய
தொழில்துறைகள் மற்றும் நகரங்களை இலக்குகளாய் கொண்டு தாக்குதல் நடத்திய
எதிரி நாடுகளின் விமானங்களை தாக்கி அழிக்க உருவான ஹோ 229 தான் "உலகின்
முதல் ஸ்டீல்த் பாமர் (stealth bomber)" என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற
பல சிக்கலான காரணங்களினால் தான் நாஸிகளுக்கும் ஏலியன்களுக்கும் தொடர்பு
உண்டு என்பது போன்ற பல சதியாலோசனை கோட்பாடுகள் அனுதினமும் கிளம்பிக் கொண்டே
இருக்கின்றனர்.
ஹோர்ட்டன் ஹோ 229 ஆனது, அது உருவாகி இருந்த காலத்தில் இருந்து அடுத்த பல தசாப்தங்களுக்கு (பல பத்தாண்டுகளுக்கு) பின்பு உருவாகி இருக்க வேண்டிய அதிநவீனத்துவம் கொண்டிருந்துள்ளது என்பதே உண்மை. இன்னும் சொல்லப் போனால் ஹோர்ட்டன் ஹோ 229 உருவாக்கமானது ஹிட்லரின் நாஸி படைகள் உண்மையில் 'ஏலியன்கள்' தானோ..? என்ற கேள்வியை எழுப்புகிறது..!
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
வல்லமை :
பாரம்பரியமான வால் துடுப்பு :
இறுதி நாட்களில் :
ரேடார் சமிக்ஞை :
நாஸி படை, ஏலியன்களா..?
காற்றியக்கவியல் இரகசியம் :
சவால் :
நம்பமுடியாத கடினம் :
வால் பகுதி :
விமானத்தின் நிலை :
அதிகம் சிக்காது :
எரிபொருள் திறன் :
நிஜமாக்க மிகவும் கடினம் :
சுவாரசியமான ஒரு ரகசியம் :
சுவாரசியமான ஒரு ரகசியமாகவே இருக்கிறது.
கருத்துரையிடுக Facebook Disqus