வீட்டில் காரை பொத்தி பாதுகாப்பதும், சாலையில் பத்திரமாக எடுத்துச்
செல்வதனால் மட்டும் உங்கள் காரின் ஆயுட்காலம் நீடிக்கும்; பிரச்னையில்லா
பயணத்தை அனுபவிக்க முடியும் என்று கருத முடியாது. இதர சில முக்கிய
விஷயங்களும் கார் ஆயுளை நீடிக்க உதவி செய்யும்.
அவ்வாறு, காரின் ஆயுளை நீட்டிக்கவும், பிரச்னை இல்லா பயணத்திற்கும் சில கூடுதல் விஷயங்களை கார் உரிமையாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அவ்வாறான தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
முதலில் காருடன் கொடுக்கப்படும் உரிமையாளர் கையேட்டினை கூர்ந்து படிக்கவும். அதில், எழும் சந்தேகங்களை குறித்து வைத்துக்கொண்டு மீண்டும் கார் ஷோரூம் செல்லும்போது அங்கிருக்கும் விற்பனை பிரதிநிதி அல்லது மெக்கானிக்கிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இதுதான் முதல் விஷயம்.
அங்கீகரிக்கப்பட்ட
கார் சர்வீஸ் மையங்களில் காரை சர்வீஸ் செய்வது உத்தமம். அதேநேரத்தில்,
அங்கு அனுபவமும், பயிற்சி பெற்ற மெக்கானிக்குகள் இருப்பதை உறுதி செய்து
கொள்ள வேண்டும். மேலும், அந்த சர்வீஸ் மையத்தை பற்றி நண்பர்கள், உறவினர்கள்
அல்லது வாய்ப்பு கிடைத்தால் அந்த சர்வீஸ் மையத்தில் ஏற்கனவே சர்வீஸ்
செய்யும் வாடிக்கையாளர்களிடத்தில் இதுகுறித்து தெரிந்து வைத்துக் கொள்வது
அவசியம். சில அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில் ஆள் பற்றாக்குறையால்
போதிய பயிற்சி இல்லாத மெக்கானிக்குகள் காரை ரிப்பேர் செய்யும்
வாய்ப்புண்டு.
பழைய
காரை பயன்படுத்துபவர்கள் அருகாமையில் உள்ள திறமையான மெக்கானிக்குகளை
தெரிந்து வைத்துக் கொள்வதும் அவசியம். அவர்களிடத்தில் நட்பு பாராட்டி
வைத்திருப்பதன் மூலமாக அவசர சமயத்திலும் உதவுவார்கள். சீக்கிரமாகவும் காரை
சர்வீஸ் செய்து தருவார்கள். அதேநேரத்தில், இவர்கள் விலை குறைவு என்று கூறி
தரமற்ற உதிரிபாகங்களை பரிந்துரை செய்வர். அவர்களுக்கு கமிஷனுக்காக கூட
சிலர் இவ்வாறு செய்யலாம். எனவே, மலிவான விலை கொண்ட தரமற்ற பாகங்களை
பயன்படுத்த வேண்டாம் என்பதை மனதில் வையுயங்கள். அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ்
மையமாக இருந்தாலும், தனியாக ஒர்க்ஷாப் வைத்திருக்கும் மெக்கானிக்காக
இருந்தாலும் திறமையான மெக்கானிக் இருக்கின்றனரா என்று நன்கு தெரிந்து
கொண்டு காரை சர்வீஸ் விடுவது அவசியம்.
புதிய
கார் வாங்கும் பலரும் இந்த டயர் மாற்றும் முறை பற்றி தெரிவதும் இல்லை.
தெரிந்தாலும் அதனை பொருட்படுத்துவதும் இல்லை. ஆனால், டயரின் ஆயுட்காலத்தை
கூட்டுவதற்கு ஒவ்வொரு 5,000 கிமீ முதல் 8,000 கிமீ தூரத்திற்கு ஒருமுறை
டயர்களை சுழற்சி முறையில் மாற்ற வேண்டும். பின்புற டயர்களை குறுக்கு
வாட்டில் முன்புறத்திற்கு மாற்ற வேண்டும். முன்புற டயர்களை நேராக
பின்புறத்திற்கு மாற்றவும். இதுகுறித்து விரிவான தகவல்களுக்கு இங்கே க்ளிக்
செய்க.
காரின்
இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் இருக்கும் குறியீடுகளுடன் கூடிய சிறிய
எச்சரிக்கை விளக்குகளை பற்றி மெக்கானிக் அல்லது கார் விற்பனை
பிரதிநிதியிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். எஞ்சின் பிரச்னை, பேட்டரியில்
ஏற்படும் பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து இவை எச்சரிக்கும். அவற்றை
அலட்சியம் செய்தால் பெரிய பிரச்னையில் கொண்டு போய் விட்டுவிடும். காரின்
எச்சரிக்கை விளக்குகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக்
செய்யவும்.
காரில்
இருக்கும் எஞ்சின் ஆயில், பிரேக் ஆயில், விண்ட்ஷீல்டு வைப்பர் ஆயில், பவர்
ஸ்டீயரிங்கில் பயன்படும் திரவம் உள்ளிட்டவற்றின் அளவு சரியானதாக
இருக்கிறதா என்பதை சோதிப்பது அவசியம். இதற்காக, சர்வீஸ் மையத்தில் நேரத்தை
வீணாக்குவதைவிட கார் உரிமையாளர்களே இதனை எவ்வாறு அளவிடுவது என்பது குறித்து
தெரிந்து வைத்திருப்பது நல்லது. காரை பற்றிய தகவல் அடங்கிய உரிமையாளர்
கையேட்டில் எந்தெந்த இடத்தில் இந்த ஆயில்கள் நிரப்பப்பட்டுள்ளன என்ற விபரம்
இருக்கும்.
ஒவ்வொரு
தயாரிப்பாளரும் குறிப்பிட்ட இடைவெளியில் கார் எஞ்சின் ஆயிலை மாற்றுவதற்கு
பரிந்துரைக்கின்றனர். அதனை சரியான நேரத்தில் செய்துவிட மறக்காதீர்.
அதேநேரத்தில், எஞ்சின் ஆயிலின் அளவு குறைந்திருந்தால், அதற்கு டாப் அப்
செய்தால் போதுமானது. முழுமையாக எடுத்துவிட்டு நிரப்ப வேண்டிய அவசியம்
இல்லை. எனவே, இந்த விஷயத்தில் சற்று உஷாராக இருக்க வேண்டும். சிலர்
தேவையில்லாமல் முழுமையாக ஆயிலை மாற்ற சொல்லி, பாக்கெட்டை பதம்
பார்த்துவிடுவர்.
வார
இறுதி நாட்களில் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன்கள் நிரம்பி வழிவதை கண்டு,
சொந்தமாகவே காரை சுத்தப்படுத்தும் பணிகளை செய்கின்றனர். அவ்வாறு
செய்யும்போது, பாலிஷ் பயன்படுத்தும்போது கவனமாக இருக்கவும். குறிப்பாக,
உட்புறத்தில் உங்களது காரின் இன்டீரியர் தன்மையை பொறுத்து பாலிஷ்களையும்,
சுத்தப்படுத்தும் திரவங்களையும் பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு,
ஃபேப்ரிக் இருக்கை மற்றும் லெதர் இருக்கைகளுக்கு வெவ்வேறு சுத்தப்படுத்தும்
ஸ்பிரே பயன்படுத்த வேண்டும். மாறி பயன்படுத்திவிட்டால் அவை நாளடைவில்
சேதமடைந்து போக வாய்ப்புண்டு.
கார்
டயர்களில் காற்றழுத்தம் சரியாக இருக்கிறதா என்பதை இரண்டு வாரங்களுக்கு
ஒருமுறை அவசியம் சோதித்துவிடுவது அவசியம். மேலும், காரில் ஒரு காற்றழுத்த
சோதனை கருவியையும், காற்று நிரப்பும் கம்ப்ரஷரையும் வாங்கி வைத்துக்
கொள்வது நேர விரயத்தை குறைக்கும். குறைவான விலையில் இவை கிடைக்கின்றன.
நீண்ட
தூர பயணங்கள் செல்லும்போது காரில் ஸ்டெப்னி வீல், பஞ்சர் கிட், முதலுதவி
பெட்டி போன்றவை இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.
அதேபோன்று, டயர் பஞ்சராகிவிட்டால் அதனை அட்லீஸ்ட் கழற்றி
மாற்றுவதற்காகவாவது தெரிந்து வைத்திருப்பது அவசியம். அதேபோன்று, கையில்
உங்களது கார் தயாரிப்பாளரின் அவசர உதவி எண்ணையும் மொபைல்போனில் பதிவு
செய்து வைக்கவும்.
எப்போது
சாலையில் செல்லும்போது சிறந்த ஓட்டுனராக இருக்க முயற்சியுங்கள்.
இல்லையென்றால் வம்பை விலை கொடுத்து, உங்கள் உயிருக்கும், உடைமைக்கும்
பங்கம் ஏற்பட வாய்ப்புகளை உருவாக்காதீர்கள். கார் ஓட்டும் கலை மற்றும்
வாகனங்களின் சிறப்பம்சங்களை விளக்கும் வகுப்புகளில் சேர்ந்து பயிற்சி
பெற்றுக் கொள்வது சாலச் சிறந்தது.
காரில் டயர் பஞ்சராகும்போது வீலை மாற்றுவது எப்படி? - வழிகாட்டு முறைகள்
அவ்வாறு, காரின் ஆயுளை நீட்டிக்கவும், பிரச்னை இல்லா பயணத்திற்கும் சில கூடுதல் விஷயங்களை கார் உரிமையாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அவ்வாறான தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
முதலில் காருடன் கொடுக்கப்படும் உரிமையாளர் கையேட்டினை கூர்ந்து படிக்கவும். அதில், எழும் சந்தேகங்களை குறித்து வைத்துக்கொண்டு மீண்டும் கார் ஷோரூம் செல்லும்போது அங்கிருக்கும் விற்பனை பிரதிநிதி அல்லது மெக்கானிக்கிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இதுதான் முதல் விஷயம்.
காரில் டயர் பஞ்சராகும்போது வீலை மாற்றுவது எப்படி? - வழிகாட்டு முறைகள்!
கருத்துரையிடுக Facebook Disqus