0

டெல்லி: டிஜிலாக்கர் என்பது டிஜிட்டல் இந்தியாவின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு புதிய முயற்சியாகும்.

டிஜிலாக்கர் மூலமாக இந்திய குடிமக்கள் அனைவரும் தனிநபர்களுக்கான ஆவணங்கள், சான்றிதழ்கள் போன்றவற்றை இணையத்தில் பதிவேற்றி வைத்துக்கொள்ளலாம்.


தனிநபர் ஒருவர் தங்களுடைய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை கைகளில் வைத்துக் கொள்வது ஏதேனும் இயற்கை சீற்றங்கள் அல்லாத விபத்து நேரும் போது பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இயல்வதில்லை.
மேலும் தங்களது ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டி வரும் போது ஜெராக்ஸ் காபி எடுக்க வேண்டும், ஸ்கேன் காபி அல்லது தபால் சேவைகள் வாயிலாக அனுப்ப வேண்டும் என்ற சிக்கல்கள் உள்ளது.

அதுமட்டும் இல்லாமல் தங்களது ஆவணங்களை தவறான முறையில் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.

டிஜிலாக்கர் என்பது ஆவணங்கள் வழங்குதல், சரிபார்த்தல் மற்றும் டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க கூடிய ஒரு கிளவுட் வழிமுறையாகும்.

டிஜிலாக்கர் எப்படிச் செயல்படுகிறது?
1) குடிமக்கள் தங்களது டிஜிலாக்கர் கணக்கை எங்கு இருந்து வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அணுகலாம், பின்னர் எளிதாக ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இதனால் நேரம் மிச்சம் ஆகும்.

2) இதனால் அரசு அலுவலகங்களில் பேப்பர் பயன்பாடு குறையும்.

3) ஆவணங்களின் பதிவுசெய்யப்பட்ட வழங்குநரே நேரடியாகச் சான்றிதழ்களை வழங்குவதால் டிஜிலாக்கர் ஆவணங்கள் சரிபார்ப்பை மேலும் எளிமையாக்கும்.

4) சுய பதிவேற்ற ஆவணங்கள் டிஜிட்ட்டல் முறையில் கையொப்பம் இடப்பட்ட மின்னணு கையெழுத்து சேவையை வழங்குகிறது. இது சுய சான்றொப்பத்திற்கு இணையானது.

வழங்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் சுயமாக பதிவேற்றிய ஆவணங்கள் என இரண்டு வகையாக உள்ளன.

வழங்கப்பட்ட ஆவணங்கள் முறை என்பது பதிவுசெய்யப்பட்ட சான்றிதழ் வழங்குநரே நேரடியாக அசல் ஆவணத்தை அளிக்கும் முறையாகும். இதற்குத் தனியாக ஆவணங்கள் நகல் ஏதும் தேவை இல்லை.

சுயமாகப் பதிவேற்றிய ஆவணங்கள் முறையில் தார்களாகவே முன்வந்து ஆவணங்களை ஸ்கேன் நகல் எடுத்துப் பதிவேற்றுவதாகும் . இந்த முறையில் சுய சான்றோப்ம் தேவை.

இது கிட்டத்தட்ட டிராப் பாக்ஸ், கூகுள் டிரைவ் (1ஜிபி வரையிலான சேமிப்பு இலவசம்) போன்ற சேவையே ஆகும்.

டிஜிலாக்கர் கணக்கை துவங்க ஒரு முறை கடவுச்சொல்லை பெறுவதற்கான மொபைல் எண்ணை உள்ளிட்டுப் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்குவதற்கான அனுமதியைப் பெறலாம்.

பின்னர் ஆதார் அட்டை அல்லது நீங்கள் உருவாக்கிய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழையலாம்.

என்ஆர்ஐ-கள் டிஜிலாக்கர் கணக்கை திறக்க முடியாது. இது இந்திய மொபைல் எண்ணைப் பயன்படுத்தி பதிவுசெய்பவர்களுக்கு மட்டுமே ஆகும்.

ஆதார் அட்டை, பான் கார்டு, மதிப்பென் ஆட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, போன்று எல்லா ஆவணங்களைப் பதிவேற்றி வைக்கலாம்.

ஒரு கோப்பின் அளவு அதிகபட்சமாக 10 எம்பி வரையில் இருக்கலாம். மேலும் பிடிஎப், ஜேபிஜி, பிஎன்ஜி போன்ற கோப்பு வடிவங்களில் ஆவணங்களைப் பதிவேற்றலாம்.

சிபிஎஸ்இ மற்றும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு முடிவுகள் போன்றவையும் இப்போது டிஜிலாக்கர் சேவை மூலம் வழங்க மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.

மேலும் இதுபற்றிய முழு விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்க.

கருத்துரையிடுக Disqus

 
Top