நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் குறித்த குறைபாடுகளை தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில், பொதுவிநியோக திட்ட செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உணவுத்துறை முதன்மைச் செயலர் (பொறுப்பு) கே.கோபால், உணவு பொருள் குற்றப்புலானாய்வுத் துறை இயக்குநர் கே.ராதாகிருஷ்ணன், உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் எஸ்.மதுமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்துக்கு 3 மாத தேவைக்கான அரிசி கையிருப்பில் உள்ளது. மேலும், எதிர்வரும் தீபாவளி பண்டிகை, வடகிழக்குப் பருவமழை காலங்களில் தேவைப்படும் பச்சரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு வகைகள், பாமாயில், மண்ணெனண்ணெய் ஆகியவற்றை நியாவிலைக் கடைகளுக்கு உடனுக்குடன் அனுப்ப வேண்டுமென அலுவர்களை அமைச்சர் இரா.காமராஜ் கேட்டுக்கொண்டார்.
அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் குறித்த குறைபாடுகள் இருந்தால், குடும்ப அட்டைதாரர்கள் குடிமைப் பொருள் வழங்கல் துறை ஆணையர் அலுவலகத்தில் செயல்படும் 044-28592828 என்ற எண்ணிலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநர் அலுவலகத்தில் செயல்படும் 9445190660, 9445190661,9445190662 ஆகிய செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும், அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு, இதுவரை 912 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக Facebook Disqus