0

என்பது மனித வாழ்க்கையில் ஒரு அங்கமாகி இன்றியமையாத ஒரு விஷயமாகிவிட்டது. பலர் சாப்பாடு இல்லமல் கூட இருந்துவிடுவார்கள். ஆனால் ஃபேஸ்புக்கில் ஒரு நாளைக்கு ஒருமுறையேனும் ஓப்பன் பண்ண வில்லை என்றால் அவர்களுக்கு தூக்கம் வராது.

இந்நிலையில் நீங்கள் ஒரு பப்ளிக் பிரெளசிங் செண்டரிலோ அல்லது நண்பரின் கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட்போனிலோ உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்டில் சில மணி நேரம் இருந்துவிட்டு ஏதோ ஒரு ஞாபகத்தில் லாக்-அவுட் செய்ய மறந்துவிட்டால் என்ன ஆகும் என்பதை நினைத்து பாருங்கள்

உங்களது புகைப்படங்கள், வீடியோக்கள், மற்றும் தனிப்பட்ட பர்சனல் இமெயில், வங்கி விபரங்கள் உள்பட பல முக்கிய விஷயங்கள் லீக் ஆகிவிடும் ஆபத்து உள்ளது.

எனவே இதுபோன்ற நேரத்தில் நீங்கள் எந்தெந்த கம்ப்யூட்டரில் எங்கெங்கு லாக்-இன் செய்தீர்களோ அவை அனைத்தையும் ஒரே நேரத்தில் ரிமோட் மூலம் லாக்-அவுட் செய்வது எப்படி? என்பது குறித்து தற்போது பார்ப்போம்

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எளிய ஐந்து வழிகள். இந்த வழிகளை நீங்கள் பின்பற்றினால் லாக்-அவுட் செய்ய மறந்த அனைத்தும் லாக்-அவுட் ஆகிவிடும்

1. முதலில் ஏதாவது ஒரு கம்ப்யூட்டரில் உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்டில் லாக் இன் செய்யுங்கள். பின்னர் வலது புறம் உள்ள செட்டிங்ஸ் என்ற பகுதியை க்ளிக் செய்யுங்கள்

2. செட்டிங்ஸ் க்ளிக் செய்தால் முதலில் ஜெனரல் என்று இருக்கும். அதற்கு அடுத்தபடியாக உள்ள செக்யூரிட்டி என்ற ஆப்சனை க்ளிக் செய்யுங்கள்

3. செக்யூரிட்டியை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு ஒரு புதிய பாப்-அப் பக்கம் பல வித ஆப்சன்களுடன் ஓப்பன் ஆகும். அதில் Where you're logged in' என்ற ஆப்சனை தேடி கண்டுபிடியுங்கள் பின்னர் அதை க்ளிக் செய்யவும்.


4. அதில் நீங்கள் எந்தெந்த கம்ப்யூட்டரில் எத்தனை மணிக்கு உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்டை ஓப்பன் செய்து பார்த்தீர்கள் என்ற முழு விபரங்கள் இருக்கும்.

5. பின்னர் அந்த விபரங்கள் அனைத்திலும் End Activity என்று உள்ளதை க்ளிக் செய்தால் நீங்கள் எங்கெங்கு லாக்-இன் செய்தீர்களோ அந்த இடங்கள் அனைத்திலும் லாக்-அவுட் ஆகியிருக்கும்.

மேற்கண்ட ஐந்து வழிகளை பின்பற்றினால் லாக்-அவுட் செய்ய மறந்துவிட்டோமே என்ற கவலை வேண்டாம். இதே ஆப்சன் ஜிமெயிலிலும் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.,

கருத்துரையிடுக Disqus

 
Top