0
பேஸ்புக் சமீபத்தில் தனது பயனர்களுக்கு பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.பேஸ்புக் மெஸ்சென்ஞ்சர் ஆக இருந்தாலும் சரி நியூஸ் பீட் ஆக இருந்தாலும் சரி பேஸ்புக் நிறுவனம் எல்லாமே புத்தம் புதிய அம்சங்களாக அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.

சமீபத்தில் மிகவும் பிரபலமான சமூக ஊடக தளமான பேஸ்புக் அதன் ப்ரொபைல் பிக்சரில் ஒரு புதிய வசதியை கொண்டு வந்துள்ளது. அதாவது பேஸ்புக் பயனர்கள் இப்போது தங்கள் சுயவிவர படங்களை ஜிஃப் படங்களாக ஆட் செய்யலாம் இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு பயனர்களுக்கு கிடைக்கின்றது. அதி எப்படி நிகழ்த்துவது என்பதை பின்வரும் வழிமுறைகளில் அறிந்து கொள்ளவும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
வழிமுறை #01 
 
 

வழிமுறை #01

உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் லாக்இன் செய்து உங்கள் ப்ரொபைல் ஸ்க்ரீனுக்கு செல்லவும். பின்னர் ப்ரொபைல் பிக்சர் ஆப்ஷனை டாப் செய்து நியூ ப்ரொபைல் வீடியோ அல்லது ப்ரொபைல் வீடியோ ஆப்ஷன் நுழையவும்.

வழிமுறை #02

இப்போது உங்களுக்கு விருப்பமான வீடியோ கோப்பை தேர்ந்தெடுத்து பதிவேற்றவும். பயனர் ஒரு 7 நொடி நீளம் கொண்ட வீடியோவை பதிவேற்ற வேண்டும் இந்த வழக்கில் வீடியோ நீளமானதாக இருப்பின் வீடியோ ட்ரிம் பயன்படுத்தி அதை ஒழுங்கமைக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வழிமுறை #03

விடியோவை தேர்வு செய்ததும் வீடியோ வேலை செய்யவில்லை எனில் பயனர் வீடியோவில் இருந்து தம்ப்நெயில் தனை தேர்வு செய்ய வேண்டும். தம்ப்நெயில் ஆனது ப்ரொபைல் பிக்சராக வேலை செய்யும் இப்போது யூஸ் இட் தேர்வு செய்து பணியை முடித்துக்கொள்ளவும்

முக்கியமான டிப்ஸ்

வீடியோவை பதிவேற்றும் முன்பு நீங்கள் அறிந்துக்கொள்ள விடயங்கள் :
#01 விடீயோவின் ஒலியை ஆப் செய்து கொள்ளவும்
#02 சரியாக 7 நொடிகளுக்கு வீடியோ ட்ரிம் செய்யப்பட்டால் மிக நல்லது
#03 வீடியோவில் தேவையில்லாத பகுதியை க்ராப் செய்து விடுவது நல்லது.

கருத்துரையிடுக Disqus

 
Top