வேலையில் ஒரு சகிக்க முடியாத முட்டாள்தனமான காரியத்தை
செய்துவிட்டீர்கள். இதில் நல்ல விஷயம் என்னவென்றால் நீங்கள் மட்டும் தனியாக
இல்லை. பெரும்பாலான சாதித்த தொழில்முறை வல்லுனர்கள் பலமுறை தவறுகள்
செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால்
அதை எப்படிக் கையாளப் போகிறீர்கள் என்பதுதான். உங்கள் தவறு உங்கள் வேலைக்கு
உலைவைக்குமானால், வேறு வேலையை தேடத் துவங்குங்கள்.
புதிய வேலையில்
இந்தச் சூழ்நிலையை எவ்வாறு அவர்களுக்குப் புரியவைப்பது என்பதைப் பற்றி
ஆராயுங்கள். ஒருவேளை வேலை போகாமல் இருந்தால், பாதிப்படைந்த நற்பெயர்,
நம்பிக்கை மற்றும் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதை இப்போது
காணலாம்.
விளைவுகள் என்னவாக இருக்கும்?
ஒருவேளை
நீங்கள் தவறான மின்னஞ்சலை உங்கள் வாடிக்கையாளருக்கு அனுப்பிவிட்டால்
உங்கள் நிறுவனம் அந்த வாடிக்கையாளரை இழந்துவிடுமா? அப்படியென்றால் உங்களின்
மேற்கொண்ட வேலையின் எதிர்காலம்? அது உங்களின் நற்பெயரைப் பறிக்குமா அல்லது
வேலையையே பறிக்குமா? நீங்கள் ஒரு மிக மோசமான விளைவிற்குத்
துணிந்துவிட்டால், பாதிப்புகளைக் குறைக்கும் முயற்சிகளில் இறங்கி
நிறுவனத்திற்கும் உங்களுக்கும் ஏற்படவிருக்கும் நஷ்டத்தைக் குறைக்க
முயலுங்கள்.
கட்டுப்பாடின்றி செயல்படாதீர்கள்
கதைகளையும்
அதிகப் பேச்சுக்களையும் குறையுங்கள். உங்கள் பிரச்சனையிலிருந்து மீள
உதவிக் கோரி அதிகமான மன்னிப்பு கேட்பதும் அனைவரிடமும் திரும்பத் திரும்ப
மன்னிக்கக் கோருவதும் செய்யாதீர்கள்.
உங்களுக்கு இது கவலையை
தெரிவிப்பதாக இருக்கலாம், ஆனால் மற்றவர்களுக்கு நீங்கள் அவர்களின்
நேரத்தையும் மற்றும் நிறுவன ஆதாரங்களையும் வீணடிப்பதாகத் தோன்றும். உங்கள்
மேலதிகாரிக்கு ஒரு அழுத்தம் நிறைந்த நிலைமையினை கையாள முடியாமல் திணறுவதை
நீங்கள் வெளிப்படுத்துவீர்கள்.
ரொம்பவே சாதாரணமாக எடுத்துக் கொள்ளவேண்டாம்
நீங்கள்
ஒரு தவறை செய்துவிட்டு அதை மற்றவர்களிடம் கூறினால் பெயர் கெடும் எனச்
சொல்லாமல் விட்டுவிடுகிறீர்கள். மற்றவர்களுக்கு இது தெரியவரும்போது எதுவுமே
நடக்காததுபோலவொ அல்லது இது பெரிய விஷயமல்ல என்பதைப் போலவொ எண்ணாமல்
அதற்குத் தயாராக ஒரு காரணத்தை வைத்திருக்கிறீர்கள்.
இது ஒரு
பயங்கரமான ஒரு யோசனை. உங்கள் சகாக்கள் நீங்கள் எந்தத் தவறு செய்தாலும்
கவலைப்படப்போவதில்லை எனவும் உண்மையாக இருக்கப் போவதில்லை எனவும்
முடிவுகட்டத் தொடங்கிவிடுவர். உங்கள் டீம் லீடர் அல்லது அணித் தலைவர்
உங்களை நேர்மையற்றவராகவும் நம்ப முடியாத நபராகவும் நினைத்துக் கொள்வார்.
உண்மையை மறைப்பதன் மூலம் அதைச் சரி செய்யும் ஒரு வாய்ப்பை நீங்களே
தடுத்துவிடுகிறீர்கள் என்பதுடன் உங்கள் எதிர்காலத்தையும் சரிசெய்ய இயலாமல்
போய்விட வாய்ப்புண்டு.
பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்
மற்றவர்கள்
அறிந்து அனைவருக்கும் அதைத் தெரிவித்து உங்களைக் குறித்த தவறான
அபிப்பிராயங்கள் தலையெடுக்கும் முன் உங்கள் தவறை ஒத்துக் கொள்ளுங்கள். இதை
யாரிடம் சொல்லி அதற்கு வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்பதைத்
தெரிந்துகொள்ளுங்கள். பெரும்பாலும் இது உங்கள் தவறால் அதிகம்
பாதிக்கப்படும் சக பணியாளரோ அல்லது மேலதிகாரியாகவேதான் இருக்கும்.
பாதிக்கப்படப்போவது
வாடிக்கையாளர் என்றால், யாரிடம் எப்படி இதைத் தெரிவிக்க வேண்டும் என்பது
முக்கியம். உங்கள் மேலதிகாரியிடமும் வாடிக்கையாளரை எதிர்கொள்ளப்போகும் சக
ஊழியர்களிடமும் இதை விவாதித்துவிட்டுச் சிறந்த தெரிவிக்கும் முறை, நேரம்
மற்றும் நடவடிக்கைகளை முடிவு செய்யுங்கள். உங்கள் தவறுகளுக்கு
பொறுப்பேற்பது உங்கள் முதிர்ச்சியையும், அக்கறை மற்றும் நம்பகத்தன்மை
ஆகிவற்றைக் காட்டும்.
தீர்வைக் கண்டுபிடியுங்கள்
உங்கள் மேலதிகாரியோ அல்லது சகாக்களோ பிரச்சனைக்கு நீங்களே ஒரு தீர்வை தேடிப்பிடித்து அதைச் சரிசெய்யவேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.
பல்வேறு
தீர்வுகளை வைப்பதன் மூலம், நீங்கள் அனைவருடைய நேரம் மற்றும் உழைப்பை
மிச்சப்படுத்துவதுடன் பிரச்சனைகளை சரிசெய்ய உங்களுக்கிருக்கும் திறனை
அவர்கள் நம்ப வழி செய்யலாம். அது சரிசெய்ய இயலாத தவறென்றால், அதை ஈடுகட்டத்
தேவையானவை எவை என கண்டுபிடித்து அதைச் செய்யலாம்.
வித்தியாசமான நடவடிக்கைகள்
முதலில்
செய்யவேண்டிய செயல்களைத் தீர்மானித்து யாருடைய உதவி தேவைப்படும் என்பதை
அறியவேண்டும். ஒரு தவறான சரக்கை வாடிக்கையாளருக்கு அனுப்பிவிட்டால், அதைச்
சரியாக செய்யத் தேவையான அனுமதிகளைப் பெறுங்கள். அடுத்து தவறை சரிசெய்யத்
தேவையான ஒரு தகவல் பரிமாற்றத்தை உருவாக்கிப் பாதிப்பினை சரி செய்யுங்கள்.
முடிவாக எதிர்வரும் காலங்களில் இந்தத் தவறுகள் நடக்காமல் இருக்க என்ன
வித்தியாசமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை விவரியுங்கள்.
குற்ற உணர்வுகளுக்கு இடங்கொடுங்கள். ஆனால்..
ஒரு
தவறை செய்தபின் பயம் மற்றும் குற்றவுணர்வு ஏற்படுவது சகஜமே. ஆனால் எப்போது
பார்த்தாலும் அதையே நினைத்துக் குமைந்து கொண்டிருப்பது நல்லதல்ல. ஒரு
கூட்டு முயற்சியில் நீங்கள் தவறிழைத்து அதை திரும்பச்
செய்யவேண்டியிருப்பின், அது உங்களை குலையச் செய்து உங்கள் சகாக்களை தினமும்
எதிர்கொள்வதைக் கடினமாக்கும்.
மனதில் சிலகாலத்திற்கு குற்றவுணர்வை
இருக்க அனுமதியுங்கள். அதன்பின் உங்களை நீங்களே மன்னித்துக் கொண்டு உங்கள்
பணியில் கவனம் செலுத்தி நேர்மறையான முறையில் உங்கள் குற்றவுணர்வுகளை
கண்காணித்து வாருங்கள். உங்கள் தவறை வாழ் நாள் முழுவதும் நினைவில் கொள்ள
யாருக்கும் நேரமில்லை என்பதுடன் நீங்களும் அதே நினைவில் இருந்து வேலையைக்
கெடுத்துக் கொள்ளக்கூடாது.
சோர்வடையும் வரை உழையுங்கள்
தவறுகள்
நேரும்போது அதில் ஆழமாகச் செல்லவும் மிகக் கடுமையாக உழைக்கவும்
தயாராகுங்கள். வேலைக்கு நேரத்திற்கு முன்பே சென்று எதிர்பார்ப்புகளை மீறும்
வகையில் பணிசெய்ய தியாகங்களைச் செய்யுங்கள். யாரும் செய்ய விரும்பாத
பணிகளை எடுத்துச் செய்து அதில் வழக்கத்தை விட அதிகம் செய்துகாட்டி உயர்ந்த
தரமான பலன்களை பெறப் பாடுபடுங்கள்.
உங்கள் சகாக்கள், வாடிக்கையாளர் மற்றும்
மேலதிகாரிகளுக்கு நேரத்தில் அவர்களின் பணியை முடித்துக் கொடுத்த வாக்கை
காப்பாற்றிட மறவாதீர்கள். இது உங்கள் இழந்த பெயரை மீட்டெடுத்து பிரச்சனை
என்றால் கடுமையாக உழைப்பவர் என்ற பெயரை உருவாக்கும்.
மைக்ரோ மேனேஜ்மென்ட் அல்லது நுண்ணிய மேற்பார்வை
நீங்கள்
உங்கள் மேலதிகாரிக்கோ அல்லது நிறுவனத்திற்கோ முக்கியமான பணியை முடிப்பதில்
தவறு செய்துவிட்டால் அவர்களுக்கு எதிர்காலம் பற்றிய கவலை தோன்றுவது சகஜம்.
எனவே உங்கள் மேலதிகாரியை நீங்கள் உங்கள் திறமையை மீண்டும் நிலைநாட்டும்
வரை உங்களின் அனைத்து சிறு பணிகள் உள்ளிட்ட பணிகளையும் நுண் மேற்பார்வை
செய்யச் சொல்லி ஏற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் பணியின் நிலவரம் பற்றிய
தகவல்களை அறிக்கையாக ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறையோ அல்லது நாளைக்கு
ஒரு முறையோ ஒரு நேர்மறையான சிந்தனையுடன் உங்கள் அதிகாரிக்குக் கொடுத்து
அதில் ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேட்டறிய அவருக்கு உதவுங்கள். கால
அவகாசங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதுடன் தரத்திலும் கண்ணாக
இருங்கள். இதை உங்கள் மீதான நம்பிக்கை வளர ஒரு சரியான வாய்ப்பாகப்
பயன்படுத்துங்கள். நிலைமை சகஜமானவுடன் உங்கள் நற்பெயர் திரும்பக் கிடைத்ததை
அறிந்துகொள்ளலாம்.
புதையலைக் கண்டுபிடியுங்கள்
உங்கள்
தவறுகளை வாய்ப்புகளாக்கி கற்றுக் கொள்ளுங்கள். உடனடியாக நடவடிக்கைகள்
எடுத்தபின் ஒரு நல்ல உறக்கம் கொள்ளுங்கள். முதல் துயரத்திற்குப் பிறகு எந்த
எண்ணம், சிந்தனை, தகவல் பரிமாற்றம் மற்றும் நடவடிக்கைகளில் என்ன தவறுகள்
நிகழ்ந்தன என்பதை ஆராய்ந்து பாருங்கள். இவற்றில் செய்யவேண்டிய மாற்றங்களை
இனம் காணுங்கள்.
பெரும்பாலான பெரிய தவறுகள் மிகச்சிறந்த பாடங்களை நமக்குத் தந்து நம் வாழ்க்கையை மேலும் வலுவாக்கவும் வெற்றியடையவும் தருகின்றன.
செயல்முறை முக்கியம்
நீங்கள்
உங்கள் குறிக்கோள்களில் கவனமாக இருந்தால், சரியான அடிகளை எடுத்துவைக்க
மறந்துவிடவும் உங்கள் குறிக்கோளை தவறவிடவும் வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு
அடையவேண்டிய காலக் கெடு மற்றும் எண்ணிக்கைகள் கொடுக்கப் பட்டிருந்தாலும்,
செயல்முறைகளைச் சரியாக வடிவமைப்பதிலும் செயல்படுத்துவதிலும் கவனம்
செலுத்துங்கள்.
உணர்வுகள் முக்கியமல்ல
நீங்கள்
எவ்வாறு உணருகிறீர்கள் என்பதற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம்
பயன்தராது. தற்காலிக உணர்வுகளில் அதிகம் மூழ்கினால் உங்கள் திறன்
பாதிக்கப்பட்டு நீங்கள் பெரிய தவறுகளைச் செய்ய நேரிடும். தற்போது
எடுத்துள்ள சிறிய செயல்களில் கவனம் செலுத்தினால் அது உங்களை எதிர்மறை
சிந்தனைகளை புறந்தள்ள உதவும்.
வாழ்க்கை திட்டங்கள் நிரந்தரமல்ல
உங்கள்
எதிர்காலம் மற்றும் வாழ்க்கைத் திட்டங்கள் பற்றி நிறையச் சிந்திப்பது
கவனக் குறைவை ஏற்படுத்தி தற்போதைய பணிகளில் தவறுகளுக்கு வழிவகுக்கும்.
திட்டங்கள் கடந்த கால விவரங்களைப் பொருத்து அமைந்தது. ஆனால் இந்தச்
சூழ்நிலைகள் மாறும் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும். உங்கள் திட்டங்களை
ஓரிரு மாதங்களுக்கு ஒருமுறை சரிபார்த்து தினமும் நன்றாகச் செயல்படுவதில்
கவனம் செலுத்துங்கள்.
அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்
மற்றவர்கள்
உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கவலை கொள்ளாதீர்கள். உங்கள்
சகாக்கள் உங்கள் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை.
மற்றவர்களிடத்தில் புகழும் ஏற்றுக் கொள்ளுதலும் எதிர்பார்ப்பீர்களானால் அது
வேலையில் தவறுகளுக்கு இடம் கொடுக்கும். உங்களுக்கு மகிழ்ச்சி தரும்
ஒன்றைத் தேர்வு செய்து அதைச் சிறப்பாக செய்யுங்கள்.
குற்றவுணர்வு சக்தியையும் நேரத்தையும் வீணாக்கும்
உள்ளுணர்வு
உங்களைப் பற்றி என்ன விமர்சனம் செய்கிறது என்றும் தவறு செய்த பிறகு எழும்
குற்றவுணர்வு ஆகியவற்றையும் கவனியுங்கள். இவை இரண்டும் உங்களைச் சரியான
நடவடிக்கைகளை எடுப்பதிலிருந்தும் சரியான முடிவுகளை எடுப்பதிலிருந்தும்
தடுக்கின்றன. ஏதாவது ஒரு பணியை செய்துகொண்டு உங்கள் இழந்த சக்தியை
திரும்பப் பெறவும் உங்கள் நேரத்தை சரியாகப் பயன்படுத்தவும் முயற்சி
செய்யுங்கள்.
கருத்துரையிடுக Facebook Disqus