பிஎப் சந்தாதாரர்களுக்கு யுஏஎன் எனப்படும் பொதுவான
கணக்கு எண் (யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்) கொடுக்கப்பட்டுள்ளது. எத்தனை
முறை வேலை மாறினாலும் அவர் ஓய்வு பெறும் வரை இந்த கணக்கு எண் நிரந்தரமாக
இருக்கும். ஒருவர் ஒரு நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்துக்கு
மாறும்போது, முந்தைய நிறுவனத்தில் பிடித்தம் செய்த பிஎப் பணத்தை, கணக்கை
முடித்துவிட்டு முழுவதுமாக எடுக்கலாம். அல்லது பழைய நிறுவன பிஎப் கணக்கை
புது நிறுவனத்துடன் இணைக்கலாம். இதற்கான படிவம் 13 நடைமுறைகள் கடினமாக
இருந்தன.
பொது கணக்கு எண் ஒதுக்கப்பட்ட ஒரு ஊழியர் கேஒய்சி எனப்படும் உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள் என்ற விவரத்தை தர வேண்டும்.
இது இணையதளம் மூலம் முந்தைய நிறுவன அதிகாரிகளால் சரிபார்க்கப் பட்டிருந்தால், புதிய நிறுவனத்தில் சேருபவர்கள் இனி படிவம் 13ஐ கொடுக்க தேவையில்லை. ஆனால் அவர்கள் படிவம் 11 ஐ தாக்கல் செய்ய வேண்டும். முந்தைய நிறுவன பணி குறித்த தகவல்கள், கேஒய்சி விவரங்களை புதிய நிறுவனத்தில் பணியில் சேரும் போது கொடுக்க வேண்டும். இந்த தகவல்கள் அடிப்படையில், புதிய நிறுவனம் அவர்களது பிஎப் கணக்கில் பிடித்தம் செய்யப்படும் பணத்தை செலுத்தும்.
மேலும் பல வசதிகள்
* படிவம் 13க்கு பதிலாக படிவம் 11 இனி பயன்பாட்டில் இருக்கும்.

* மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்துக்கு இடையே ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.
* இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், பொது கணக்கு எண் உள்ள 7.84 கோடி பிஎப் உறுப்பினர்கள் பயன் பெறுவார்கள்.
* இதுவரை 2.93 கோடி யுஏஎன் கணக்குகள் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யுஏஎன் உள்ளவர்கள் பணி மாறினாலும் பி.எப். கணக்கை புதிய நிறுவனத்துக்கு மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது.
* பிஎப் கணக்குடன் ஆதார் எண் இணைப்பு, ஓய்வூதியம் பெறுவோருக்கு டிஜிட்டல் லைப் சான்றிதழ்கள், இ-கேஒய்சி மூலம் செயல்படும் பதிவேற்றம், பதிவிறக்க வசதிகள், யூஏஎன் கார்டு தொடர்பான மற்றும் ஆன் லைன் கிளைம் சேவைகள் மத்திய ஐ. டி அமைச்சகத்தின் 2 லட்சம் சிஎஸ்சி மையங்களில் இனி கிடைக்கும்.
கருத்துரையிடுக Facebook Disqus