உங்களுக்கு அலுவலகம் செல்ல விருப்பமில்லையா? அலுவலகத்தில்
அனைவருக்கும் உங்களைப் பிடிக்கவில்லையா? அனைவரும் உங்களைத்
தவிர்க்கின்றார்களா? இதுவே சரியான தருணம். உங்களின் சக ஊழியர்கள் அல்லது
உங்களின் முதலாளியிடம் இருந்து உங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதன்
பிறகு உங்களைப் பற்றி நீங்களே எடை போட்டுப் பாருங்கள்.
உங்களுக்கு இந்த விஷயத்தில் உதவுவதற்காக, நாங்கள் உங்களின் சக ஊழியர்கள் உங்களை வெறுக்கக் காரணமான பத்து காரணங்களைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பற்றி தெரிந்து கொள்ள மேலே தொடர்ந்து படியுங்கள்.
உங்களை, உங்களுடன் பணியாற்றுபவர் வெறுக்க முதன்மையான காரணம், உங்களின் மோசமான தனிப்பட்ட பணி நெறிமுறைகளே ஆகும்.
நீங்கள் உங்களுடைய அணியின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாமல் எப்பொழுதும் தனியாகவே செயல்படுவீர்களா? உங்களுக்கு உங்களின் வேலை அல்லது பணியாற்றும் சூழ்நிலை பிடிக்கவில்லை என்றால், நல்ல வாய்ப்புக்காக முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் தற்பொழுது
பணிபுரியும் வேலையிலேயே தொடர முடிவு செய்யும் பட்சத்தில், உங்கள் அணியில்
உள்ள பிறரின் பங்களிப்பிற்குச் சமமாக பணியாற்றுங்கள், மேலும் பிறருக்கு
உதவி புரிய சற்று அதிக நேரம் செலவிடுவதில் தவறில்லை.
யாருக்கும் ஒரு புலம்பல்வாதியை பிடிப்பதில்லை. அனைவருக்கும் தனிப்பட்ட மற்றும் பணியிட சவால்கள் இருக்கும். நீங்கள் உங்களின் சக ஊழியர்களுக்கு ஒரு ஆற்றல் மூலமாக அல்லது ஒரு வடிகாலாக விளங்க வேண்டுமா? உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகள் புறந்தள்ளி விட்டு, சக ஊழியர்களுக்கு உதவி புரிவதன் மூலம் உங்களைப் பற்றிய ஒரு நல்ல பிம்பத்தை உருவாக்கிடுங்கள்.
மேலும் உங்களின் சக ஊழியர்களின் பங்களிப்புகளை பாராட்டத் தயங்காதீர்கள். எப்பொழுதும் ஒரு மகிழ்ச்சியான விவாதங்களின் தொடக்கப்புள்ளியாக இருங்கள்.
சராசரியை விட அதிகமாக வம்பு பேசும் மக்கள் நம்பிக்கை அற்றவர்களாகக் கருதப்படுகின்றார்கள். அதேசமயம் முறைசாரா குழு விவாதங்களில் பங்கேற்க மறுப்பவர்கள் மீது தூரமாக விலகி நிற்பவர்கள் என்கிற முத்திரை குத்தப்படுகின்றது.
சிறிய அளவிலான வதந்திகள் அலுவலக பிணைப்பை மேம்படுத்தும். அதுவே அதிகமானால் உங்களின் நண்பர்களை உங்களிடமிருந்து பிரித்து விடுவதுடன், உங்களைச் சிக்கலில் மாட்டி விடும். எனவே, சரியாகத் தேர்வு செய்யுங்கள்.
உங்களின் அணி உறுப்பினர்கள், நீங்கள் உங்களின் மூத்த அதிகாரியைக் காக்கா பிடிப்பதில் அதிக நேரம் செலவு செய்வதைக் கண்டால் உங்களை விரும்ப மாட்டார்கள். உங்களின் முதலாளிக்கு முகத்துதி பிடிக்கும் என்றாலும், உங்களின் அணி உறுப்பினர்கள் உங்களைப் பழி வாங்கச் சரியான நேரத்திற்குக் காத்திருப்பார்கள்.
மறுபுறம், உங்களின் சக ஊழியர்களின் நட்பைப் பெற, உங்கள் முதலாளி கெட்டவன் என்று நீங்கள் ஏடாகூடமாக ஏதேனும் கூறினால் அது இறுதியில் உங்கள் வாழ்க்கைக்குத் தீங்கு விளைவிக்கலாம்.
நீங்கள் எப்போதும் அலுவலக கூட்டங்களில் அதிகம் பேசும் பொழுது மற்றவர்கள் உடனே வேலைக்குத் திரும்ப பெற வேண்டும் என நினைக்கின்றார்களா? அல்லது நீங்கள் மற்றவர்களுக்குத் தேவைப்படும் முக முக்கியமான விஷயங்களைக்கூட பேசுவதைத் தவிர்க்கும் நபரா? இதை உங்களின் நண்பர்களுடன் பேசி தெரிந்து கொண்டு சமநிலைப் படுத்த முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் மற்றவர்களின் பங்களிப்பிற்கு உரிமை கொண்டாடுவதை எப்பொழுதும் ஒரு தொழில் முறை வல்லுநர் மன்னிக்கவே மாட்டார். சிறந்த வழி என்பது எல்லா வெற்றிக்கும் அணியில் உள்ள அனைவரையும் உரிமையாளராக்குவது மட்டுமே. உங்களின் முதலாளிக்கு உண்மையான பங்களிப்பாளர் யார் என்கிற விபரம் கண்டிப்பாக தெரிந்திருக்கும்.
உங்களின் அணி உறுப்பினர்கள் உங்கள் மேல் கடுங் கோபத்தில் இருக்கலாம். ஏனெனில் நீங்கள் கவனமாக காது கொடுத்து அவர்களின் கருத்துக்களை கேட்டிருந்தால் முதல் முறையிலேயே உங்களின் வேலையை முடித்திருந்திருக்கலாம். நீங்கள் சரியாக கேட்காததால் காலக்கெடு முடிவடைந்து விட்டது. உங்களின் நண்பர்களைக் கேட்டு உங்களின் கேட்கும் திறனைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு மக்கள் தொடர்பு பட்டறையில் சேர்வதைப் பற்றி முடிவு செய்யுங்கள்.
உங்களுக்கு அடுத்தவரின் பணியைச் சரி செய்யும் அதிகாரம் இல்லாவிட்டால், மக்கள் உங்களின் ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே நீங்கள் அடுத்தவரின் பணியில் ஒரு பொழுதும் தலையிடாதீர்கள். அவர்களாகவே தங்களின் தவறை திருத்திக் கொள்ளப் பழகட்டும்.
பணியிடத்தில் போட்டி இருந்தால் தான் உங்களால் முன்னேற இயலும். அதே நேரம் நீங்கள் உங்களின் திறன் மற்றும் வெற்றி பற்றி அதீத நம்பிக்கை அல்லது ஆணவத்துடன் இருந்தால், உங்களின் மனப்பான்மை, உங்களை உங்களுடைய நண்பர்களிடம் இருந்து பிரித்து விடும். எனவே பணியிடத்தில் திறமை குறைந்த உங்களின் சக ஊழியர்களுக்கு உதவ உங்களுடைய நேரத்தைச் சிறிது செலவிடலாம்.
நீங்கள் மோசமாக உடை உடுத்துவீர்கள், அலுவலகத்தில் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து அதிகம் பேசுவீர்கள், பணியிடத்தில் உங்களுக்கு வரும் மின்னஞ்சலுக்கு சரியான நேரத்தில் அல்லது சரியான பதில் அளிக்காமல் இருப்பீர்கள், பொருத்தமற்ற நகைச்சுவைக்கு வெடித்துச் சிரிப்பீர்கள், எனில் மன்னித்துக்கொள்ளுங்கள், நீங்கள் ஊரோடு ஒத்து வாழ மறுக்கின்றீர்கள். உங்களின் நடத்தையை மாற்றிக் கொள்ளுங்கள் அல்லது வீட்டில் இருந்து வேலை செய்யுங்கள்.

கருத்துரையிடுக Facebook Disqus