0

கார்ப்ரேட், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எனப் போட்டி போட்டுக் கொண்டு 2016 ஆம் ஆண்டு தங்களது ஊழியர்களை பணியில் இருந்து வெளியேற்றினர்.
அதில் பிங்க் ஸ்லிப்கள் அளித்து ஊழியர்களை மிரள வைத்த சில நிறுவனங்களின் பட்டியலை இங்குப் பார்ப்போம்


குவிக்கர்காமன் ஃப்லோர் நிறுவனத்தை ஜனவரி மாதம் வாங்கிய குவிக்கர் நிறுவனம் மார்ச் மாதம் 150 ஊழியர்களுக்கு பிங்க் ஸ்லிப்களை அளித்தது.
பிளிப்கார்ட் இந்தியாவின் நம்பர் 1 இணையதள ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட் ஜபாங் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து சென்ற ஜூலை மாதம் 1,000 ஊழியர்களுக்கு பிங்க் ஸ்லிப்களை அளித்தது.
டிவிட்டர்சமுக வலைத்தள நிறுவனமான டிவிட்டர் பெங்களூரில் செயல்பட்டு வரும் தங்களது அலுவலகத்தில் இஞ்சினியரிங் பிரிவில் மட்டும் செப்டம்பர் மாதம் 20 ஊழியர்களுக்கு பிங்க் ஸ்லிப்பினை அளித்தது.
ஓலாடாக்ஸ் ஃபார் ஷூர் நிறுவனத்தைச் சென்ற ஆண்டு வாங்கிய ஓலா நிறுவனம் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஓலா செயலிக்கு மாறியதை அடுத்து 700 ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் பிங்க் ஸ்லிப்பினை அளித்தது.
க்ரோஃபர்ஸ்இணையதளம் மூலம் நுகர்பொருட்கள் விற்பனை செய்யும் க்ரோஃபர்ஸ் நிறுவனம் 150-முதல் 200 ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதம் பிங்க் ஸ்லிப் அளித்த பிறகு புதிதாக 67 பேரை வேலைக்கு எடுத்துள்ளது.
சிஸ்கோஉலகளவில் 14,000 ஊழியர்களும், இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பிரிவில் மட்டும் 7,000 இஞ்சினியர்களுக்கும் சிஸ்கோ பிங்க் ஸ்லிப்பினை அளித்துள்ளது.
ஆஸ்க்மீஇகாமர்ஸ் ஷாப்பிங் நிறுவனமான ஆஸ்க்மீ தனது நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளரான அஸ்ட்ரோ ஹோல்டின்ஸ் விலகியதைத் தொடர்ந்து 4000 ஊழியர்களுக்கு பிங்க் ஸ்லிப் அளித்தது.

கருத்துரையிடுக Disqus

 
Top