0
இந்தியாவில் நாம் செய்கின்ற பல பரிவர்த்தனைகளுக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரி செலுத்த வேண்டி உள்ளது. அவ்வாறு நாம் செலுத்தும் வரிப் பணத்தை பயன்படுத்தி நாட்டின் பல நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் நம்முடைய வருமானத்தில் சிலவற்றுக்கெல்லாம் வரி செலுத்த தேவை இலை என்று உங்களுக்குத் தெரியுமா? இதோ உங்கள் வருமானத்தில் இருந்து எதற்கெல்லாம் வரி செலுத்த வேண்டாம் என்ற பட்டியல்.
விவசாய வருமானம்

விவசாய வருமானம்

விவசாயம் மூலம் வருமானம் பெறும் தனி நபரா நீங்கள்? உங்களுக்கு விவசாயத்தின் மூலம் வரும் வருவாய்க்கு வரி இல்லை.
நீங்கள் விவசாயம் செய்தாலோ அல்லது அந்த நிலத்தைக் குத்தகைக்கு விட்டு இருந்தாலோ அதில் இருந்து நீங்கள் பெறும் வருமானத்திற்கு வரி செலுத்த தேவை இல்லை.

விடுமுறை சம்பளம்

பணிக் காலத்தில் விடுமுறைகள் இருந்தும் நீங்கள் அதைப் பயன்படுத்தவில்லையா? அதற்கான பனத்தை நீங்கள் ஓய்வு பெறும் போது பெறுகிறீர்கள் என்றால் அந்தத் தொகை அதிகபட்சம் 3 லட்சத்திற்குள் இருக்கும் போது வரி செலுத்த தேவை இல்லை.

பயண சலுகை

ஊழியர்களுக்கு தங்களது நிறுவனத்தில் விடுமுறை சலுகை உள்ளதென்றால் பிரிவு 10(5) இன் கீழ் கிளெய்ம் செய்யலாம். நிறுவனத்தைப் பொருத்து ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர், ஊழியர்கள் மட்டும் போன்ற சில விலக்குகள் இதில் உள்ளன.

ஆயுள் காப்பீடு திட்டம்

ஆயுள் காப்பீடு திட்டத்தில் இருந்து பெறும் போனஸ் முதல் மொத்த பணத்திற்கும் எவ்வித வரியும் இல்லை. இது ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கும் மட்டும் என்று நினைவில் கொள்க.

ஓய்வூதியம்

அரசு ஊழியராக இருந்து மாதம்தோறும் ஓய்வூதியம் பெறும் நபரா நீங்கள் இதற்கு முழுவதுமாக வரி விலக்கு உண்டு.
பணிக்கொடை பெறும் போது மூன்றில் ஒரு பங்கு வரி விலக்கிற்கு உட்பட்டது அல்லது ஓய்வூதியத்தில் இருந்து இரண்டில் ஒரு பங்கு வரி விலக்கிற்கு உட்பட்டது.

சேமிப்பு கணக்கு வட்டி வருவாய்

சேமிப்பு கணக்குகளின் மூலம் நீங்கள் பெறும் வட்டியில் 10,000 ரூபாய் வரை நீங்கள் வரி செலுத்த தேவையில்லை. இது மொத்த பணத்தில் அல்ல வட்டி பணத்திற்கு மட்டும்.

நிறுவனத்தின் பங்குதாரர்ராக பெற்ற லாபம்

ஒரு நிறுவனத்தில் நீங்கள் பங்கு தாரர்ராக இருந்து அதன் மூலம் நீங்கள் பெற்ற லாபத்திற்கு வரி செலுத்த தேவை இல்லை. ஆனால் இதற்கான வரி விலக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே.

டிவிடென்ட் வருமானம்

பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றவற்றின் மூலம் நீங்கள் முதலீடு செய்து அதில் பெறும் டிவிடென்ட் வருமானத்திற்கு வரி விலக்கு உண்டு.

நீண்ட கால மூலதன ஆதாய வருமானம்

நீண்ட கால மூலதன ஆதாய திட்டங்களின் மூலம் பெறும் வருமானத்திற்கு வரி விலக்கு உண்டு. எனினும் இந்தப் பரிவர்த்தனைகள் அனைத்தும் செக்யூரிட்டிஸ் டிரான்ஸாக்‌ஷன் டாக்ஸ்க்கு உட்பட்டது.

கூட்டு குடும்ப வருமானம்

தனிநபர் இல்லாமல் கூட்டு குடும்பத்திற்கும் சேர்த்து ஏதேனும் வருவாய் வரும் போது இதற்கு வரி விலக்கு உண்டு.

கருத்துரையிடுக Disqus

 
Top