கடந்த சில வருடங்களாக இந்திய ரியல் எஸ்டேட் சந்தை மிகவும் மோசமான நிலையில் உள்ள நிலையில் தங்கம் 20 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளது.
இப்போதும் சொல்கிறேன் தங்க நகைகளில் முதலீடு செய்ய வேண்டாம்?
நகையாக வாங்க வேண்டாம், தங்கத்தில் சிறந்த முறையில் முதலீடு செய்ய வேறு சில முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன. அவை என்னவென்று இங்குப் பார்ப்போம்.
சவரன் தங்க பத்திரங்கள்
இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் தங்கத்தை நேரடியாக வாங்குவதைப் போலவே கிராம் கணக்கில் பத்திரங்களாக வாங்கலாம்.
இத்திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவார்கள் ஆர்பிஐ புதிய விற்பனையை அறிவிக்கும் போது மும்பை பங்குச் சந்தை வாயிலாகப் பிற முதலீடுகளைப் போலவே தற்போதைய தங்க விலையில் தங்க பத்திரத்தை வாங்கலாம்.
நீங்கள் முதலீடு செய்த தங்கப் பத்திரங்களின் முதிர்ச்சி காலம் அடைந்தவுடன் முதலீட்டாளர்கள் பணமாகவோ அல்லது திரும்பவும் மும்பை பங்குச் சந்தையில் தற்போதைய விலைக்கு விற்றுக்கொள்ளலாம்.
தங்கம் பரிமாற்று நிதி வர்த்தகம்
மேலும் இத்திட்டத்தில் முதலீடு செய்யும் போது வரி விலக்கும் உண்டு.
தங்க நாணயம்
இத் திட்டத்தின் கீழ் குறைந்தது 5 கிராம் முதல் 20 கிராம் வரையிலான 24 காரட் தங்க நாணயங்களை வாங்கலாம்.
கருத்துரையிடுக Facebook Disqus