டைப் செய்வதற்கு சோம்பேறித்தனம் என்று சொல்லி விட இயலாது. ஆனால் மிக
நீளமான வாட்ஸ்ஆப் செய்திகளை டைப் செய்து-செய்து அலுத்து போய் விட்டது என்று
சொல்லலாம். மிக முக்கியமாக மறுபக்கத்தில் இருந்து "ஓகே", "ஹ்ம்ம்"
என்றெல்லாம் ரிப்ளை வரும் போதெல்லாம் இன்னும் அதிக சலிப்பாகும்..!
சரி
உங்கள் ஆண்ட்ராய்டு கருவிகளில் இருந்து டைப் செய்யாமலேயே வாட்ஸ்ஆப் மெசேஜ்
அனுப்புலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா.? தெரிந்துக் கொள்ள
வேண்டுமா..!? சரி மேற்கொண்டு போகலாம்..!
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
கூடுதல் தகவல்
இன்னும்
சொல்லப்போனால் இந்த தந்திரம் மூலம் உங்கள் ஆன்லைன் உங்கள் லாஸ்ட் சீன்
ஆகிய எதுவுமே உங்கள் வாட்ஸ்ஆப் நண்பர்களின் கண்களுக்கு தென்படாது என்பது
கூடுதல் தகவல். இதன் மூலம்நீங்கள் புறக்கணிக்க விரும்புபவர்களை எளிமையாக
கையாளலாம்.
கூகுள் உதவும்
வாட்ஸ்ஆப்பில்
டைப் செய்யாமலேயே மெசேஜ் அனுப்ப கூகுள் உங்களுக்கு உதவும். கூகுள் வாய்ஸ்
கொண்டு (Google Voice) உங்கள் மெசேஜிங் வாழ்க்கையை எளிதாக்கி கொள்ளுங்கள்.
இது பயனர்கள் வாட்ஸ்ஆப்பை திறக்க செய்யாமலேயே மெசேஜ் அனுப்புவதுடன்
ஆன்லைன், லாஸ்ட் சீன் ஆகிய சுய சிக்கல்களில் இருந்தும் உங்களை
காப்பாற்றுகிறது. இதை நிகழ்த்துவது எப்படி.?
ஓகே கூகுள்
பயனர்கள்
செய்ய வேண்டியதெல்லாம் கூகுள் போல்டர் அல்லது ஆப் டிராயரில் இருந்து
கூகுள் ஆப் திறக்க வேண்டும் பின்னர் "ஓகே கூகுள்" என்று சத்தமாக கூறவும்.
எவ்வளவு நீளமானதாக இருப்பினும்
எனவே,
பயனர்கள் மிக நீண்ட செய்திகளை டைப் செய்து கொண்டிருப்பதை விட, எவ்வளவு
நீளமானதாக இருப்பினும் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் வாட்ஸ்ஆப் மெசேஜை பேசி
அனுப்ப இது உதவும்.
அடையாளம்
அனுப்ப
விரும்பும் செய்தியை பேசிய பின்னர் கூகுள் யாருக்கு இந்த செய்தியை அனுப்ப
வேண்டும் என்று கேட்க்கும் அப்போது நீங்கள் செய்தியை அனுப்ப வேண்டிய
நண்பரின் பெயரை கூற கூகுள் அவரை அடையாளம் கண்டுக்கொள்ளும்.
சேன்ஞ் இட்
பயனர்
இப்போது செய்ய வேண்டியது அனைத்தும் நீங்கள் பேசி 'சேவ்' செய்த செய்தியை
"சென்ட் இட்" என்று கூறி அனுப்பிட வேண்டும். இந்த வழக்கில் நீங்கள்
செய்தியில் ஏதாவது திருத்தங்களை செய்ய வேண்டுமெனில் "சேன்ஞ் இட்" என்று
கூறுவதில் மூலம் மாற்றங்களை நிகழ்த்திக் கொள்ளலாம்.
கருத்துரையிடுக Facebook Disqus