0

உண்மையில் பொத்தி பாதுகாக்க வெண்டிய கண்ணை நாம் மொபைல், கணிப்பொறி என எப்போதும் அவற்றை பார்த்துக் கொண்டு அதற்கு சிரமத்தை தந்துவிடுகிறோம். கண் நரம்புகள் பாதித்து சிறு வயதிலேயே கண்ணாடி போடுபவர்கள் இப்போது மிக அதிகம்.

குடும்பத்தில் கண்குறைபாடு இருந்தால் அது உங்களுக்கும் வரலாம். உணவினால் மாலைக் கண் நோயினால் உண்டாகும் பார்வைக் கோளாறை தடுத்து கண் பார்வையை அதிகரிக்கச் செய்யும் வாய்ப்புகள் அதிகம்.

நல்ல உணவுகள் கண் பார்வையை அதிகப்படுத்தும். நரம்புகளை வலுப்படுத்தும். ஆரோக்கியமான புரதம் மற்றும் விட்டமின்கள் கண்களுக்கு சேரும்போது வயதானாலும் தெளிவாக பார்க்க முடியும் .

கீழே சொல்லப்பட்டிருக்கும் உணவுகளை சாப்பிட்டால் உங்கள் கண்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் பார்வையை அதிகரிக்கச் செய்யும்.


கிவி மிகச் சிறந்த சத்துக்களை கொண்டது. கண்களில் உண்டாகும் சிரமம் மற்றும் அழுத்தத்தை குறைக்கும். கண் பார்வையை தெளிவுபடுத்தும்.
ஆரஞ்சில் அதிக விட்டமின் சி உண்டு. கண்களில் உண்டாகும் செல்சிதைவுகளை தடுக்கிறது. கண் பார்வையை அதிகரிக்கச் செய்யும்.
கேரட் கண்ணிற்கான சிறந்த உணவு. அதிலுள்ள பீட்டா கரோடின் கண் பார்வையை தூண்டும். தினமும் ஒரு கேரட் சாப்பிடுங்கள்.முடிந்த வரை வாரம் ஒரு நாட்களாவது சாப்பிடுங்கள்
கலப்படமில்லாத மஞ்சள் உங்களுக்கு பலவித நோய்களிலுருந்து காக்கிறது. ஆனால் நாம் துரதிருஷ்டவசத்திடம் இருக்கிறோம்.
ராசயனங்கள் கலந்த மஞ்சள்தான் வணிகத்தில் கிடைக்கிறது. ஆகவே மஞ்சள் பொடி ரெடிமெட்டாக வாங்காமல் மஞ்சள் கிழங்கை வாங்கி பொடி செய்து கொள்ளுங்கள். இது கண்களில் 40 வயதிற்கு மேல் கேடராக்ட் வருவதை தடுக்கும்.
முட்டையை தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள். நாட்டு முட்டைகளையே வாங்கிடுங்கள். இவை கண் பார்வையை தூண்டும். கிட்டப் பார்வை தூரப் பார்வைகளை விரட்டலாம்.
இதுவும் கண்பார்வையை அதிகரிக்கச் செய்யும் சிறந்த உணவுகளில் ஒன்றாகும். குழந்தைகளுக்கு கொடுத்து வந்தல் பின்னாளில் வரும் குறைபாடு பிரச்சனைகள் வராது.
வேர்க்கடலை, பாதாம், முந்திரி ஆகியவை கண்பார்வையை அதிகரிக்கச் செய்யும். விட்டமின் ஈ அதிகம் இருக்கிறது. கண்பார்வைக்கு விடமின் ஈ யும் அவசியமான ஒன்றாகும்.

கருத்துரையிடுக Disqus

 
Top