இந்த முட்டையில் கல்சியம் காபனேட், ஜெலட்டின் மற்றும் அலுமினியம் உட்பட, மேலும் சில ரசாயனங்களும் சேர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
மஞ்சள் கருவின் மேலே கல்சியம் காபனேட் மற்றும் சில ரசாயனங்களின் உதவியால் வெள்ளைக்கரு உருவாக்கப்படுகிறது. மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைக் கருவுக்கான ரசாயனங்களை ஊற்றி ஒருமணி நேரம் காயவைத்த பின்னர், ‘பார்பின்’ மெழுகில் தோய்தெடுக்கப்பட்ட, போலி முட்டைக்கான செயற்கை ஓடு பொருத்தப்படுகிறது.
இவ்வாறான முட்டைகள், சீனாவில் பல வருடங்களுக்கு முன்பே, சந்தைக்கு வந்து விட்டமை குறிப்பிடத்தக்கது.
இனங்காண்பது எப்படி?
என்னதான் நிஜ முட்டைகள் போன்று, போலி முட்டைகள் தயாரிக்கப்பட்டாலும், அவற்றில் உண்மை முட்டைக்கு மாற்றமான சில விடயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில், பின்வரும் விதமாக போலி முட்டைகளை இனங்காண முடியும்.
01. சாதாரண முட்டையை விடவும் போலி முட்டையானது, சற்று பளபளப்பாக இருக்கும்.
01. சாதாரண முட்டையை விடவும் போலி முட்டையானது, சற்று பளபளப்பாக இருக்கும்.
02. போலி முட்டையின் ஓட்டினை கையால் தொடும் போது, சற்று கரடுமுரடானதாக இருக்கும்.
03. போலி முட்டைகளை குலுக்கும் போது, சத்தமொன்றினைக் கேட்க முடியும்.
04. உண்மையான முட்டையிலிருந்து பதனிடப்படாத இறைச்சி வாசனையை உணர முடியும்.
05. சாதாரண முட்டையை மெதுவாகத் தட்டும் போது எழும் மிருதுவான சத்தமானது, போலி முட்டையிலிருந்து எழும் சத்தத்தினை விடவும் அதிகமாக இருக்கும்.
06. போலி முட்டையை உடைத்த சிறிது நேரத்தில், மஞ்சள் கருவும் – வெள்ளைக் கருவும் ஒன்றாகக் கலந்து விடும். காரணம், இந்த இரண்டும் ஒரே வகையான மூலப் பொருட்களைக் கொண்டுதான் தயாரிக்கப்படுகின்றன.
07. நிஜ கோழி முட்டையின் ஓட்டைவிட எளிதாக உடையக் கூடியது இந்த போலி முட்டை ஓடு.
08. ஆப் பாயில் போடும் போலி முட்டையின் அழகு தெரிய வருகிறது. மஞ்சள் கரு கொஞ்சம்கூட சிதறாமல் பந்துபோல் முழுதாக நிமிர்ந்து நிற்கிறதாம். மேலும், வெள்ளைக்கரு பரவும்போது நுரையும் அதிகமாக எழுகிறது.
ஏற்கனவே, சீனா – போலி அரிசியைத் தயாரித்து சந்தைக்கு விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக Facebook Disqus