0
காரில் வெளியூர் மற்றும் சாகசப் பயணங்கள் செல்லும்போது வழியை கேட்டு கேட்டு செல்வது பெரும் தொல்லையான விஷயம். முகம் தெரியாத புதிய ஊர்களில், புதிய நபர்களிடம் வழி கேட்டு செல்வதும் சில சமயம் ஆபத்தை தரும் விஷயமாகிவிடும்.அதேபோன்று, இரவு நேரங்களில் புதிய இடங்களுக்கு செல்லும்போது வழி தெரியாமல் அல்லாடுவது பெரும் சிரமம். இந்த பிரச்னைக்கு அருமருந்தான தீர்வு ஜிபிஎஸ் சாதனம்தான்.

ஆம், காரில் ஜிபிஎஸ் சாதனம் இருந்தால், யாரிடமும் வழிகேட்கும் அவசியமில்லை. மிக துல்லியமாக சென்று சேரலாம். ஓட்டுனரின் கவனத்தை சிதறாமல் இருப்பதற்காக, குரல் வழிகாட்டு வசதியும் உள்ளது.

அதுமட்டுமின்றி, சில சாதனங்களில் வழியில் உள்ள பெட்ரோல் நிலையங்கள், ஓட்டல்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் பற்றிய விபரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். விற்பனையில் இந்தியாவில் முன்னிலை வகிக்கும் டாப் - 5 நேவிகேஷன் சாதனங்களின் விபரங்களை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.
 01. மேப்மை இண்டியா LX140WS நேவிகேஷன் சாதனம்
விலை: ரூ.4,899[ஃப்ளிப்கார்ட் தளம்]
கார்களுக்கான ஜிபிஎஸ் வசதியை அறிமுகம் செய்து, பிரபலப்படுத்தியதில் முதன்மையான நிறுவனம். இந்த நிறுவனத்தின் LX140WS ஜிபிஎஸ் சாதனம் நம் நாட்டு வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக இருக்கிறது.
மேப்மை இன்டியா LX140WS கார் ஜிபிஎஸ் சாதனத்தில் 10.9செமீ அளவுடைய டிஎஃப்டி திரை உள்ளது. எந்தவொரு கோணத்திலிருந்து பார்த்தாலும் தெளிவாக வரைபடங்களை காண முடியும். நாடு முழுவதும் தெருக்களை துல்லியமாக காட்டும் அளவுக்கு அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் குரல் வழிகாட்டு வசதியும் உள்ளது. வழிகாட்டு சாதனமாக மட்டுமின்றி, இ-புக் ரீடராகவும், வீடியோ பிளேயர், மியூசிக் பிளேயராகவும் பயன்படுத்த முடியும்.
விலை: ரூ.12,999[அமேஸான் தளம்]
பெரிய திரையுடன் கூடிய ஜிபிஎஸ் சாதனம் வேண்டுவோர்க்கு இது மிகச் சிறப்பான சாய்ஸ். விற்பனையிலும் இந்த சாதனம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்த ஜிபிஎஸ் சானத்தில் 17.8 செமீ டச்ஸ்கிரீன் உள்ளது. நாட்டின் 7,000 நகரங்களின் விபரங்களை உள்ளடக்கிய மேப்மை இண்டியா வரைபடம் அப்லோட் செய்யப்பட்டு இருக்கிறது. புளுடூத் வசதி மூலமாக ஹேண்ட்ஸ்ப்ரீ அழைப்பு வசதியும், ஏவிஐஎன் போர்ட் மூலமாக ரிவர்ஸ் கேமராவை இணைக்க முடியும். வீடியோ பிளேயர், மியூசிக் பிளேயர் உள்ளிட்ட வசதிகளும் உண்டு. இதிலுள்ள மெமரி கார்டு ஸ்லாட் மூலமாக எம்பி3, எம்பி4 உள்ளிட்ட பார்மெட்டுகள் கொண்ட மியூசிக் பைல்களை இயக்கி பார்க்க முடியும். ஓர் ஆண்டுக்கான வாரண்டி வழங்கப்படுகிறது.
விலை: ரூ.8,750 [அமேஸான் தளம்]
அடக்கமான வடிவில், எளிதாக இயக்கும் வசதிகளுடன் கிடைக்கிறது. ஆனால், இதிலும் பல பயன்பாட்டு கருவியாக பயன்படுத்திக் கொள்ளும் வசதியும் உள்ளது.
இந்த சாதனத்தில் 10.9செமீ டிஎப்டி டச்ஸ்கீரன் திரை உள்ளது. சாலை சந்திப்புகளில் சரியான தடத்தை பின்பற்றி செல்வதற்கான வசதியும், எந்தவொரு கட்டணமும் இல்லாமல் தொடர்ந்து வரைபடங்களை அப்டேட் செய்து கொள்ளும் வசதியும் உண்டு. வேகக் கட்டுப்பாடு குறித்து எச்சரிக்கும் வசதி, குரல் வழிகாட்டும் வசதி, மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளிட்டவையும் உண்டு.
விலை: ரூ.11,215[அமேஸான்]
சற்று பெரிய திரையுடன் கூடிய கார்மின் நிறுவனத்தின் தயாரிப்பு. இதனை, செங்குத்தாகவும், படுக்கைவாட்டிலும் பொருத்தி பயன்படுத்த முடியும்.
இந்த சாதனத்தில் 15.4செமீ டிஎஃப்டி டச்ஸ்கிரீன் உள்ளது. பயணங்களை திட்டமிடுவதற்கான வசதி, சாலை சந்திப்புகளில் சரியான தடத்தை பின்பற்றி செல்வதற்கான வசதி, குரல் வழிகாட்டும் வசதி உளிட்டவையும் இருக்கிறது.
விலை: ரூ.5,774[அமேஸான் தளம்]
நேவிகேஷன் தயாரிப்பில் சிறப்பான மற்றொரு பிராண்டு டாம்டாம். சரியான விலையில், அதிக வசதிகளுடன் நேவிகேஷன் சாதனங்களை வழங்கி வருகிறது.
இந்த சாதனத்தில் 12.7 செமீ டிஎஃப்டி டச்ஸ்கிரீன் திரை உள்ளது. மொத்தம் 13 இந்திய மொழிகளில் குரல் வழிகாட்டும் வசதி, புளுடூத் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

கருத்துரையிடுக Disqus

 
Top