0
உங்களுக்கு மிகப்பிடித்தமான வீடியோவை யூட்யூப் இல் காண்பதென்பது தற்கால ஆகச்சிறந்த பொழுதுபோக்குகளில் ஒன்றாகும். எனினும், யூட்யூப்பில் வீடியோக்களை பார்க்கும் போது நமக்கு மிகவும் எரிச்சலூட்டும் விஷடயங்களில் ஒன்றாக பப்பரிங் திகழ்கிறது. ஆன்லைனில் விடியோக்கள் காண்கையில் பப்பரிங் நிகழ்வது பொதுவானது தான் ஆனால், மிக மிக மெதுவான ப்பப்ரிங் நிகழ்வது பொதுவான காரியமல்ல.

நாம் அடிக்கடி மொபைல் தரவு வீணடிக்காமல் வைஃபையில் யூட்யூப் வீடியோக்களை பார்க்கிறோம் எனினும், அது எப்போதும் வேகமானதாக இருக்கும் என்று நிரூபித்ததில்லை.

அதெல்லாம் ஒருபக்கமிருக்க அனைத்து யூட்யூப் விடியோக்களையும் நிச்சயமாக ப்பப்ரிங் இன்றி நேரத்தை வீணாக்காமல் பிளே செய்யும் ஒரு தந்திரம் உள்ளது அதை முதலில் தெரிந்துக்கொள்வோம்.

வழிமுறை #01 

 

வழிமுறை #01

அனைத்து யூட்யூப் பயனர்களும் செய்ய வேண்டியது என்னவென்றால் கூகுளக் க்ரோம் அல்லது மொஸில்லா பயர்பாக்ஸ் ப்ரவுசரில் இருந்து உங்கள் யூட்யூப் எக்ஸ்டென்சனிற்கான 'ஸ்மார்ட்வீடியோ'வை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.

வழிமுறை #02

ஸ்மார்ட்வீடியோ யூட்யூப் எக்ஸ்டென்சன் இன்ஸ்டால் செய்யப்பட்டதும் பயனர் யூட்யூப் சென்று பட்டியலில் கிடைக்கப்பெறும் எந்தவொரு விடீயோவையும் பிளே செய்யலாம். உங்கள் பிசியின் மவுஸ் கர்சரை யூட்யூப் விடீயோக்களுக்கு மத்தியில் நகர்த்தி வைக்கும் பொழுது ஒரு சிறிய செவ்வக பெட்டி பாப் அப் ஆவதை காண முடியும்.

வழிமுறை #03

பயனர் வெறுமனே வீடியோ ஸ்ட்ரீமிங் நிகழும் வலது பக்கத்தில் உள்ள க்ளோபல் ப்ரெபரன்சஸ் ஆப்ஷனை கிளிக் செய்வதின் மூலம் ஸ்மார்ட் பப்பர் பாக்ஸ்தனை அணுக இயலும்.

வழிமுறை #04

நீங்கள் ஸ்மார்ட் பப்பர் பாக்ஸ்தனை தேர்வு செய்த பின்னர் யூட்யூபில் எந்த விதமான வீடியோவையும் பப்பர் செய்து அதிவேக ஸ்ட்ரீமிங்கின் கீழ் பார்க்க இயலும்.

பின்னடைவு

இந்த செயல்முறையை பிசி அல்லது டெஸ்க்டாப்பில் மட்டுமே செயல்படுத்தப்பட முடியும். துரதிருஷ்டவசமாக, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல் பயனர்கள் இந்த நுட்பத்தை பயன்படுத்த முடியாது.

கருத்துரையிடுக Disqus

 
Top