நீங்கள் உங்கள் வாழ்க்கையை அனுபவிப்பது மற்றும் உங்களுடைய இலக்குகளை அடைய வேலை செய்வது ஆகிய இரண்டிற்கும் இடையே கிடந்து அல்லாடுகின்றீர்கள். பின்னர் ஏன் நீங்கள் கனவு கண்ட வெற்றியை அடையவில்லை.
கடின உழைப்பு மட்டுமே வெற்றி பெற ஒரே வழி என்று பெரும்பாலும் கூறப்படுகிறது. அது முற்றிலும் சரி. எனினும் நீங்கள் வெற்றி பெற கடின உழைப்பு விட வேறு சில காரணிகளும் தேவைப்படுகின்றது. நீங்கள் உங்களை அறியாமல் புரியும் சில தவறுகள், நீங்கள் உங்களுடைய முழுத் திறனை பயன்படுத்தவிடாமல் உங்களைத் தடுக்கின்றன.
அந்தத் தவறுகளை கண்டுபிடித்து திருத்திக் கொண்டால், வெற்றியானது உங்களிடம் நிரந்தரமாக வாசம் புரியும். எனவே வாழ்வில் வெற்றி பெற இங்கே குறிப்பிடப்பட்டுள்ள காரணிகளைப் பற்றி மேலே தொடர்ந்து படியுங்கள்.
நீங்கள் வெற்றி பற்றி மிகவும் ஆவலாக இருக்கின்றீர்கள்
உங்களுக்கு நீங்களே உண்மையாக இல்லை
எத்தனை முறை உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் உங்களுடைய குழு தெரிவித்த காரணத்திற்காக பிறருடைய கருத்துகளை ஒத்துக் கொண்டீர்கள் என எண்ணிப் பாருங்கள். மேலும் உங்களுடைய குழுவிடம் ஒரு மோதலை விரும்பாமல் அவர்களுடைய கருத்திற்கு எதிர்மறையான கருத்தை தெரிவிக்காமல் அமைதியாக இருந்து விட்டீர்கள் என்பதையும் எண்ணிப் பாருங்கள். உங்களுக்குச் சரி எனத் தோன்றினால் உங்களுடைய குழுவின் கருத்தில் இருந்து தனித்து, உங்களுடைய கருத்தை தெரிவிக்கத் தயங்காதீர்கள். அவ்வாறு தெரிவிக்கும் பொழுது நீங்கள் தனித்து விடப்பட்டாலும், நீங்கள் நீங்களாகவே இருப்பீர்கள்.
உங்களுடைய வேலையைப் பற்றி அதிகம் புலம்பாதீர்கள்
நம்முடைய உணர்வு, பேச்சு, எண்ணங்கள் ஆகிய அனைத்தும் நம்முடைய மனநிலையைப் பாதிக்கின்றது. இனிய எண்ணங்கள் நேர்மறை தாக்கத்தை உருவாக்கும். நீங்கள் உங்களுடைய வேலையைப் பற்றி அடிக்கடி புலம்புவீர்கள் எனில் கண்டிப்பாக அதை உடனே நிறுத்துங்கள். உங்களுடைய வேலையை, உங்களுடைய வாழ்க்கையை, மற்றும் உங்களுடைய முதலாளியை நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் மனது சொல்வதை கேட்பதில்லை
நீங்கள் தொடர்ந்து மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுகின்றீர்கள்
உங்களைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றி அதிகம் கவலைப்பட ஆரம்பித்தால், உங்களுக்கான வாழ்க்கைப் பந்தயத்தில் கண்டிப்பாகத் தோற்று விடுவீர்கள். எனவே தயவு செய்து உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். ஒரு சிறிய மற்றும் ஆரோக்கியமான போட்டி உங்களின் வாழ்க்கைக்கு மிகவும் நல்லது. ஆனால் பொறாமை உங்களைக் கண்டிப்பாக முன்னேற விடாது.
உங்களிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை
நீங்கள் உங்கள் வேலையை நேசிக்கின்றீர்கள் எந்த ஒரு இலக்கும் இன்றி அலைபாய்கின்றீர்கள். நீங்கள் உங்களின் தனிப்பட்ட வளர்ச்சியைப் பற்றி கவலைப்படுவதில்லை.
உங்களைச் சுற்றி நிறைய எதிர்மறை எண்ணங்கள் இருக்கிறது
உங்களைச் சுற்றி உள்ள மற்றவர்கள் உங்களின் வேலை மற்றும் உங்களைப் பற்றி தவறாக நினைத்தால், அது உங்களின் நம்பிக்கையைத் தகர்த்து உங்களின் உற்பத்தியைப் பாதிக்கிறது. நம்பிக்கையற்ற தன்மை மற்றும் எதிர்மறை எண்ணங்கள் நீங்கள் உங்களின் வேலையில் முழுமனதுடன் ஈடுபடுவதைக் கண்டிப்பாக தடுக்கும்.
நீங்கள் உங்கள் நாளின் முதல் பாதியை வீணடிக்கின்றீர்கள்
உங்களால் காலையில் படிக்க முடியாது மற்றும் பிற வேலை செய்ய இயலாது எனில் தயவு செய்து காலை வேளையை ஒரு வேலையும் செய்யாமல் வீணாக்காதீர்கள். நீங்கள் ஒரு இரவுப்பறவை எனில், குறைந்த முயற்சி தேவைப்படும் வேலைகளைக் காலை நேரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். மிகவும் கடினமான வேலைகளை மாலை நேரத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களிடம் ஆற்றல் குறைவாக இருக்கின்றது
ஒரு மணி நேரத் தீவிர உடற்பயிற்சியானது உங்களின் வாழ்க்கைமுறையால் பாழ்பட்ட உங்களின் உடல் நிலையைச் சரி செய்ய போதுமானது என நீங்கள் நினைக்கின்றீர்களா? நாம் அனைவரும் ஊட்டச்சத்து மற்றும் விட்டமின் குறைபாட்டுடன் இருக்கின்றோம் என்பதை உணராமல் இல்லை. நீங்கள் வண்டி ஓட்டி வீட்டிற்கு வந்த பிறகு உங்களுக்கு வரும் தலைவலியே உங்களின் உடல் நிலையை உங்களுக்கு உணர்த்தி விடும். வாழ்வில் வெற்றி பெற நம்முடைய உடலை உறுதியாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
கருத்துரையிடுக Facebook Disqus