இந்த நிலையில், ஒரே நேரத்தில் அதிக பயணிகள் செல்வதற்கு வசதியான ரயில் பெட்டிகளை இழுத்துச் செல்வதற்காக ரயில்களில் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த எஞ்சின்கள் பற்றிய சில சுவாரஸ்யமானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
இந்த
நிலையில், ஒரு நீராவி ரயில் எஞ்சினை 45 நிமிடங்கள் இயக்குவதற்கு அரை டன்
நிலக்கரி தேவைப்படுமாம். நிலக்கரியை ரயில் எஞ்சின் உலையில் எடுத்து எடுத்து
போடுவதற்காக கூடுதல் பணியாளர்களும் தேவைப்பட்டனர்.
தற்போது
டீசல் எஞ்சின்களும், மின்சார ரயில் எஞ்சின்களும் பயன்படுத்தப்படுகின்றன.
பயன்பாட்டில் இருக்கும் பெரும்பாலான டீசல் எஞ்சின்கள் டீசல்- எலக்ட்ரிக்
என்ற முறையில்தான் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. அதாவது, டீசல் ரயில்
எஞ்சின்களில் உண்மையிலேயை ரயிலை இயக்குவது மின் மோட்டார்கள்தான்.
டீசல்
எஞ்சின்களின் சக்தி வெளிப்படுத்தும் திறனைவிட நேரடியாக மின்சாரத்தில்
இயங்கும் ரயில் எஞ்சின்களின் சக்தியை வெளிப்படுத்தும் திறன் மிக அதிகம்.
எனவே, அதிவேக ரயில்களில் மின்சார ரயில் எஞ்சின்கள் பயன்படுத்தப்படுகின்றன.
உலகின்
மிகப்பெரிய நீராவி ரயில் எஞ்சின் பிக் பாய் 4014 என்பதே. 345 டன் எடை
கொண்ட இந்த ரயில் எஞ்சின் அதிகபட்சமாக 6,000 குதிரைசக்தி திறனை
வெளிப்படுத்தும்.
உலகின்
மிகவும் சக்திவாய்ந்த ரயில் எஞ்சின் ரஷ்யாவிடம் உள்ளது. அந்த மின்சார
ரயில் எஞ்சின் அதிகபட்சமாக 18,000 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும்.
அதேபோன்று,
ரயில் எஞ்சின்கள் அதிகபட்சமான வேகத்தில் திறன் கொண்டவையாக இருந்தாலும்,
தண்டவாளத்தின் தன்மையை பொறுத்து குறிப்பிட்ட வேகத்திற்கு மிகாமல்
இயக்கப்படுகின்றன. மேலும், அதிவேகத்தில் ரயில் எஞ்சின்களை
கட்டுப்படுத்துவதும் சிரமம் என்பதால் இடத்தை பொறுத்தும், தண்டவாளத்தின்
உறுதித்தன்மையை பொறுத்தும் ரயில் வேகம் நிர்ணயிக்கப்படுகிறது.
மலைப்பாங்கான
இடங்கள், சரிவான நில அமைப்பு கொண்ட பகுதிகள், அதிக பெட்டிகள்
இணைக்கப்பட்ட ரயில்களை முன்னால் ஒரு எஞ்சினும், பின்னால் இருந்து உந்தித்
தள்ளுவதற்கு மற்றொரு எஞ்சினும் பயன்படுத்தப்படும்.
கருத்துரையிடுக Facebook Disqus