குறட்டை ஒரு பொதுவான பிரச்சனை. இப்பிரச்சனையால் ஏராளமானோர்
அவஸ்தைப்படுகின்றனர். குறிப்பாக உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள் தான்,
அருகில் யாரும் படுக்க முடியாத அளவில் இரவில் பலத்த சப்தத்துடன் குறட்டை
விடுவார்கள்.
குறட்டை
எதனால் வருகிறது? மூச்சுக்குழாயில் காற்று செல்லும் போது ஏற்படும்
இடையூறால் தான் வருகிறது. இந்த குறட்டை பிரச்சனை சுவாச பிரச்சனை
உள்ளவர்களுக்கும், உயர் இரத்த அழுத்தம், பகல் நேர தூக்கம் மற்றும்
அதையொட்டிய சோர்வு மற்றும் உடல் பருமனால் கஷ்டப்படுபவர்களுக்கு ஏற்படும்.
இப்போது
குறட்டைப் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும் உணவுகள்
பட்டியலிடப்பட்டுள்ளன. அதை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் குறட்டை
பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
தேன்
தொண்டையில்
உள்ள வீக்கத்தால், குறட்டை வந்தால், அதை தேன் சரிசெய்யும். இதற்கு தேனில்
உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் தான் காரணம். எனவே குறட்டை பிரச்சனை
இருப்பவர்கள், இரவில் படுக்கும் முன் பாலில் தேன் கலந்து குடிக்க,
அப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
மீன் மற்றும் மீன் எண்ணெய்
குறட்டை
பிரச்சனை இருப்பவர்களுக்கு மீன் நல்ல நிவாரணம் அளிக்கும். மீனில் ஒமேகா-6
மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இவை நல்ல கொழுப்புக்களை
உற்பத்தியை செய்து, கெட்ட கொழுப்புக்களைத் தடுத்து நிறுத்தும். இதனால்
தொண்டை சுற்றியுள்ள பகுதியில் கொழுப்புக்களின் தேக்கம் குறைந்து, குறட்டை
பிரச்சனை நீங்கும்.
சோயா பால்
மாட்டுப்
பாலுக்கு பதிலாக, சோயா பாலைக் குடியுங்கள். ஏனெனில் மாட்டுப் பாலில் உள்ள
புரோட்டீன், சிலருக்கு சுவாசப் பாதையில் அலர்ஸியை ஏற்படுத்தி, குறட்டை
பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
மஞ்சள்
மஞ்சளில்
உள்ள அழற்சி எதிர்ப்புப் பொருள், சுவாசப் பாதையில் இருக்கும் அழற்சியைத்
தடுக்கும். எனவே பாலுடன் மஞ்சள் தூள் கலந்து குடித்து வர, குறட்டை
பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
கார்போஹைட்ரேட் குறைவான டயட்
கார்போஹைட்ரேட்
குறைவாக உள்ள உணவுகளை உண்பதன் மூலம், இன்சுலின் அளவு சீராக்கப்பட்டு,
குறட்டை பிரச்சனை குறையும். எனவே குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட,
கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுங்கள்.
கருத்துரையிடுக Facebook Disqus