0
Image result for Donald Trump about car
எதிர்பார்ப்புகளையும், கருத்துக் கணிப்புகளையும் அடித்து நொறுக்கி அமெரிக்காவின் புதிய அதிபராக அரியணை ஏற இருக்கிறார் டொனால்டு டிரம்ப். ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி கட்டி பறக்கும் தொழிலதிபரான டிரம்ப் அரசியலில் குதித்து அமெரிக்காவின் புதிய அதிபராகவும் முடிசூட்டிக் கொள்ள இருக்கிறார்.


நம்மூர் அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரத்திற்காக சொகுசு வாகனங்களை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், அவர் தனது சொந்த விமானத்தையே தேர்தல் பிரச்சார வாகனமாக மாற்றியதுடன், தேர்தலில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான டிரம்ப் வாகன பிரியர். அவரிடம் பல விலை உயர்ந்த கார்கள் இருக்கின்றன. அவற்றை இந்த செய்தியில் காணலாம்.

லம்போர்கினி டயாப்லோ விடி

லம்போர்கினி கூன்டாச் மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் 2000 முதல் 2001 வரை லிமிடேட் எடிசன் மாடலாக தயாரிக்கப்பட்டது. அதில், ஒன்றை டிரம்ப் வாங்கி வைத்திருக்கிறார்.
இந்த காரில் இருக்கும் 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 543 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க்கையும் வழங்கும். தற்போதைய லம்போர்கினி கார்கள் போன்று எளிதாக இயக்க முடியாதாம். அதிக அனுபவம், நிதானமும் தேவைப்படுமாம்.

ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம்

டிரம்ப் போன்ற மிகப்பெரிய பில்லியனர்களின் கார் கலெக்ஷனில் ரோல்ஸ்ராய்ஸ் இல்லாமல் நிறைவு பெறாது. ஆம், டிரம்பிடம் ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் கார் ஒன்று உள்ளது. மேலும், ஃபான்டம் காரின் ரசிகராம் டிரம்ப். இதனால், தன்னிடம் இருந்த ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் சீரிஸ் 1 காரை மாற்றி, ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் சீரிஸ் 2 காரை வாங்கியிருக்கிறார்.
ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் சீரிஸ் 2 காரில் 6.75 லிட்டர் வி12 எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 453 பிஎச்பி பவரையும், 720என்எம் டார்க் திறனையும் அளிக்க வல்லது. கிட்டத்தட்ட 3 டன் எடையுடை இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 6 வினாடிகளில் தொட்டுவிடும் வல்லமை கொண்டது. ஃபான்டம் மீதுள்ள பிரியத்தால் இந்த காரை சொந்தமாக ஓட்டுவதிலும் அவருக்கு அலாதி பிரியம்.

மெர்சிடிஸ் எஸ்எல்ஆர்

இந்த கார் 2003ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டபோது மெக்லாரன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டது. மெர்சிடிஸ் 300எஸ்எல் காரை போன்று கல்விங் எனப்படும் மேல்நோக்கி திறக்கும் கதவு அமைப்புடன் வந்தது.


டிரம்பிற்கு பிடித்தமான கார்களில் ஒன்றான இந்த விசேஷமான காரில் 5.4 லிட்டர் வி8 எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 617 பிஎச்பி பவரையும், 780என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த காரில் பயணிப்பதும், ஓட்டுவதும் டிரம்பிற்கு பிடித்தமானதாக கூறப்படுகிறது.

ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் க்ளவுடு

அரிய வகை பாரம்பரிய கார் மாடல் இது. 1955ம் ஆண்டு முதல் 1966 வரை மூன்று தலைமுறை மாடல்களாக மேம்படுத்தப்பட்டு உற்பத்தியில் இருந்தது. மிக நளினமான வளைவு நெளிவுகளுடன் வடிவமைக்கப்பட்ட கார் மாடலாக வாடிக்கையாளர்களை வசீகரித்தது.

இந்த காரில் 4.9 லிட்டர் வி8 எஞ்சின் உள்ளது. இந்த காரின் சக்திவாய்ந்த எஞ்சின் மணிக்கு 183 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. வருகிற ஜனவரி மாதம் 20ந் தேதி டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். அதன் பிறகு அவர் அமெரிக்க அதிபருக்கான அதிகாரப்பூர்வ காரில்தான் பயணிப்பார்.

செவர்லே சப்அர்பன் என்ற எஸ்யூவி காரும் அவரிடம் உள்ளது. செவர்லே, ஹோல்டன் மற்றும் ஜிஎம்சி ஆகிய மூன்று பிராண்டுகளிலும் தயாரிக்கப்பட்ட மிகவும் வெற்றிகரமான மாடல். 1935ம் ஆண்டு இந்த காரின் உற்பத்தி துவங்கி, தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது 12வது தலைமுறை மாடலாக விற்பனையில் உள்ளது.

இந்த காரில் சக்திவாய்ந்த 6.6 லிட்டர் வி8 எஞ்சின் பயன்படுத்ப்பட்டு இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த வாகனங்கள் ராணுவ பயன்பாட்டிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

செவர்லே கமாரோ மஸில் வகை காரும் டிரம்பிடம் உள்ளது. 1966ம் ஆண்டு இந்த காரின் உற்பத்தி துவங்கப்பட்டு தொடர்ந்து விற்பனையில் வெற்றிகரமான மாடலாக இருந்து வருகிறது.

டிரம்ப் மிகவும் நேசிக்கும் மஸில் ரக கார் மாடல் இந்த காரில் 6.2 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 400பிஎச்பி பவரை வழங்க வல்லது.

இது முழுமையான வகை சொகுசு எஸ்யூவி. 1999ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. மிக வலிமையான இதன் தோற்றம் பார்ப்போரை மிரள வைக்கும். அதனால்தான் என்னவோ இந்த காரில் பயணிப்பது டிரம்பிற்கு மிகவும் பிடித்தமான விஷயமாம்.


இந்த காரில் இருக்கும் 6.0 லிட்டர் வி8 எஞ்சின் அதிகபட்சமாக 345 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் மிக தாராள இடவசதி கொண்ட கார் இது.

பெரும்பாலான அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தும் கேடில்லாக் லிமோ வகை காரை ஏற்கனவே பயன்படுத்தி வருகிறார் டொனால்டு டிரம்ப். ஆம், அவரிடம் கேடில்லாக் லிமோசின் காரும் உள்ளது.


1980ம் ஆண்டிலேயே டொனால்டு டிரம்ப் கேடில்லாக் லிமோசின் காரை ஆர்டர் செய்து வாங்கினார். அவரது பெயரில் சிறப்பு பதிப்பாக கொடுக்கப்பட்ட அந்த காரில் நம்ப முடியாத அளவிற்கு வசதிகள் இருந்தன.

Rolls-Royce Phantom: Not a Mirage 
2011 Chevrolet Camaro Indianapolis: Pace Car  

Lamborghini Diablo: A Devil of a Car 
Mercedes-Benz SLR McLaren 

Cadillac Escalade 
Tesla  

Maybach 
Mercedes-Benz S600 

Ferrari 
Cadillac Allante 

கருத்துரையிடுக Disqus

 
Top