ஜிகு...ஜிகுன்னு மினுக்கும் கலர்புல் லைட்டுகள்... பளபளவென்று வெள்ளி
பேப்பரால் சுற்றப்பட்ட இனிப்பு வகைகள்... பார்த்தாலே வாயில் எச்சில்
சுரக்கும். வாங்கி சாப்பிட்டால்... அட ஒரு நிமிஷம் இருங்க... இங்குதான்
ஒரு ஆபத்து ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ரே...ரே.. என்று கண் பொத்தி
விளையாடுகிறது.
அட என்னப்பா... இது ஸ்வீட் சாப்பிட்டால் சுகர் ஏறிடும் என்று சொல்ல வர்றீங்களா என்று கேட்கிறீர்களா? இல்லீங்க... உடல் நலத்திற்கு உலை வைக்க வாங்க... வாங்க என்று அந்த ஸ்வீட்ஸ் கூப்பிடுது என்றுதான் சொல்ல வேண்டும். விஷயம் என்ன தெரியுங்களா?
இது தீபாவளி நேரம். ஸ்வீட்ஸ் விற்பனையில் பெரிய பெரிய ஸ்வீட்ஸ் ஸ்டால்கள் இறங்கி உள்ளன. எவ்வளவு விளம்பரம்... விட்டால் அமெரிக்காவில் கிடைக்கும் ஸ்வீட்சை இங்கே கொண்டு வந்தாலும் கொண்டு வந்து விடுவார்கள். அந்தளவிற்கு ஏராளமான ஸ்வீட்ஸ் வகைகள் கடைகளை அலங்கரித்து வருகின்றன.
இதில்தான் இருக்கிறது விஷமான விஷயம். என்ன தெரியுங்களா? பார்த்த உடனே வாங்கி சாப்பிட வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டும் அந்த ஸ்வீட்ஸ் மேல் அழகாக... வெகு அழகாக ஒரு சில்வர் தாள் உட்கார்ந்து இருக்கும். ஸ்டாலில் அந்த ஸ்வீட் ஸ்டாண்டில் போகஸ் லைட்டுகள் மத்தியில் பளபளவென்று. ஸ்வீட்மேல் உள்ள அந்த வெள்ளி பேப்பர் என்னவென்று ஸ்வீட் கடையினரிடம் கேட்டுப்பாருங்க... சார் இது என்ன தெரியுங்களா? உண்மையிலேயே வெள்ளிப்பேப்பர்தான். உங்க உடல் ஆரோக்கியத்திற்கு நாங்க கேரண்டி என்பார்கள்.
அங்குதான் உள்ளது வினை. இந்த வெள்ளி இழை பேப்பர்கள் அனைத்து ஸ்வீட்களில் மேலும் இருக்காது. சில ஸ்வீட்ஸ் வகைகள் மீது மட்டும்தான் அப்ளை செய்யப்பட்டு இருக்கும். இப்படி ஸ்வீட்ஸ் மேலுள்ள அந்த வெள்ளி இழைகள் நம் உடலுக்குள்தானே செல்கிறது. அட வெள்ளி நல்லதுதானே என்று கேட்பீர்கள். சரி அது வெள்ளிதான் என்று உங்களுக்கு எப்படி தெரியும். அதான் கடைக்காரர் சொல்கிறாரே... அவர் என்ன ஏமாற்ற போகிறாரா என்று பதில் சொல்லாதீர்கள்.
அது உண்மையிலேயே வெள்ளி இழை பேப்பராக இருந்தால் ரொம்ப சந்தோஷம். காரணம் அதனால் உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அப்ப வேறு என்னவாக இருந்தால் பாதிப்பு என்கிறீர்களா? இதோ விஷயத்திற்கு வருவோம். அலுமினிய இழை பேப்பராக இருந்து விட்டால்... உங்கள் உடல் பஞ்சர்தான். நோய் பாதிப்புக்கு உள்ளாவது நிச்சயமோ...நிச்சயம்.
வெள்ளியையும், அலுமினியத்தையும் பேப்பர்போல் செய்து விட்டால் இரண்டுக்கும் எவ்வித வித்தியாசமும் கண்டுபிடிக்க முடியாது. பார்ப்பதற்கு பளபளவென்று ஒன்றுபோல்தான் இருக்கும். வெள்ளி இழைகளால் செய்யப்பட்ட பேப்பர் ஸ்வீட் மீது ஒட்டப்படுவதால் அவை உடலுக்கு எவ்வித தீங்கையும் செய்யாது. ஆனால் அலுமினிய பேப்பர்கள் தீங்கு செய்யவே பிறப்பெடுத்தவை போன்று.
அப்புறம் எப்படிதான் கண்டுபிடிப்பது என்று டென்ஷனாக கேட்கிறீர்களா? இதோ சொல்லிவிடுவோம. ஒரு சின்ன பரிசோதனை செய்து பாருங்க... சாயம் வெளுத்து விடும். அந்த பரிசோதனை இதுதான். வெள்ளி இழை மிக மெல்லியதாக தான் வெள்ளி என்பதை காட்டிக்கொள்ளாமல் தன்னடக்கத்தோடு இருக்கும். ஸ்வீட்டின் மீது உள்ளது வெள்ளிதானா என்பதை கண்டறிய இரண்டு விரல்களுக்கு இடையில் அந்த வெள்ளி பேப்பரை எடுத்து தேய்த்தால் அது தானாக கரைந்து தேய்ந்து அழிந்துவிடும்.
ஆனால் அலுமினிய இழை பேப்பரோ... அப்படி இல்லை... அழியாது உருண்டு திரண்டு ஒரு உருண்டையாக மாறிவிடும். இதிலிருந்து ஸ்வீட் மீது உள்ளது வெள்ளியா... இல்லை... அலுமினியமா என்று கண்டறிந்து விடலாம். அலுமினிய இழைகளோடு ஸ்வீட்சை சாப்பிடுவதால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் தெரியுங்களா?
ரத்தத்தோடு கலந்து சரும நோய்கள் ஏற்படும். நுரையீரல்களில் உள்ள காற்று அறைகளை பாதித்து மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். பாராதைராய்டு என்று சொல்லப்படும் கழுத்தின் முன்பகுதியில் இருக்கும் சுரப்பியை செயல்படவிடாமல் தடுத்து விடும். இப்படி பல பின்விளைவுகளை ஏற்படுத்தி விட்டு அமைதியாக இருந்துவிடும் அலுமினிய இழை பேப்பர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
என்ன மின்னுவதெல்லாம் பொன்னில்லை என்கிறீர்களா? அதிக லாபம் சம்பாதிக்க நினைக்கும் சிலர்தான் இப்படி உணவு பொருட்களை விஷமாக்கி விற்கின்றனர். அதற்காக அனைவரும் இப்படி செய்வதில்லை. யார் எப்படி இருந்தாலும்... நம் உடல் நலனில் நாம்தானே முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். கவனம்...

கருத்துரையிடுக Facebook Disqus