0

 


தூங்கும் போது பெரும்பாலானோர் வாயை திறந்தவாறு தூங்குவார்கள். வேண்டுமென்றே யாரும் அப்படி தூங்குவதில்லை. இருப்பினும் இப்படி வாயைத் திறந்தவாறு தூங்குவதால் தான், தூங்கி எழுந்த பின் அனைவரது வாயும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.

வாயை திறந்தவாறு தூங்கும் போது, பாதுகாப்பை வழங்கும் எச்சில் வறட்சியடைவதோடு, அது பற்களையும் பாதிக்கிறது. இது வாயை திறந்து தூங்குவது எப்படி பற்களை பாதிக்கிறது என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


இயற்கையாகவே எச்சில், வாயில் அமில உற்பத்தியை அதிகரிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும்.
தூங்கும் போது வாயை திறந்தவாறு தூங்குவதால் வாயில் அமில அளவுகள் அதிகரித்து, பல் அரிப்பு மற்றும் பற்கள் சொத்தையாகஆரம்பமாகும்.
பொதுவாக வாயில் எச்சில் குறைவாக சுரக்கும் போது, பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்யப்படும் அமில அளவுகள் அதிகரித்து, பற்கள் வேகமாக சொத்தையாகும்.
இந்நிலையில் தினமும் 8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ளும் போது, நாம் நம் பற்களுக்கு எவ்வளவு தீங்கை விளைவிக்கிறோம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.
ஆஸ்துமா அல்லது தூக்க பிரச்சனை இருப்பவர்களுக்கு, பற்களில் சொத்தை இருக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கும். குறிப்பாக வாயின் பின்புற பக்கத்தில் தான் சொத்தைப் பற்கள் இருக்குமாம்.
எனவே நேராக படுப்பதைத் தவிர்த்து, இடது பக்கமாக தூங்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் வாயை திறந்தவாறு தூங்குவதைத் தவிர்ப்பதுடன், பற்கள் பாதிப்படைவதையும் தடுக்கலாம்.
Dailyhunt

கருத்துரையிடுக Disqus

 
Top