0


கற்றாழை பல்வேறு விதமான சருமப் பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. உங்களுக்கு சருமப் பிரச்சனை இருந்தால் இந்த கற்றாழை ஜெல்லை முதலில் பயன்படுத்திப்பாருங்கள். அப்படி சரியாக வில்லையென்றால் நீங்கள் வேறு மாற்றுக்களைத் தேடலாம்.

இது சரும வியாதிகளையும் குணப்படுத்தும் என்பதால் இதனை சோப்பாக பயனபடுத்தினால் பல அருமையான பலன்களை உங்களுக்கு தரும்.

இந்த சோப் நல்ல ஈரப்பதத்தை தந்து வறண்டுபோகாமல் பாதுகாக்கும். இது மிகவும் மென்மையான ஒன்று என்பதால் சற்றே உணர்வு அதிகம் உள்ள மென்மையான சருமத்திற்கும் ஏற்ற ஒன்றாக இருக்கும்.



1 .ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொத்திக்க வைக்கவும்.

அதில் சில தேக்கரண்டி காஸ்டிக் சோடாவை சேர்க்கவும். அதை நன்கு ஒரு மர கரண்டி கொண்டு கலக்கவும் இதனால் அது கடினமாக அல்லது கெட்டியாக மாறாமல் இருக்கும்.

2. கற்றாழை இலைகளில் இருந்து உள்ளே உள்ள கூழை பிரித்தெடுங்கள்

3. பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய், மற்றும் விளக்கெண்ணெய் ஆகியவற்றை சேர்க்கவும். இது சோப்பிற்கு ஈரப்பத்தத்தைத் தரும். இதை பயன்படுத்தினால் உங்கள் சருமம் ஒருபோதும் வறண்டுபோகாது.

4. பின்னர் கற்றாழை இலையில் இருந்து எடுத்த கூழை சேர்க்கவும். இதில் முக்கியாமாகச் செய்யவேண்டிய ஒன்று கிளறிக்கொண்டேயிருப்பதுதான். ஏனென்றால் அதை அச்சில் வார்க்கும் முன் கெட்டியாக விடக்கூடாது.


5. இந்தக் கலவையில் வாசனை எண்ணையை சேர்க்கவும் (எசன்ஷியல் ஆயில்). தாழம்பூ நறுமணம் நாம் அனைவருக்கும் பிடித்த ஒன்று என்பதால் மூன்று அல்லது நான்கு துளிகள் கூட தாழம்பூ எண்ணெய்யை அதில் விடவும்.

6. நன்கு கிளறியபிறகு இந்த கலவையை அச்சுக்களில் வார்த்து ஐந்து மணி நேரம் கழித்து பிரிட்ஜில் டீப் பிரீஸ் பகுதியில் வைக்கவும்.

7. இரவுமுழுவதும் அப்படியே விட்டு காலையில் எடுத்தால் உங்கள் இயற்கையான நீங்களே செய்த கற்றாழை சோப் தயார்.
என்ன ட்ரை பண்ணுவீங்களா?

கருத்துரையிடுக Disqus

 
Top