0
Not Getting Sleep? This One Spice Will Cure Insomnia In Just 2 Days!
உங்களால் சமீப காலமாக நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியவில்லையா? இதற்காக எத்தனையோ வழிகளை முயற்சித்தும் உங்களால் இரவில் தூங்கவே முடியவில்லையா? ஆனால் ஒரு அற்புதமான மசாலாப் பொருள் இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு அளிக்கும்.

அது தான் ஜாதிக்காய். பல ஆய்வுகளிலும் ஜாதிக்காய் தூக்கமின்மை பிரச்சனைக்கு உடனடி தீர்வு வழங்குவதாக தெரிய வந்துள்ளது. தூக்கமின்மை ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மன அழுத்தம், கவலை, இடமாற்றம், குறிப்பிட்ட நாள்பட்ட வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பலர் தூக்கமின்மைக்காக மாத்திரைகளை எடுப்பார்கள். ஆனால் தூக்க மாத்திரைகளை எடுத்தால், அது அடிமையாக்கிவிடும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை ஜாதிக்காயை எப்படி உட்கொண்டால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபடலாம் என கொடுத்துள்ளது.


படி #1

படி #1

முதலில் 1-2 நன்கு உலர்ந்த ஜாதிக்காயை எடுத்துக் கொள்ள வேண்டும்.

படி #2

பின் அந்த ஜாதிக்காயை அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கடைகளில் விற்கப்படும் ஜாதிக்காய் பொடியை வாங்கிக் கொள்ளுங்கள்.

பின் அந்த ஜாதிக்காயை அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கடைகளில் விற்கப்படும் ஜாதிக்காய் பொடியை வாங்கிக் கொள்ளுங்கள்.

படி #3

பின்பு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 சிட்டிகை ஜாதிக்காய் பொடியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

படி #4

பின் அதனை ஒரு மூடி கொண்டு 5 நிமிடம் மூடி வைத்து, பின் வடிகட்டி பருக வேண்டும்.

குறிப்பு

இந்த பானத்தை இரவில் தூங்குவதற்கு 4-5 மணிநேரத்திற்கு முன்பே பருகிட வேண்டும்.

இதர நன்மைகள்

ஜாதிக்காய் தூக்க பிரச்சனைகளைப் போக்க உதவுவதோடு, செரிமானத்திற்கும், உடலில் இரத்த ஓட்டத்திற்கும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.

எச்சரிக்கை

தூக்க பிரச்சனைகளுக்கு ஜாதிக்காயை எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். இதனை ஒரு நாளைக்கு மிகவும் குறைவான அளவில் தான் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அது நச்சுமிக்கதாகிவிடும். அதிலும் நாள்பட்ட உடல்நல பிரச்சனைகளைக் கொண்டவர்களாக இருந்தால், மருத்துவரிடம் கலந்தாலோசித்து பின்பே பயன்படுத்த வேண்டும்.

கருத்துரையிடுக Disqus

 
Top