நம்முடைய கவனம் எவ்வாறு சிதறடிக்கப்படுகின்றது. அவ்வாறு சிதறடிக்கும் காரணிகள் எவை? அவற்றை எவ்வாறு எதிர்க்கொள்வது போன்ற பல்வேறு விஷயங்களைப் பற்றி இங்கே விவாதிக்கப்போகின்றோம்.
சமூக ஊடகங்கள்
எவ்வாறு சரி செய்வது: நீங்கள் மிகவும் கவனமாக வேலையில் ஈடு படும் பொழுது சமூக ஊடகங்கள் பக்கம் தலை வைத்து படுக்காதீர்கள்.
கண்டிப்பாக சமூக ஊடகங்களில் உலவ வேண்டும் எனில் அதை உங்களின் ஓய்வு நேரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் கடினமாக இருந்தால் இன்டெர்நெட் இணைப்பை சில மணி நேரத்திற்கு துண்டித்து விடுங்கள்.
கையடக்க தொலைபேசிகள்:
நீங்கள் மிகவும் கவனமாக ஒரு வேலையில் ஈடுபடும்பொழுது மொபைல் போனில் உங்களுக்கு ஒரு அழைப்பு அல்லது ஒரு குறுங்செய்தி வந்தால் உங்களின் கவனம் கண்டிப்பாக சிதறும்.
அதிலும் லோன் வாங்கச் சொல்லி வங்கியிலிருந்து அழைப்பு வந்தால் நீங்கள் கட்டாயம் எரிச்சலின் உச்சத்திற்கு சென்று விடுவீர்கள். எனவே உங்களை கவனம் சிதற வைப்பதில் மொபைல் போன் ஒரு முக்கிய இடம் வகிக்கின்றது.
எவ்வாறு சரி செய்வது:
தேவையற்ற அழைப்புகளை புறந் தள்ளூங்கள். மிகவும் உத்தமமாக உங்களுக்கு வருகின்ற அழைப்புகளை உங்களின் குரலஞ்சலுக்கு அனுப்புங்கள்.
பிறகு உங்களின் வேலை எல்லாம் முடிந்த பிறகு அனைத்து அழைப்புகளையும் ஆராய்ந்து பார்த்து தேவையெனில் திரும்ப நீங்கல்ளே அழைத்திடுங்கன்.
ஒரே சமயத்தில் பல வேலைகள் :
எவ்வாறு சரி செய்வது: நீங்கள் தவறு இல்லாமல் மிகவும் கச்சிதமாக உங்களின் வேலையை முடிக்க வேண்டும் எனில் உங்களின் பல்வேறு வேலைகளை வரிசைப்படி வகைப்படுத்தி அதில் அதிமுக்கியம் வாய்ந்த வேலைகளை உடனே செய்திடுங்கள். முக்கியம் இல்லாத பணிகளை பிறகு கவனித்துக் கொள்ளலாம்.
பல்வேறு மின் அஞ்சல்கள்:
நீங்கள் அவைகளை திறந்து பார்க்கத் தொடங்கினால் உங்களின் வேலை பாதியில் நின்று விடும். ஏனெனில் உங்களின் கவனம் மின் அஞ்சல் செய்திகளுக்கு சென்று விடும். அப்புறம் எவ்வாறு வேலையைத் தொடர்வது.
மன அழுத்தம்:
எவ்வாறு சரி செய்வது: யோகா அல்லது உடற்பயிற்சி போன்ற அழுத்தத்திலிருந்து விடுவிக்கும் நடைமுறைகளைப் பயிலுங்கள். தியானம் உங்களின் மன அழுத்தத்தை போக்கி உங்களின் கவனத்தை அதிகப்படுத்தும்.
கருத்துரையிடுக Facebook Disqus