0


உலகில் சீனாவில் அரிசி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு ஒரு வருடத்தில் சுமார் 200 மில்லியன் டன் அரிசி அறுவடை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி, இங்கு அறுவடை செய்யப்படும் அரிசி உலகின் பல பகுதிகளுக்கும் இறக்குமதி செய்யப்படுகிறது.

சீன பொருட்கள் என்றாலே தரமற்றது என்ற எண்ணம் பலரது மனதில் உள்ளது. இதற்கு அங்கு போலிப் பொருட்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுவதால் தான். குறிப்பாக சீனாவில் உணவுப் பொருட்கள் கூட போலியாக தயாரிக்கப்பட்டு, பல நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
அதில், பிளாஸ்டிக் அரிசி, முட்டைக்கோஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை. சரி, இப்போது அரிசியில் இருக்கும் பிளாஸ்டிக்கை எப்படி கண்டறிவது என்று காண்போம்.


1 டேபிள் ஸ்பூன் அரிசியை குளிர்ந்த நீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். அப்படி ஊற வைக்கும் போது அரிசி பாத்திரத்தின் அடியில் சென்றால், அந்த அரிசி நல்ல அரிசி. அதுவே மேலே மிதந்து கொண்டிருந்தால், அந்த அரிசி பிளாஸ்டிக் அரிசி. எனவே சமைக்கும் முன் அரிசியை ஊற வைத்து, பின்பு பயன்படுத்துங்கள்.

முதலில் நெருப்பை மூட்டி, வாங்கிய அரிசியில் சிறிதை நெருப்பில் போடுங்கள். அப்போது அரிசி எரிந்து, பிளாஸ்டிக் நாற்றம் வீசினால், அந்த அரிசி பிளாஸ்டிக் அரிசியாகும்.

அம்மிக்கல்லில் சிறிது அரிசியை போட்டு, அதனை அரைக்க வேண்டும். அப்போது அது நன்கு பொடியாகி, வெள்ளை நிறத்தில் பவுடரானால், அது நல்ல அரிசி. செயற்கை அரிசியாக இருந்தால், அது மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

உங்கள் வீட்டில் உள்ள அரிசி நல்ல அரிசியா அல்லது செயற்கை அரிசியா என்பதை பூஞ்சை சோதனையின் மூலம் அறியலாம். அதற்கு வீட்டில் உள்ள அரிசியை சமைத்து, பின் அதில் சிறிதை ஒரு பாத்திரத்தில் போட்டு தட்டு கொண்டு மூடி, வெதுவெதுப்பான இடத்தில் வைக்க வேண்டும். அப்படி வைத்து இரண்டு நாட்கள் கழித்து, பார்க்கும் போது, சாதத்தில் பூஞ்சை இருந்தால், அது நல்ல அரிசி சாதம். போலி அரிசியாக இருந்தால், அதில் பூஞ்சை வராது.

கருத்துரையிடுக Disqus

 
Top