0
புனித தலங்களாக மாறிய ஏ.டி.எம்
ஏ.டி.எம் என்ற வார்த்தையை இதுவரை யாராவது கேள்விப்படாமல் இருந்திருப்பார்களா? என்பது சந்தேகமே. அப்படியே கேள்விப்படாமல் இருந்திருந்தாலும் அவர்களும் கடந்த 20 தினங்களில் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பார்கள்.
இப்படிப்பட்ட ஏ.டி.எம் -இன் கதை என்னவென்று சற்று பின்னோக்கி பார்ப்போம்

புனித தலங்களாக மாறிய ஏ.டி.எம்

அனைத்து மதங்களின் புனித தலங்களில் இறைவனைத் தரிசிக்க வரிசையில் நின்றிருப்பதை நாம் பார்த்துள்ளோம். இறைவனால் அதிசயம் நடக்கின்றதோ இல்லையோ நம்முடைய மனதிருப்திக்காக வரிசையில் நின்று வழிபட்டு வருவோம். தற்போது புனித தலங்களைப் போலவே ஏ.டி.எம் மையங்களின் வாசல் முன்பும் கடந்த இரு வாரங்களாக நாத்திகர்களும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் இது ஒரு நவீன புனித தலங்கள் என்றும் சொல்லலாம்.
இந்தியாவில் ஏ.டி.எம் தோன்றியது எப்போது?

இந்தியாவில் ஏ.டி.எம் தோன்றியது எப்போது?

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னால்தான் இந்தியாவில் ஏடிஎம் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. சிட்டி பேங்க் மற்றும் ஹாங்கான் அண்ட் பேங்கிங் கார்ப்பரேஷன் என்று கூறப்படும் HSBC வங்கிகள்தான் முதன்முதலில் கடந்த 1987ஆம் ஆண்டு மும்பையில் முதன்முதலாக ஏ.டி.எம் மையங்களைத் தொடங்கின.
ஆரம்பத்தில் இந்த ஏ.டி.எம் -இல் நாள் ஒன்றுக்கு ஒருவர் ரூ.3000 மட்டுமே எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அது ரூ.25000 முதல் வங்கிகளைப் பொறுத்து எடுத்துக் கொள்ளலாம்.

உலக அளவில் ஏடிஎம்-கள் திறப்பு

உலக அளவில் ஏடிஎம்-கள் திறப்பு

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு உலக அளவில் ஏடிஎம் பிரபலம் அடைந்தது. மேலும் ஏடிஎம்-கள் நவீன டெக்னாலஜி உதவியுடன் அதன் வடிவங்கள் மற்றும் இயங்கும் திறன்கள் அவ்வப்போது மாற்றப்பட்டது. மேலும் ஏடிஎம் கள் மூலம் பணம் மட்டுமின்றி மற்ற பொருட்களையும் வழங்கும் முறையும் பரிசோதனை செய்யப்பட்டது.
அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏடிஎம் மிஷின்களை தயாரிப்பதில் முன்னணி நாடுகளாக இருந்தன. அதன் பின்னர் ஜப்பான் நாடும் இதில் இணைந்து நவீன வகையான ஏடிஎம் மிஷின்களை தயார் செய்து உலகின் பல நாடுகளுக்கு சப்ளை செய்தது.

முதன்முதலில் இயங்கிய ஏடிஎம் மிஷின் எது?

முதன்முதலில் இயங்கிய ஏடிஎம் மிஷின் எது?

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் முதன்முதலில் கடந்த 1967ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி ஏடிஎம் மிஷின் நிறுவப்பட்டு இயக்கப்பட்டது. இதுவே உலகின் முதல் ஏடிஎம் மிஷின் ஆகும். இந்த மிஷினை வடிவமைத்தவர் ஜான் ஷெப்பர்டு என்பவர். இவருடைய தந்தை சிட்டகாங் துறைமுகத்தில் தலைமை பொறியாளராக இருந்தவர். 1925ல் இவர் லண்டனுக்குக் குடிபெயர்ந்தவர்.
இவருடைய முதல் பணி ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் இயந்திரங்களை வடிவமைத்ததுதான். அதன்பின்னர் இவர் செய்த முயற்சியின் விளைவாகத் தோன்றியதுதான் முதல் ஏடிஎம் மிஷின்

ஏ.டி.எம்-இன் அபரீதமான வளர்ச்சி

ஏ.டி.எம்-இன் அபரீதமான வளர்ச்சி

1967ல் அறிமுகம் செய்யப்பட்ட ஏ.டி.எம் மிஷின் மூன்றே வருடங்களில் அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகளில் புகழ் பெற்றது. டெலிபோன் தொழில்நுட்பத்தை இணைத்து அமெரிக்காவில் கடந்த 1970ஆம் ஆண்டுகளில் ஏ.டி.எம் மிஷின்கள் இயங்க ஆரம்பித்தன.
இந்த நாட்களில் அமெரிக்காவில் வரிசையில் நின்று பணம் எடுக்க விரும்பாத அமெரிக்கர்கள் பெரும்பாலும் ஏடிஎம்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். அது அப்படியே இந்தியா உள்படப் பல நாடுகளில் பரவி இன்று அபரீதமான வளர்ச்சியை அடைந்துள்ளது.
வங்கிகளின் வளர்ச்சிக்கு மிக அற்புதமான கண்டுபிடிப்புதான் இந்த ஏ.டி.எம் என அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் பால்வோல்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஏ.டி.எம் மிஷின்கள்

இந்தியாவில் ஏ.டி.எம் மிஷின்கள்

இந்தியாவில் மும்பையில் கடந்த 1987ஆம் ஆண்டு ஏ.டி.எம் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட போதிலும் 1999ஆம் ஆண்டுகளில்தான் இந்தியாவின் பல நகரங்களில் ஏடிஎம் மிஷின்கள் பரவியது. அந்த நேரத்தில் நாடெங்கும் 800 ஏடிஎம்கள் இயக்கப்பட்டன. ஆனால் மிகக்குறுகிய காலத்தில் அந்த எண்ணிக்கை பத்தாயிரமாக உயர்த்தப்பட்டது இந்தியர்கள் இந்த டெக்னாலஜியை விரும்பியதால்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1999ஆம் ஆண்டில் வெறும் ரூ.50 கோடி மட்டுமே ஏ.டி.எம் மூலம் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்தனர். ஆனால் இந்தத் தொகை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து 2003 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 57000 கோடி ரூபாய் ஏடிஎம் மூலம் மக்களுக்கு சப்ளை செய்யப்பட்டது. இந்தியர்கள் மிகப்பெரிய அளவில் ஏ.டி.எம்க்கு மாறிவிட்டனர் என்பதையே இது காட்டுகிறது.

சில புதுமையான ஏ.டி.எம்.கள்

சில புதுமையான ஏ.டி.எம்.கள்

இந்திய ஸ்டேட் பாங்க் கடந்த 2004ஆம் ஆண்டில் கொச்சியில் மிதக்கும் படகில் ஏ.டி.எம் மிஷினை நிறுவி ஒரு புதுமையை செய்தது. அதேபோல் அதே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கடல் மட்டத்தில் இருந்து 16000 அடி உயரமுள்ள லடாக்கிலும் ஏடிஎம் மிஷின்களை நிறுவி அங்கு வாழும் மக்களுக்குக் குறிப்பாக ராணுவ வீரர்களுக்காக உதவி செய்தது.
ஏ.டி.எம்-இல் மேலும் என்னென்ன வசதிகள்

ஏ.டி.எம்-இல் மேலும் என்னென்ன வசதிகள்

ரூபாய் நோட்டுக்களைப் பெறுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த ஏடிஎம்கள் நாளடைவில் வேறு சில பணிகளுக்கும் உதவியது. முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே செயல்பட்டு வந்த ஏடிஎம்கள் பின்னர் பல முக்கிய மொழிகளிலும் இயங்கியது. மேலும் பில்தொகை செலுத்த, டிக்கெட்டுக்கள் எடுக்க மற்றும் ஒருசில பொருளாதார சேவைகளுக்கும் இது உதவியது. கோவில்களுக்குச் செய்யும் நன்கொடைகள் உள்படப் பலவித சேவைகள் இதன் மூலம் தொடர்ந்து வருகிறது.

எதிர்காலத்தில் ஏடிஎம்.இன் தலைவிதி என்ன?

எதிர்காலத்தில் ஏடிஎம்.இன் தலைவிதி என்ன?

எதிர்காலத்தில் ஏடிஎம் இன் பயன்பாடுகள் குறைந்து கொண்டே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் சமீபத்தில் எடுத்த சர்வேயின் படி 17% பேர்களில் இருந்து ஏடிஎம்-ஐ பயன்படுத்துபவர்களின் சதவீதம் 11ஆகக் குறைந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு பெரும்பாலான ஆன்லைன் பரிவர்த்தனைகள்தான் காரணம். பணம் இன்றி ஆன்லைன் மூலம் பெரும்பாலான பண பரிவர்த்தனை தற்போது வழக்கத்தில் உள்ளதால் ரொக்கப்பணத்தின் தேவைக் குறைந்து கொண்டே வருவதாகவும் இதன் காரணமாக ஏ.டி.எம் மிஷின்களின் தேவையும் நாளடைவில் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஏ.டிஎம்கள் தேவை எப்படி?

இந்தியாவில் ஏ.டிஎம்கள் தேவை எப்படி?

என்னதான் ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகமாக இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை ஏ.டி.எம்களின் தேவை இன்னும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. கிராமப் புறங்களில் இன்னும் ஆன்லைன் பரிவர்த்தனையின் விழிப்புணர்வு இல்லாததாலும், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ற ஏ.டி.எம் மிஷின் இல்லாததாலும் இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் ஒருசில ஆண்டுகளில் ஏ.டி.எம் மிஷின்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்றே பொருளாதார வல்லுநர்கள் கணித்துக் கூறியுள்ளனர்

கருத்துரையிடுக Disqus

 
Top