0

இன்றைக்கு பெரிய அளவில் இருக்கும் பல நிறுவனங்களின் பெயர்கள் அதன் ஒரிஜினல் பெயர்களே அல்ல. ஆரம்பித்தபோது வேறு பெயர்களில் ஆரம்பிக்கப்பட்டவை.

யாகூ:இப்போது ''அல்டாப்பா ஐ.என்.சி'' என பெயர் மாற்றப்படலாம் என கூறப்படும் யாகூவின் ஆரம்ப காலப்பெயர் ஜெர்ரீஸ் கைடு டு வேர்ல்ட் வைட் வெப்.
1994-ம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு யுனிவர்சிட்டியில் படிக்கும்போது இதனை உருவாக்கினார். அதன் பின் 1995-ம் ஆண்டு யாகூ என்ற பெயர் மாற்றத்துடன் நிறுவனம் வளரத்துவங்கியது.

கூகுள்:லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரும் ஸ்டான்ஃபோர்டு யுனிவர்சிட்டியில் படிக்கும்போது உருவாக்கிய சர்ச் இன்ஜினின் பேக்ரப். இந்த சர்ச் இன்ஜின் ஸ்டான்ஃபோர்டு யுனிவர்சிட்டியின் சர்வரில் அதிக பயன்பாட்டை எடுத்து கொண்டாதாம். அடுத்த வருடமே கூகுள்.காம் என்ற பெயரில் இணையதளத்தை பதிவு செய்துள்ளது கூகுள். பின்னர் சென்ற வருடம் ஆல்ஃபபெட் என்ற தாய் நிறுவனத்தின் கீழ் கூகுள் இயங்கி வருகிறது.

ஃபேஸ்புக் :ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்களுக்கிடையேயான தொடர்புக்காக உருவாக்கப்பட்டது தான் மார்க் சக்கர்பெர்க்கின் ஃபேஸ்மேஷ், பின்னர் தி ஃபேஸ்புக் டாட் காம் என்று மாற்றப்பட்டது. பின்னர் பல்வேறு வளர்ச்சியை அடைந்துள்ள ஃபேஸ்புக்கின் பெயர் தற்போது ஃபேஸ்புக்.காம் என்ற பெயரிலேயே இயங்கி வருகிறது.

எல்.ஜி:கொரியாவின் லக்கி அண்ட் கோல்ட் ஸ்டார் நிறுவனம் 1947-ம் ஆண்டு துவங்கப்பட்டது. கெமிக்கல் மற்றும் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் 1995-ம் ஆண்டு மேற்கத்திய நாடுகளில் விரிவாக்கம் செய்வதற்காக ''எல்.ஜி'' என்ற பெயருக்கு மாறியது. அதன் கேப்ஷனையும் லைஃப்'ஸ் குட் வைத்தது.

அக்சன்ச்சர்:ஆண்டர்சன் கன்சல்டிங் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம். 2001-ம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக அக்சன்ச்சர் என பெயர் மாற்றப்பட்டது. காரணம் ஆண்டர்சன் வேர்ல்ட்வைட், ஆர்தர் ஆண்டர்சன் ஆகிய நிறுவனங்களின் பிராண்டிங்கில் ஏற்பட்ட குழப்பம் தான் இந்த முடிவுக்கு காரணமாம். .

ஆனால் இந்த நிறுவனங்களுக்கெல்லாம் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இவற்றின் ஒரிஜினல் பெயர்களை விட மாற்றப்பட்ட பெயர்கள் தான் தெறி ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக Disqus

 
Top