நமது தோலின் மூலம் கருவிகளை கட்டுப்படுத்தும் ‘Smart’ Tattoos என்ற புதிய தொழிநுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை MIT Media Lab மற்றும் Microsoft Research ஆகியவை இணைந்து உருவாக்கி வருகிறது.
தோலின் மேல் தற்காலிக டாட்டூஸ்களை ஒட்டி அதனை கொண்டு நமது ஸ்மார்ட்போன், கணனி போன்றவற்றை நாம் கட்டுப்படுத்த முடியும்.
’Duo Skin’ எனப்படும் இந்த முறை மூலம் தோலின் மேற்புறத்தில் கருவிகளை கட்டுப்படுத்தும் தற்காலிக Circuit வரையப்படுகிறது.
இது Sensing Touch Input, Displaying Output மற்றும் Wireless Communication என 3 வகைகளில் உருவாக்கப்படுகிறது. கை, கழுத்து என அழகாகவும் இதை நாம் ஒட்டிக் கொள்ளலாம்.
நமது உடலில் ஏற்படும் மாற்றங்களையும் இது தெளிவாக காட்டுகிறது. இவற்றை நாம் தொட்டு இயக்குவதன் மூலம் நாம் அன்றாடம் கைகளில் வைத்து இயக்கி வரும் கருவிகளை எளிதாக இயக்க முடியும்.
கருத்துரையிடுக Facebook Disqus