தொழில் என்று வந்துவிட்டால் அதில் போட்டிகள் இருக்கும். ஏன் பொறாமைகள் கூட இருக்கும். எதிரிகள் இருக்கும் வரைதான் நம் தவறுகளை நாம் திருத்திக் கொள்ள முடியும். ஆனால் நம் தொழிலில் நம்மை ஏமாற்றுபவர்களை அனுமதித்து விடக்கூடாது.
தொழிலில் போட்டியாளர்களை சமாளிக்கலாம். ஆனால் ஏமாற்றுபவர்கள்தான் இப்போது அதிகரித்துள்ளனர். செய்யும் தொழில் சுத்தம், நேர்மை இருக்க வேண்டும்.
ஆனால் இப்போது போலிகள் உலாவும் இடமாக தொழில்கள் மாறிவிட்டது. இதில் கவனமாக இருக்க வேண்டும்.
எலக்ட்ரிக்கல் தொழில் என்பது அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இதில் தரம் முக்கியமான ஒன்று. இதை தொடர்ந்து செய்து தன் தொழிலில் முன்னணியில் உள்ளார் கோவையை சேர்ந்த திரு.முரளி.
வீடோ... தொழில் நிறுவனமோ... எலக்ட்ரிக்கல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இருப்பினும் விலை குறைவு என்ற நோக்கத்தில் பலர் தரம் குறைவான பொருட்களை விற்பனை செய்கின்றனர். ஆனால் அது நம்மை நம்பி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நாம் செய்யும் துரோகம் ஆகும். அதனால்தான் என் தொழில் எவ்வித போலிகள் மற்றும் தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்வதில்லை என்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளேன்.
தரமான பொருட்கள் விலை சற்றே அதிகமாக இருந்தாலும் நீடித்து உழைக்கும். மீண்டும், மீண்டும் மாற்றும் அவசியம் இருக்காது. அதனால்தான் தரத்தை என்று நிலையாக வைத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
எலக்ட்ரிக்கல் துறையில் நேர்மையோடு தரமான பொருட்களை விற்பனை செய்யும் இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் மதிப்பும், மரியாதையும் உள்ளது. தொடர்புக்கு ...
Gowtham Agencies
+91 99527 77771
muralip777771@gmail.com
கருத்துரையிடுக Facebook Disqus