0

 
 
ஒருவருக்கு புரோட்டீன் என்னும் ஊட்டச்சத்து தான் உடலுக்கு போதிய ஆற்றலை வழங்கி, சுறுசுறுப்புடன் இருக்க உதவுகிறது. மேலும் புரோட்டீன் சத்து தான் தசைகள் மற்றும் திசுக்களை சரிசெய்யவும், புதிதாக உருவாக்கவும் தேவைப்படுகிறது. இருப்பினும் அளவுக்கு அதிகமான புரோட்டீனை அவசியமில்லாமல் எடுத்தால், தேவையில்லாத உடல்நல உபாதைகளால் அவஸ்தைப்படக்கூடும்.

இப்போது நாம் யாரெல்லாம் புரோட்டீன் அதிகம் நிறைந்த டயட்டுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து காண்போம். மேலும் எந்த உணவுகளில் எல்லாம் புரோட்டீன் வளமான அளவில் உள்ளது என்றும் தெரிந்து கொள்வோம்.

சோயா பீன்ஸ், பால், பீன்ஸ், இறைச்சி, கோழி, முட்டை, பருப்பு வகைகள், சீஸ், தயிர், நட்ஸ் போன்றவற்றில் புரோட்டீன் ஏராளமான அளவில் உள்ளது.

 
 
நடுத்தர வயதினர் புரோட்டீனை சற்று அதிகமாக உட்கொள்வதன் மூலம், தசை இழப்பு ஏற்படுவது தடுக்கப்படும். மேலும் இந்த வயது மக்களுக்கு ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம், இதய பிரச்சனைகள் மற்றும் இரத்த சர்க்கரை பிரச்சனைகள் இருப்பதால், மாமிச புரோட்டீன்களுக்கு பதிலாக, தாவர வகை ஹபுரோட்டீன்களை எடுப்பதே சிறந்தது.

 
 
அடுத்து உடல் எடையை குறைக்க முடியாமல் தவிப்பவர்கள், புரோட்டீன் உணவுகளை அதிகம் எடுத்து வந்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதன் காரணமாக கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறையும். இதனால் உடல் எடை குறையும். மேலும் புரோட்டீன் இரத்த சர்க்கரை அளவை நிலையாக வைத்திருக்க உதவும்.

 
 
பாடி பில்டிங்கில் ஈடுபட்டிருக்கும் மக்கள் புரோட்டீன் உணவுகளை அதிகம் உட்கொள்வதன் மூலம், தசைகளின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். மேலும் பாடி பில்டிங் மக்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்வதால், தசைகளில் அதிக காயங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதை சரிசெய்ய, புரோட்டீன் உணவுகள் அவசியம் தேவைப்படும். அதனால் தான் பாடி பில்டிங்கில் உள்ளோர் புரோட்டீன் பவுடரை எடுக்கிறார்கள்.

 
 
கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் எடுக்கும் மக்கள், தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு புரோட்டீன் உணவுகளை அதிகம் எடுக்க வேண்டும். குறிப்பாக இறைச்சி, முட்டை, தாவர வகை புரோட்டீன்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டியது அவசியம்.

கருத்துரையிடுக Disqus

 
Top