0

எஞ்சின் ஆயில் எவ்வளவு அவசியம் அதன் வகைகள் மற்றும் சில விவரங்களை முன்பே பார்த்தோம். இந்த பகிர்வில் சிந்தெடிக் ஆயில் vs மினரல் ஆயில் பற்றி பார்க்கலாம்.

சிந்தெடிக் ஆயில் நன்மைகள்
1. மிக அதிகப்படியான பர்பாமன்ஸ் வெளிப்படுத்தும் ஆயில் ஆகும்.
2. குறைவான கசடுகளை கொண்ட எஞ்சின் ஆயிலாகும்.
3. மிக ஸ்மூத்தாக வாகனம் இயங்க பெரிதும் உதவும்.
4. குறைந்த வெப்பநிலையிலும் பாகுத்தன்மை மாறாமல் இயங்கும் அனைத்து பாகங்களிலும் எளிதில் பயணிக்கும்.
5.நீண்ட இடைவெளியில் ஆயில் மாற்றலாம்.

சிந்தெடிக் ஆயில் குறைகள்
1. விலை மினரல் ஆயிலை விட பன்மடங்கு அதிகம்.
2. அதிக மைலேஜ் தரக்கூடிய வாகனங்களுக்கு பயன்படுத்தாமல் இருப்பது நலம்.
3. பழைய கார்களில் பயன்படுத்தவது சிரமம்
4. குறைந்த செயல்திறன் கொண்ட எஞ்சினில் பயன்படுத்துவது கடினம்.

மினரல் ஆயில் நன்மைகள்
1. விலை மிக குறைவு
2. பாகங்களின் உராய்வினை பெருமளவு குறைக்கும். பல தரப்பட்ட காலநிலையிலும் இயல்பாக செயல்படும்.
3. சிறப்பான மைலேஜ் தரக்கூடிய கார்கள் பயன்படுத்தலாம்.
4. பழைய கார்களிலும் குறைந்த செயல்திறன் கொண்ட கார்களில் பயன்படுத்தலாம்.

மினரல் ஆயில் குறைகள்
1. குறைவான இடைவெளியில் ஆயில் மாற்ற வேண்டும்.
2. சில காலநிலையில் தன்னுடைய பாகுத்தன்மையை இழக்கும். எந்த ஆயில் பயன்படுத்தலாம் என்பதில் நிறைகளையும் குறைகளையும் வைத்து முடிவு செய்யலாம். குறைவான நகர்ப்புற பயணம் அல்லது தொடர்ந்து தினமும் குறிப்பிட்ட தூரம் பயன்படுத்துபவர்கள் மினரல் ஆயில் முயற்ச்சிக்கலாம். அதிகப்படியான நெடுஞ்சாலை பயணம் நெடுந்தொலைவு பயணம் பெர்பாமன்ஸ் பெற விரும்புபவர்கள் சிந்தெடிக் ஆயில் பயன்படுத்தலாம். ஆனால் உங்கள் பட்ஜெட்டை பதம் பார்க்கும்.

கருத்துரையிடுக Disqus

 
Top