0
பணிக்காலம் முடிந்தபின் பி.எப். பணம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பானவற்றை பெறுவதற்கு இனி 20 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை, மாறாகமே மாதத்துக்குபின், ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்து 3 மணிநேரத்துக்குள் பணப்பலன்களை பெறமுடியும்.

அனைத்து பி.எப். அலுவலங்களையும் ஒரே சர்வரில் இணைத்து, விரைவாக பணப்பலன்களை கிடைக்க இ.பி.எப்.ஓ. அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது.

பி.எப். பணம் பெறுதல், ஓய்வூதியம் பெறுதல், குழு காப்பீடு உள்ளிட்ட பலன்களை பெறுவதற்காக ஏறக்குறைய ஒரு கோடி பேரின் விண்ணப்பங்கள் இப்போது, பணியாளர்கள் மூலமே  இ.பி.எப்.ஓ. அமைப்பு பரிசீலித்து வருகிறது.

இதை முழுமையாக கணினி முறையில் மாற்றப்பட்டு, விரைவாக ஓய்வூதியப் பலன்களை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து இ.பி.எப்.ஓ. அமைப்பின் ஆணையர் வி.பி. ஜோய் கூறுகையில், “ நாட்டில் உள்ள அனைத்து பி.எப். அலுவலங்களையும் மத்திய பி.எப். அலுவலகத்தின் சர்வரோடு இணைக்கும் முயற்சி நடந்து வருகிறது.

இதன் மூலம், பி.எப். பணம் பெறுதல், பென்சன் பெறுதல் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்து பெறும் முறையை கொண்டு வர இருக்கிறோம்.

இதற்காக அடுத்த 2 மாதத்துக்குள் அனைத்து பி.எப். அலுவலங்களும் தலைமை அலுவலகத்தின் சர்வரோடு இணைக்கப்படும்.

அதன்பின் இந்த வசதிகள் கிடைத்தும். இதன்மூலம், ஒரு நபர் பி.எப். பணம் பெறுதல், ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெற ஆன்-லைனில் விண்ணப்பம் செய்த 3 மணி நேரத்துக்குள் பணப்பலன்களைப் பெற முடியும்.

இப்போது ஏறக்குறைய கையால் விண்ணப்பம் எழுதிக்கொடுத்தால், அதை பரிசீலித்து மத்திய அலுவலகத்துக்கு அனுப்பிவைத்து, பணப்பலன்கள் கிடைத்த ஏறக்குறைய 20 நாட்கள் ஆகும். அது இனி தவிர்க்கப்படும்.

சோதனை முயற்சியாக இப்போது 50 அலுவலகங்கள் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது'' எனத் தெரிவித்தார்.

இதற்காக பி.எப். அமைப்பில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களின் ஆதார் எண்ணை மார்ச் 31-ந் தேதிக்குள் அளிக்க வேண்டும் என சமீபத்தில் உத்தரவிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக Disqus

 
Top