0
Image result for FoldiMate
துணிகளை இஸ்திரி போட்டு அழகாக மடித்து கொடுப்பதற்கு ஒரு கருவி
உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஃபோல்டிமேட் எனப்படும் இக்கருவியின் வெளிப்பக்கம் துணிகளை வரிசையாக மாட்டி வைக்கவேண்டும். பட்டனை அழுத்தினால் ஒவ்வொரு துணியையும் வரிசையாக உள்ளே இழுத்துக்கொள்ளும். உட்புறத்தில் ரோபோ கைகள் இருக்கின்றன. துணியை வைத்து சூடான நீராவியைச் செலுத்தி அழுத்துகின்றன.



இஸ்திரி போட்டவுடன் ரோபோ கைகள் வேகமாக துணியை மடித்துக் கீழே அனுப்பி விடுகின்றன. ஒரு துணியை இஸ்திரி போட்டு மடிக்க ஒரு நிமிடத்துக்கு குறைவான நேரத்தையே எடுத்துக்கொள்கிறது. ஒரு தடவைக்கு 15 முதல் 20 துணிகள் வரை அடுக்கலாம்.

பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு வீட்டில் எளிதாகப் பயன்படுத்தும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போல்டிமேட் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது

கருத்துரையிடுக Disqus

 
Top