0

 
 
இணையமில்லா வாழ்வு இங்கு சாத்தியமே இல்லை என்கிற சூழலில் நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.அந்த அளவினுக்கு இணையம் நமது வாழ்விலிருந்து நீக்கவியலாத ஒரு காரணியாக மாறிவிட்டது.

இதற்கான காரணம் இணையத்தை மையப்படுத்தியே நமது வாழ்வின் அத்தியாவசியமான செயல்கள் அனைத்தும் அமைந்துவிட்டிருக்கிற காரணத்தால் இணையம் நமது வாழ்வினுடே நீக்கவியலாத அளவினுக்கு ஊடுருவிப்போய்விட்டது.

அத்தகைய,இணையம் இல்லாத அல்லது இணையத்தினை பயன்படுத்தவியலாத சூழல் ஒன்றில் நீங்கள் என்றேனும் சிக்கிக்கொண்டால் எப்படி இருக்குமென நினைத்துப்பார்த்திருக்கிறீர்களா எப்போதாவது.அப்படி இணையத்தை உங்கள் ஸ்மார்ட்போன் வழியாக தொடர்புகொள்ள இயலாத நேரங்களில் உங்கள் லேப்டாப்பினையே வை-பை ஹாட்ஸ்பாட் ஆக பயன்படுத்தலாம்.எப்படி என்பது குறித்த தகவல்கள் கீழே.

 
 
இப்போது மக்கள் வாழ்வதற்கு தேவையான உணவு,நீர்,காற்று உள்ளிட்ட ஏதுமில்லாமல் கூட இருந்துவிடுவார்கள் போல.ஆனால் இணையம் இல்லாமல் இங்கு ஓர் நொடி கூட இருக்கமாட்டார்கள் போல.காரணம் மனிதர்கள் வாழ்வதற்கு தேவையான உணவு உள்ளிட்ட சில அடிப்படை விடயங்கள் தவிர மற்ற அனைத்தும் இணையம் தன்னகத்தே கொண்டுள்ளதே காரணம் ஆகும்.

 
 
உலகின் எங்கோ ஓரிடத்தில் உள்ளவரைக்கூட எளிதில் தொடர்புகொள்ளக்கூடிய அளவினுக்கு இணையம் அத்துணை வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.மேலும் குழந்தை வளர்ப்பு,சமையல் குறிப்பு உள்ளிட்ட தகவல்கள் மட்டுமல்ல செயல்முறை விளக்கங்களுடன் கூடிய விடீயோக்களும் உள்ளன.இதனால் நமக்கு தேவையான விடயங்கள் உடனடியாக இணையம் வழியாக எல்லாவற்றையும் அறிந்துக்கொள்ளலாம்.மின் நூல்கள்,வர்த்தகம்,பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட எல்லாமும் இதில் அடங்கும்.

 
 
நமது வாழ்வின் தவிர்க்கவியலாத இணையத்தினை எப்போதாவது தொடர்புகொள்ள இயலாத சூழல் நேர்ந்தாலே நம்மவர்கள் துடித்துப்போவார்கள்.அவர்களின் ஆறாம் விரலாய் ஸ்மார்ட்போன்களும் அவற்றின் இன்றியமையாத ஒன்றை இணையமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
வேறு எந்த வகையிலும் இணையத்தினை உபயோகிக்கவியலாத சூழலில் நமது லேப்டாப்பை அதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.அட இது சூப்பருள்ள என்கிறீர்களா.உங்களுக்காகத்தான் இந்த பதிவு.இதுகுறித்த மேலதிகதகவல்களை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

 
 
சில ஆப்ஸ்கள் மூலம் உங்கள் லேப்டாப்பை வைபை யாக மாற்றி பயன்படுத்தலாம்.அதற்கு முன் உங்கள் லேப்டாப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கிற விண்டோஸ் இதற்கு ஏற்றதா என்பதனை தெரிந்துகொள்ளுங்கள்.விண்டோஸ் 7,8 மற்றும் 8.1 ஆகியவற்றில் நாம் இந்த வசதியினை பயன்படுத்தலாம்.

 
 
1.கனெக்ட்டிபை என்கிற செயலியை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.அதன் பிறகு கணினியை ரிஸ்டார்ட் செய்துகொள்ளுங்கள்.

2.ரீஸ்டார்ட் செய்த பிறகு கணினி இணையத்துடன் கனெக்ட் ஆகிறதா என சோதித்துக்கொள்ளுங்கள்.

3.இப்போது கனெக்ட்டிபை செயலியை திறந்து செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று வை-பை என்கிற வசதியினை உருவாக்கிக்கொள்ளுங்கள்
4.இப்போது உங்களுக்கான கடவு எண்ணை உருவாக்கிக்கொண்டு பிறருடன் டேட்டா வினை பகிர்ந்துகொள்ளலாம்.அதாவது வை-பை ஆக பயன்படுத்தலாம்.

 
 
மேலே குறிப்பித்தது போலவே இணைய வசதி இல்லாத நேரங்களில் யுஎஸ் எக்ஸ் மேக்புக்கினையும் வைபை ஹாட்ஸ்பாட்டாக பயன்படுத்தலாம்.இதன் மூலமாக உங்கள் நண்பர்களுடன் டேட்டாவினை பகிர்ந்து இணையத்தினை பயன்படுத்தி மகிழ்ந்திடுங்கள்.

 
 
இந்த வசதியினை பயன்படுத்த சிஸ்டம் ஃபிரெபரென்ஸ் என்கிற வசதியினை தேர்ந்தெடுத்து ஷேரிங்>இன்டர்நெட் ஷேரிங் என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுப்பதன் மூலமாக நாம் இதனை பயன்படுத்தலாம்.

 
 
இன்டர்நெட் ஷேரிங் என்கிற வசதியினை செலக்ட் செய்த பின் ஈதர்நெட் என்கிற ஆப்ஷன் மூலம் நாம் வையர் வழியான கருவிகளுக்கு இணைய வசதியினை பகிர்ந்துகொள்ளலாம்.மேலும் யுஎஸ்பி ஈதர்நெட் என்ற வசதியின் மூலம் யுஎஸ்பி உள்ளிட பிற கருவிகளுக்கும் பகிர்ந்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top