0

Image result for போளி

தேவையான பொருட்கள் :

மைதா - 11/4 கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
நல்லெண்ணெய் - 1/4 கப்
தண்ணிர் - மாவு பிசைய
நெய் - சுடுவதற்கு

பூரணம் செய்ய :

கடலைப் பருப்பு - 1 கப்
துறுவிய வெல்லம் - 11/4 கப்
ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை

செய்முறை :

மைதா மாவை சலித்துக் கொண்டு அத்துடன் மஞ்சள் தூள், உப்பு கலந்து, தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு போல பிசையவும்.
1/2 மணி நேரம் மூடிவைக்கவும்.
அத்துடன் நல்லெண்ணெய் சேர்த்து, எண்ணெய் முழுவதும் மாவுடன் உறிஞ்சிக் கொள்ளும் வரை பிசையவும்.

மேலும் 2 மணி நேரம் மாவை அப்படியே மூடி வைக்கவும்.

கடலைப் பருப்பில் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் வெயிட் வைத்தபின் 1 விசில் சத்தம் வரும்வரை வேக வைக்கவும்.

வெந்தபிறகு தண்ணீரை முழுவதும் வடித்துவிட்டு துறுவிய வெல்லம், ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் (அல்லது கிரைண்டரில்) மெத்தென்று அரைக்கவும்.

அரைத்த மாவு தளர்த்தியாக இருந்தால் வெறும் வாணலியில் போட்டு சூடாக்கி விடாமல் கிளறி சிறிது கெட்டிப்பட்டதும் இறக்கவும்.

பூரணத்தை எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக செய்யவும்.

பிசைந்த மாவிலிருந்து சிறிய உருண்டைகள் செய்து கைகளால் தட்டி சிறிய சப்பாத்தி போல அதன் மேல் பூரண உருண்டை வைத்து மூடி மறுபடியும் உருண்டை செய்யவும்.

மேலும், கீழும் எண்ணெய் தடவிய கனமான பாலிதீன் ஷீட்டின் மத்தியில் உருண்டையை வைத்து மேலே சப்பாத்தி செய்வது போல் மெல்லிய போளியை தயாரிக்கவும்.

மேலிருக்கும் ஷீட்டை எடுத்துவிட்டு, நெய் விட்ட தோசைகல்லின் மேல் ஷீட்டிலிருந்து போளியைப் போட்டு, ஷீட்டை கவனமாக சீக்கிரம் எடுக்கவும்.

சுற்றிலும் சிறிது நெய் விடவும்.

திருப்பிப் போட்டு இருபுறமும் பதமாக வந்ததும் எடுத்து ஒரு அகலத் தட்டில் வைக்கவும்.

ஒவ்வொரு போளியையும் சுட்டபிறகு ஒன்றின் மேல் ஒன்றாக வைக்காமல், தனித் தனியே வைக்கவும்.

நன்றாக சூடு ஆறிய பிறகு அகலமான டப்பாவில் அடுக்கி வைக்கலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top