0


உங்கள் கம்ப்யூட்டரின் டீபால்ட் ட்ரைவ் ஏன் சி (C) என்பதில் இருந்து ஆரம்பித்து.? ஏன் டி (D) மற்றும் இ (E) என்று விரிவடைகிறது.? ஏன் ஏ (A) மற்றும் பி (B) ஆகிய டீபால்ட் ட்ரைவ்கள் இல்லை என்று எப்போவதாவது எண்ணியது உண்டா.?நீங்களொரு ஆரம்பகால் தலைமுறை கம்ப்யூட்டர் பயனாளியாகவோ அல்லாது ஒரு டெக் மேதாவியாகவோ இருந்தால், ஒருவேளை இந்த கேள்விக்கு உங்களிடம் ஏற்கனவே விடை இருக்கலாம். ஆனால் உங்களுக்கு கணினி சார்ந்த ஆர்வம் அதிக அளவில் இல்லை என்றால், இந்த கேள்விக்கு நிச்சயமாக உங்களிடம் பதில் இருக்காது.

ஏன்.?.?
விண்டோஸ் கம்ப்யூட்டரில் நீங்கள் ஒரு யூஎஸ்பியை பொருத்தினால் கூட எப் (F) மற்றும் ஜி (G) என்று தான் நீளுமே தவிர ஏன் ஏ (A) மற்றும் பி (B) ஆகிய ட்ரைவ் உருவாக்குவதில்லை.? இதோ அதற்கான விடை.!

உள்சேமிப்பு
முந்தைய கணினிகள் உருவாக்கப்பட்ட போது, அவைகள் ஒரு பாரிய அளவிலான உள்சேமிப்பு சாதனங்களுடன் வரவில்லை. மாறாக அவைகள் பிளாப்பி ட்ரைவ் டிஸ்க் உடன் வெளியானது.

இரண்டு அளவுகளில்
அந்த டிஸ்க்குகள் துவக்கத்தில் ஏ (A) என்று அழைக்கப்பட்டன மற்றும் அவைகள் இரண்டு அளவுகளில் அதாவது 5 1/4 இன்ச் மற்றும் 3 1/2 இன்ச் ஆகிய அளவுகளில் வந்தது.

பெயரிடப்பட்டு விட்டதால்
இந்த இரண்டு வகையான பிளாப்பி டிஸ்க் ட்ரைவ்களும் முறையே ஏ (A) மற்றும் பி (B) என பெயரிடப்பட்டு விட்டதால் அதற்கு அடுத்து வெளியான டீபால்ட் ட்ரைவ்கள் ஆனதிற்கு முறையே சி(C), டி (D) மற்றும் இ (E) என பெயரிடப்பட்டன.

பெயர்கள் மட்டும் நிலைக்க
1980களில் பின்னரே ஹார்டு டிரைவ்கள் நிலைப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்தது. அதன்பின்னர் படிப்படியாக, பிளாப்பி டிஸ்க் ட்ரைவ்கள் கைவிடப்பட்டன மற்றும் ஆக அவைகளின் பெயர்கள் மட்டும் நிலைக்க சி ட்ரைவ்களில் இருந்து டீபால்ட் டிரைவ்கள் வெளியாகத் தொடங்கின.

கருத்துரையிடுக Disqus

 
Top