0
Related image
நீங்கள் சைவமா அசைவமா?
உங்கள் உணவுப்பழக்கத்துக்குள் நான் வரவில்லை. ஆனால் தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளன.

இன்று எந்த அசைவ உணவகத்துக்கு சென்றாலும், மற்ற மாமிசங்கள் விற்கும் இடங்களுக்கு சென்றாலும், ஒரு அறிவிப்பு பலகையை பார்த்து இருப்பீர்கள். " ஹலால் செய்யப்பட்டது" என்று!

"ஹலால்" தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாத ஒன்று என்பது நம்மில் பலருக்கு தெரியாது. தமிழர்கள் புலால் உண்ணும் முறைக்கு "வெட்டு" என்று பெயர். "ஹலால்" தமிழர்களுக்கு உரியது இல்லை.

"ஹலால்" என்றால் என்ன? ஒரு விலங்கை, அதன் முன்னங்கழுத்தின் ரத்த நாளங்களை சிறிதாக அறுத்து, அதன் ரத்தம் முழுக்க வடிந்து அதனை இறக்க விடுவது! இந்த முறையில் கொல்லப்படும் விலங்கு உடனே சாகாது. அது மரண அவஸ்தையை முழுமையாக அனுபவித்து, துடித்து துடித்து சாகும். அதற்கு வலி தெரிய வேண்டும் என்பதற்காக தண்டுவடத்தை அறுபடாமல் பார்த்துக்கொள்வர்.

தமிழர்கள் பெரும்பாலும் அஹிம்சை விரும்பவர்கள்

சைவம் மட்டுமே உத்தமம். ஆனாலும் புலால் உணவும் மறுக்கப்படவில்லை.

ஆனால் தமிழர்கள் பழக்கவழக்கங்களில் வலி ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ள படாத ஒன்று. கோயில்களில் பலி கொடுக்கும் போது கூட ஒரே வெட்டில் விலங்கை கொன்று விட வேண்டும் என்பது தான் முறை. அதாவது அந்த விலங்கிற்கு தான் வெட்டப்பட்ட வலி தெரிவதற்கு முன்பே மரணம் எட்டி விடும். ஓங்கி வெட்டும் போது முதலில் தண்டுவடம் வெட்டுப்படும்படி பின்னங்கழுத்தில் வெட்டுவதால் உடனடி, மற்றும் வலி இல்லா மரணம். இந்த முறைக்கு "வெட்டு" என்று பெயர்.

ஒரு உயிரை கொள்வது பாவம் அதிலும் அதை வேதனைக்கு உட்படுத்தி கொள்வது அதைவிட பாவம்.

அதனால் யாரும் ஹலால் உணவை வாங்க வேண்டாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top